சனி, 8 அக்டோபர், 2011

Natteri swamy's tele -upanyasam on 3-10-2011

நாட்டேரி ஸ்வாமி போட வாரம் ஆரம்பித்த ஸ்ரீ தேசிகன் திநசர்யாவை இந்த வாரமும் தொடர்கிறார். ஆசார்யனின் தினசரி அநுஷ்டானங்களை அவர் குமாரர் நயினாராசார்யர் அற்புதமாய் எழுதியதை நாட்டேரி ஸ்வாமி நாமும் அநுபவிக்கும்படி உபந்யஸிப்பதை டவுண்லோட் செய்து கொள்ள


http://www.mediafire.com/?9qb11g6o1ururrg

வெள்ளி, 7 அக்டோபர், 2011

சீர்பாதக்காரர்களால் பெற்ற பாக்யம்.

DSC03204
திருவீதிப் புறப்பாட்டுக்குத் தயாராய்!
முன்னழகும், பின்னழகும்!
DSC03205ஸ்வாமி தேசிகனின் 744வது திருவவதார தினம் திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் சென்ற வருடங்களைப் போலவே மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலையில் திருவீதிப் DSC03211புறப்பாட்டுக்குப் பின் ஸ்வாமி தேசிகனும் அவரது ஆராத்ய மூர்த்தியான ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவரும் வெகு விசேஷமான திருமஞ்சனம் கண்டருளினர். அதன்பின் நடந்த பெரிய சாத்துமுறை சமயத்தில், ஸ்ரீ ஆதிஜெகன்னாதப் பெருமாள், தாயார் அனுக்ரஹித்து அனுப்பி வைத்த மாலை, தீர்த்தம், பரிவட்டம், தளிகை ஆகியவற்றை கோவில் அதிகாரி ஸ்ரீ கண்ணன் தலைமையில் அனைத்து அர்ச்சக, பரிசாரக கைங்கர்யபரர்களும் கொணர்ந்து ஸ்ரீ தேசிகனுக்கு சமர்ப்பித்தனர். சாற்றுமுறை கோஷ்டிக்குப் பின் சுமார் 100 பேர்கள் அந்வயித்த அலங்கார ததீயாரதனம் நடந்தது. இவை பற்றியெல்லாம் சென்ற வருடங்களிலே விரிவாக எழுதி வீடியோக்களும் இணைத்துள்ளேன். அதனால் அவை பற்றி இந்த வருடமும் மீண்டும் எழுதவில்லை.
குறிப்பிட வேண்டியவை இரண்டு உண்டு. உத்ஸவங்கள் சிறக்க வேண்டுமென்றால், பாராயணம் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையிலே நல்ல அதிகாரிகளான சென்னை ஸ்ரீ J.S. வாசன் ஸ்வாமியும், சென்னை ஸ்ரீ ஆராவமுதன் ஸ்வாமியும் மிக அழகாக பிரபந்த தேசிகப் பிரபந்த கைங்கர்யங்களையும், வடுவூர் பாடசாலை வித்யார்த்திகள் ராகவனும், பாலாஜியும் வேத பாராயண கைங்கர்யங்களையும் ஆத்மார்த்தமாகச் செய்து மகிழ்வித்தனர். ஸ்ரீ வாசன் ஸ்வாமிக்கு திருப்புல்லாணி பூர்வீகம். வங்கியின் மிக உயர்ந்த பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். ஸௌலப்யம் என்பதற்கு அகராதிகள் தேட வேண்டாம். அவருடன் பழகினால் போதும். அர்த்தம் புரிந்து விடும். அடியேன் மீது அளவற்ற பிரியம், திருப்புல்லாணி ஈடுபாடு இவை காரணமாக அவராகவே ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டு சிறப்பிப்பது கடந்த பல வருடங்களாக வாடிக்கையான ஒன்று.
அதே போல் சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் ஸ்வாமியின் கைங்கர்யங்களும் அபாரமானவை. மூன்று நாட்களும் அவர் ஆசையுடன் தேசிகனுக்குச் செய்த கைங்கர்யங்களால் உத்ஸவம் எல்லாரும் மகிழும் வண்ணம் அமைந்தது.
அடியேனை பெரும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய மற்றொன்று.  அடியேன் பின்தொடரும் பல வலைப் பக்கங்களில் கண்ணன் பாட்டுக்கள் என்னை மிக மயக்கிச் சொக்க வைப்பது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த புல்லாணிப் பக்கங்களைத் தொடர்ந்து படிப்பவர்கள் சிலருக்கு ஞாபகமிருக்கலாம். இரண்டு மூன்று இளைஞர்களாக இணைந்து நடத்தும் அந்தத் தளத்தில் அடியேனைப் போன்று வளவள எழுத்தெல்லாம் இருக்காது. இன்றைய இளைஞர்களை எப்படிக் கவரலாம் என்பதில் அவர்கள் வித்தகர்கள். மிக கனமான சம்ப்ரதாய விஷயங்களைத் தான் அவர்கள் எழுகிறார்கள். ஆனால் அவர்கள் ஸ்டைல் காரணமாக அவர்களுக்கு ரசிகர்கள் அதிலும் 90%க்கும் மேல் இளைஞர் பட்டாளம்--ஏராளம். அந்த http://kannansongs.blogspot.com ன் ஆசிரியர்களில் ஒருவரான திரு ராகவன் எதிர்பாராமல் வந்து கலந்து கொண்டு மகிழ்வித்தார். இதுதான் அவரைச் சந்திக்கும் முதல் முறை.
காதுக்கு மிக இனிமையாக, கருத்துச் செறிவுள்ள ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவ, ஸ்வாமி தேசிகன் திருமஞ்சனக் கட்டியங்களை ஸ்ரீ வாசன் ஸ்வாமி கேட்பவர் எல்லாரும் நெஞ்சு நெகிழ்ந்து பரவசமாகும் வண்ணம் அனுபவித்து ஸேவித்த ஒரு பகுதி மட்டும் இங்கு வீடியோவாக! 

சீர்பாதக் காரர்கள் என்ன செய்தார்கள்? அவர்களால் பெற்ற பாக்யம் என்ன? காலை  7மணிக்குப் புறப்பாடு என்று ஏற்பாடு. அன்று விஜயதசமி என்பதால், பெருமாள் குதிரை வாகனப் புறப்பாடும் உண்டு. தேசிகன் புறப்பாடு ஆகி, திருமஞ்சனங்கள், சாத்துபடி ஆகி பெரிய கோவில் மரியாதை வரவேண்டும். எல்லாம் கோவில் உச்சி காலத்துக்குள் – 12.30க்குள் – முடிய வேண்டும். ஆனால், ஏற்றுக் கொண்ட சீர்பாதக்காரர்கள் எங்கோ சென்று விட, 9மணி வரையும் வராத நிலையில் தாமதம் தவிர்க்க இருப்பவர்களே திருவீதிப் புறப்பாட்டுக்கு ஏளப் பண்ணுவது என்று முடிவாகி, இந்த 61 வருடங்களில், முதல் முறையாய் அந்த பாக்யம் கிடைத்தது.  கண்டிப்பாய் அடியேனின் பாவங்களில் பெரும் பகுதி கழிந்திருக்கும். இதுவும் ஆசார்யன் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹமே.


அனகாபுத்தூர் (வழுத்தூர்) ரங்காச்சாரி ஸ்வாமி சமர்ப்பித்த யஜ்நோபவீதங்களுடன்

















திருவீதிப் புறப்பாடு, திருமஞ்சனத்தில் சில காட்சிகள் காண




புதன், 5 அக்டோபர், 2011

வெண்ணெய் உண்ட பெருமாயனாய் எங்கள் தேசிகன்

திருப்புல்லாணியில் நடந்து வரும் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று காலையில் சாற்று முறைக்குப் பின், ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவ, ஸ்ரீ சுதர்சன, ஸ்ரீ தனவந்த்ரி ஹோமங்கள் நடைபெற்றன.
மாலையில், ஸ்வாமி தேசிகன் வெண்ணெய் தாழி கண்ணனாக, ஸேவை ஸாதித்தார். சென்னை நங்கநல்லூர் ரங்கராஜனின் தந்தை திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் அய்யங்கார் பல காலம் இந்த தேசிகன் சன்னிதியில் ஆராதகராய் சிறப்பாய் கைங்கர்யம் செய்தவர். அந்த அனுபவத்திலே, ரங்கராஜன் ஸ்வாமியும் மிகுந்த ஈடுபாட்டுடன், மிக அழகாக தேசிகனுக்கு சாத்துப்படி செய்திருந்தார். ஸ்வாமி தேசிகன் அடியேனுடைய தாத்தா நாளில் தன்னை இப்படி விதவிதமாக அனுபவிக்க வைத்து மகிழ்ந்திருந்தவர். சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின் இன்று எங்களையும் மகிழ்வித்தார்.
ஆச்ரம சிஷ்யர். ஒரு அற்புதமான மனிதர். அனகாபுத்தூரில் வாழ்கின்ற வழுத்தூர் ரங்காச்சாரி ஸ்வாமி. இவரைப் பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம். அவ்வளவு அசாதாரண குணங்கள் நிரம்பிய அபூர்வமான நல்லவர். இப்போதைக்கு சுருக்கமாக, இவர் க்ருஹம் ஒரு புத்தகக் கடல். எந்த சம்பிரதாய விஷயமான நூல் என்றாலும் விவரங்கள் இவரிடம் கிடைக்கும். விவரமென்றால், அட்டை முதல் அட்டை வரை நூலின் பெயரைச் சொன்னால் எல்லாவற்றையும் சில நொடிகளில் சொல்ல வல்லவர்.  இவர் எத்தனை புத்தகம் படித்திருக்கிறாரோ அத்தனையும் அந்த மாமியும் படித்திருக்கிறார். ஸ்ரீ ரங்கநாத பாதுகா இதழ்கள் digitalse பண்ணப் பட்டபோது, இவருடைய பங்களிப்பு மிக அதிகம். ஆரம்ப காலத்தில் வெளியான பழைய இதழ்கள் பலவற்றை எங்கெங்கோ தேடிப் பெற்றுக் கொடுத்து மகிழ்ந்தவர். இந்த ஸ்வாமி திருப்புல்லாணி ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவர், தேசிகன் மூலவர் உத்ஸவர்களுக்கு வெள்ளி யஜ்நோபவீதம் செய்து கொடுத்து விட்டிருக்கிறாஃ. நாளை அவற்றை ஆசார்யர்கள் அணிந்து மகிழப் போகிறார்கள்.
DSC03165DSC03166DSC03167DSC03168DSC03169DSC03170 
வெண்ணெய் தாழி படங்கள் இங்கே.
DSC03184
 கண்ணாடியில் பின்னழகு
DSC03181

பின்னழகும் திருப்பாத கமலங்களும்
DSC03182

DSC03188


ஒரு சிறு வீடியோ இங்கு


தேசிகனே ! ஆடீர் ஊசல்!


இருகலையு மொருகலை யென்றாடிரூசல்
       ஈரடியு மோரடி யென்றாடிரூசல்
இருவிழியு மொருவிழி யென்றாடிரூசல்
        ஈரொளியு மோரொளி யென்றாடிரூசல்
இருவழியு மொருவழி யென்றாடிரூசல்
         ஈருலகு மோருலகென் றாடிரூசல்
பருமறையாம் திருமலையே ஆடிரூசல்
          பொறைபுனையும் பரமகுரு ஆடிரூசல்
.  (ஆர்.கேசவய்யங்கார்)


திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் திருக்குடந்தை தேசிகன் அவதார தினத்தன்று ஸ்ரீ தேசிகன் ஊஞ்சல் காட்சி.


நிறைவேறியது ஆசை!

திருப்புல்லாணி ஆச்ரமத்தில் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவம் இன்று  திருக்குடந்தை தேசிகனின் அவதார தினத்தில் தொடங்கியது. ஸ்வாமி தேசிகனுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலையில் திருக்குடந்தை தேசிகன் செய்த “தேசிக சஹஸ்ரநாம”த்தைக் கொண்டு ஸ்வாமி தேசிகனுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனையும் நடந்தது. காலையில் திருமஞ்சனத்துக்குப் பின் நடந்த சாற்றுமுறை கோஷ்டியில் ஸ்ரீ ஆதி ஜகன்னாதப் பெருமாள் ஆலய அர்ச்சகர்கள், ஸ்தானிகர், கைங்கர்யபரர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மூன்று நாள் உத்ஸவமாக ஆரம்பித்த பிறகு, தேசிக சஹஸ்ரநாம அர்ச்சனை, தொடர்ந்து நடந்து வருகிறது.

அது சரி! 743லிலும் இதைத்தான் எழுதினாய். 742ல் போய்ப்பார்த்தால் அதிலும் மாற்றமில்லை. என்ன ஆசை? எப்படி நிறைவேறியது? அதைச் சொல்லாமல் ……

உத்ஸவத்தை சிறப்பிக்க வந்திருக்கும் திரு J.S. வாசன் ஸ்வாமி, காலை திருமஞ்சனம் நடக்கும்போது, , மாலையில் தேசிகனுக்கு ஊஞ்சல் போடலாமே என்றார்.  தாத்தா நாளில் நடந்திருக்கிறது. அதன்பின் நின்று விட்டது. அடியேனுக்கும் ஆசைதான். ஆனால் தேசிகன் ஆடுமளவுக்கு ஊஞ்சல் இல்லையே  என்று நான் சொன்னதும், சரி அடுத்த வருடமாவது தயார் செய்யலாம் என்று அவர் சொன்னார். ஆனால், தேசிகனே திருவுளப் பட்டதால்தான் அப்படி அவர் சொன்னால் என்பது அடியேனுக்கு அப்போது புரியவில்லை. ததீயாராதனத்துக்குப் பின் மாலையில் அடியேன் மர மண்டையில் திடீரென்று ஒரு பல்ப் எரிந்தது. அதை எங்கள் ஆராதகர் ஸ்ரீதரனிடமும், சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் ஸ்வாமியிடமும் தெரிவித்தேன். அந்த யோசனையை ஏற்று, சில நிமிடங்களில், தேசிகன் புறப்பாடு கண்டருளும் விமான மண்டபத்தை மாற்றி அமைத்து ஊஞ்சலையும் ரெடி பண்ணி ஸ்வாமி தேசிகனை ஏளப் பண்ணி அவரை மகிழ்வித்து விட்டார்கள். ஆக, தாத்தா நாளுக்குப் பின், அதாவது சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின்

“திருவாழத் திருவாழு மார்பர்வாழத்
        திருமார்பர் திருவடியே வாழவன்னார்
திருவடிப்பூப் போத சடகோபர்வாழத்
         தெள்ளியசீ ரெதிராசர் செங்கோல்வாழ
வருணநெறிச் செவ்விவளம் செழித்துவாழ
           வைணவர்கள் குடிகுடியாய் வாழவாழச்
சுருதிமுடிக் குருப்புனித ராடிரூசல்
            சீர்தூப்புல் வேங்கடவ ராடிரூசல்”

என்று கூடியிருந்தோரெல்லாம் உவந்து பரவ, எங்கள் தேசிகன் இன்று ஊஞ்சலில் ஆடிய வண்ணம், திருக்குடந்தை தேசிகன் அருளிய தன்னுடைய சஹஸ்ரநாமத்தையும் கேட்டு மகிழ்ந்திருந்தார்.

இப்போதைக்கு சில படங்கள் மட்டும்.

ஏனோ வீடியோக்கள் upload ஆவதில் மிகவும் தாமதம் ஆகிறது. இரவு 10 மணி முதல் இப்போது ஒரு மணி வரை முயன்று கொண்டிருக்கிறேன். 50% கூட ஏறவில்லை. அதனால் வீடியோ நாளை வரும். (அப்பாடி ……. என்று  சந்தோஷப்படுவது யார்? )

DSC03149

DSC03151

DSC03152

DSC03154

மாலையில்  ஊஞ்சலில், ஸ்ரீ ரங்கராஜனின் அருமையான சாத்துப் படியில்

DSC03156

DSC03163

DSC03164

திங்கள், 3 அக்டோபர், 2011

Swami Desikan ethsarikai

Extracted from the 
"Swami Desikan's 7th Centenary commemoration souvenir" desika ethsarikai

Rahasyathraya saram 7 and 8

போன பதிவில் காமிரா மற்றும் மென்பொருள் உதவியுடன் இணைத்திருந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம்' பகுதி 7 பெரும்பாலோருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே மீண்டும் அதை ஸ்கான் செய்து மீடியா பையரில் சேமித்து விட்டேன். 10 முதல் 15வது அதிகாரம் வரை இந்தப் பதிவில் உள்ளது.

பகுதி 7

To download  from Media fire
http://www.mediafire.com/?a7t369d0miywvvv

பகுதி 8


மீதம் உள்ள அதிகாரங்களில், 16,17, 18வது அதிகாரங்களை தரவிறக்க

http://www.mediafire.com/?ffceo10s7gn3a5h

19,20, 21 மற்றும் 22வது அதிகாரங்களில், கரையானும், ராமபாணப் பூச்சியும் நிறைய விளையாடியுள்ளன. மொத்தமுள்ள 200 பக்கங்களில், 170 முதல் 200ம் பக்கம் வரை 
இதோ பார்க்கிறீர்களே அந்த மாதிரி அரித்திருக்கின்றன.  பக்கங்களும் தொட்டால், தூள் தூளாக உதிர்கிறது. இது பின் அட்டை view.


இன்னொரு நண்பரிடம் இந்த நூல் நல்ல நிலையில் இருப்பதாக அறிகிறேன். கூடிய விரைவில் பாக்கி 30 பக்கங்களையும் பகிர்ந்து கொண்டு நிறைவு செய்ய முயற்சிக்கிறேன். அதுவரை பொறுத்திருக்கப் பிரார்த்திக்கிறேன்.


இந்த நூலைப் படித்த பிறகு, இன்னொரு நூலின்மேல் அடியேனது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. "வைணவன் குரல்" வெளியிடப் போகும் திருவாய்மொழி வியாக்யானம், இதே ஸ்ரீ வி.கே.ராமாநுஜாச்சாரியார் எழுதியது.  தத்துவ விஷயங்களை இவ்வளவு எளிமையாக எழுதியவர் ஆழ்வாரின் பாசுரங்களுக்கு கரும்பாய், கற்கண்டாய், தேனாய் இனிக்கின்ற வகையிலே எழுதியிருப்பார் இல்லையா?  முன்பதிவு செய்து அந்நூல் விரைவில் வெளிவர உதவ வேணும்!


Those who have not so far downloaded , can visit

http://www.mediafire.com/?72uuldxc2wkn4
 
to download all the files. 





ஞாயிறு, 2 அக்டோபர், 2011

ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் பகுதி 7

ஸ்ரீ வி.கே. ராமாநுஜாச்சாரியாரின் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய சாரம் நூலின் 7வது பகுதிக்கான லிங்க் கீழே உள்ளது.
ஒரு விஞ்ஞாபனம்.
வழக்கமாக ஸ்கானர் கொண்டு ஸ்கான் செய்து அதை பிடிஎப் ஆக்கி இங்கு இணைத்து வருகிறேன். ஆனால் இந்த 7வது பகுதி அடியேனின் காமிரா மற்றும் ஒரு மென்பொருள் உதவியுடன் பிடிஎப் ஆக மாற்றப்பட்டு இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதனால் சற்று தரம் குறைந்து இருக்கிறது. சில பக்கங்களில் வரிகளெல்லாம் நெளிந்துள்ளன. இக்குறைகளுடனே நான் இதை இணைத்துள்ளேன். இது படிப்பதற்கு அல்லது சிலர் அச்சிட்டுக் கொள்வதற்கு சரியாக இருக்கிறதா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். பதிவின் கீழேயே உள்ள comment boxல் கருத்துக்களைத் தெரிவிக்கலாம். அல்லது தனி மெயிலாக அனுப்பினாலும் சரி.
எதற்காக இந்த முயற்சி? ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்திரம் முடிந்த பிறகு அடியேன் சென்னையில் பல நாட்கள் இருக்க வேண்டியுள்ளது. அங்கு ஸ்கானர் கிடையாது. மீதமுள்ள பகுதிகளையும் விரைவில் முடிக்க சென்னையில் இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கருத்துக்களை அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
அப்புறம், நேற்று பகுதி 6ல், ஒரு வார்த்தை அடியேனுக்கு சந்தோஷத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை மிகச் சரியாக ஊகித்து தொலைபேசியில் முதலாவதாகச் சொன்ன ஸ்ரீ அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கு அடியேனது க்ருதஜ்ஞைகளும், பாராட்டுகளும்.
பகுதி 7 இங்கிருக்கிறது
http://www.mediafire.com/file/7fagogh35o9b7gv/VKRRTS%207.pdf