Followers of this blog! Kindly note! This book is retyped by our respected Sri Deevalur N.V.Srinivasan swamy. Sri NVS swamy has added notes at several places within brackets in his anxiety that every word must be understood by all. His comments will be shown in color. They are not in the original book. And I take the liberty of editing some of his comments for which Sri NVS swamy may kindly excuse me.
ஸ்ரீமதே ஹயக்ரீவாய நம:
சுபஸம்ஸ்கார விபரங்களும்
மந்த்ரார்த்தங்களும்
அவதாரிகை
ஒரு ஜீவன் பூலோகத்தில் பிறந்ததாலேயே அவன் அசுத்தன் என்று தெரிகிறது. சுத்தமாய் இருப்பின் அந்த ஜீவனுக்கு பிறவி இராது. யோகிகள் ஆத்ம சுத்திக்காக பல (பலனில்) உத்தேசமின்றி கர்மங்களைச் செய்கின்றனர்.
"பாஹ்யஸ்பர்க்ஷேஸக்தாத்மா விந்தத்யாத்மநி யத்ஸுகம் ¦
ஸ ப்ரஹ்மயோகயுக்தாத்மா ஸுகமக்ஷயமஸ்நுதே ¦¦
கீதை 5-21.
யஜ்ஞம், தானம், தபஸ்ஸுக்கள் மனிதனின் பரிசுத்திக்காக.
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் ¦
யஜ்ஞோ தாநம் தபச்சைவ பாவநாநி கார்யமேவ தத் ¦¦
கீதை - 18-5.
பரமாத்ம ஸ்மரணை, இதர நிநைவின்றிய ஸ்மரணை, த்யாநம்.
தத்புத்தயஸ்ததாத்மாநஸ்தந்நிஷ்டாஸ் தத்பராயணா: ¦
கச்சந்த்ய புநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்து}தகல்மஷா: ¦¦
கீதை - 5-17.
மெய்மறந்த நிஷ்டையை உடைய பக்தன் பாபங்களை உதறிக்கொண்டவனாய், மறுபடிப் பிறவாத ஸ்தானத்தை அடைகிறான்.
ப்ரஹ்ம நிர்வாணத்தை பாபங்களை ஒழிந்த ரிஷிகள் அடைகின்றனர்.
லபந்தே ப்ரஹ்மநிர்வாணம் ருஷய: க்ஷீணகல்மஷா: ¦
சிந்நத்வைதா யதாத்மாந: ஸர்பூதஹிதே ரதா: ¦¦
கீதை - 5-25.
முதலிய விஷயங்கள் ஸ்ரீமத் பகவத் கீதையில் இருக்கின்றன. இவைகளை அநுஷ்டிக்க சில சில ஸம்ஸ்காரங்கள் (சுத்திகர்மாக்கள்) வேண்டும். அவையில்லாத வ்ராத்யன் (கர்ம சண்டாளன்) செய்யக் கூடாது. அநதிகாரி (அதிகாரமற்றவன்) செய்யப் புகுந்தால் மஹா பாபியாகி, நீச (கீழான) ஜந்மங்களே வந்துகொண்டிருக்கும். நற்கதியடையும் உபாயம் அநுஷ்டிக்க மநுஷ்ய ஜந்மத்திற்கே ஹேதுவில்லாததாக ஆகிவிடும்.
{மநுஷ்ய ஜந்மாவை அடைந்தால்தான் நற்கதியை அடையும் உபாயத்தை (வழியை) அறிய இயலும். தொடர்ந்து மேற்படி பாபங்கள் ஸம்பவித்தால் மநுஷ்ய ஜந்மம் எடுப்பதற்கே வாய்பில்லாமல் போய்விடும் என்று அபிப்ராயப்படுகிறார் ஆசிரியர். - என்.வி.எஸ்}
இது லௌகிக விஷயத்திலேயே இருக்க பகவான் விஷயத்தில் சொல்லவும் வேண்டுமா? முதலில் அவன் ஓர் த்விஜ ஸ்த்ரீயின் வயிற்றில் பிறக்க வேண்டும். முதல் மூன்று வர்ணத்தவரான ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யரே த்விஜர்களாகும். ஒவ்வொருவனும் செய்யத் தகுந்தவை எவை, தகாதவை எவை என்பதை சாஸ்த்ரம் மூலம் அறிந்து கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டார் பகவான் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா. செய்ய வேண்டியதைத் தவிர்த்தலோ, தவிர்க்கப்பட்டவைகளைச் செய்தலோ பாபமாகும். பாபங்களிலிருந்து விடுதலையே முக்தி-மோக்ஷ சப்தார்த்தம் ஆகும். வேத மந்த்ரங்களோடு கூடின கர்மாக்களே ஸம்ஸ்கார ஸ்வரூபமாகும். தைவத்தினிடம் (தேவர்கள், பித்ருக்கள் யாவருக்கும் ஆத்மா பரமாத்மா ஆதலால்) நம் இஹபர க்ஷேமங்களை ப்ரார்த்திப்பது, ஓர் சுத்தமான பாஷையாக (மொழியாக) இருக்கவேண்டும். அதுதான் ஸம்ஸ்க்ருதம். வேத மந்த்ரங்களுக்கு ஸ்வரமுண்டு. ப்ரார்த்தனைக்கு இது ஓர் முக்ய வீர்யகரமும் (அழுத்தம் கொடுப்பதும்) முறையும் ஆகும்.
(பகவான் மற்றும் தேவதைகளிடத்தில்) நமக்கு எப்படி முறையிட்டுக் கொள்வது (வேண்டிக் கொள்வது) என்பது தெரியாது. கேட்க வேண்டியவை என்னென்ன என்பதும் தெரியாது. (தவறாக வேண்டிக் கொள்வதால்) நமக்கு நேரக்கூடிய ஆபத்துக்களும் நமக்குத் தெரியாது.
உதாரணமாக நம்முடைய ஆசையைக் கணக்கிட்டால் பத்து (விஷயங்கள்) இருக்கலாம். இன்னும் ஊன்றிப் பார்த்தால் 20 தேறலாம் . வேதம் 200க்கும் மேல் அல்லவோ ஆசைகளை விளக்கிக் காட்டி, அவைகளை பூர்த்தி செய்துகொள்ள இஷ்டிகளையும் க்ருஷ்ண யஜூர் வேதத்தில் 2ம் காண்ட முன்பாதியில் உத்கோஷிக்கிறது.
இதற்கு (உதாரணமாக) லௌகிகத்தில் மனுதாரனுக்கு நீதிபதியிடம் முறைப்படி முறையிட வக்கீல் போல் ஆகும் நம் வேதம். இவ்விஷயம் இம்மந்த்ரார்த்தங்களை கவனித்தால் நன்கு விளங்கும். இந்த ஸம்ஸ்காரங்களை நாம் (முறைப்படி) செய்யாததால் (முறை தவறி செய்ததும் செய்ததாக ஆகாது) சைசவம் (குழந்தைப் பருவம்) முதல் ஸ்மசாநம் போகும் வரை அநேக கஷ்டங்களை அநுபவிக்கிறோம்.
ஆபஸ்தம்பாதி ஸூத்ரார்த்தமெழுதி அதில் முடிவான சில பக்கங்களில் ஸ்ரீவைத்யநாத தீக்ஷிதீயத்திலிருந்து சில ச்ராத்த விதிகளை எழுதினேன். "அநேகர் ச்ரார்த்த மந்த்ரார்தமில்லை என்று குறை கூறினர்"
(அதாவது புத்தகத்தில் உள்ள விஷயங்களைக் குறை கூறவில்லை, அர்தங்களையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம் என்ற வாசகர்களின் அபிப்ராயத்தை அவ்வாறு ஆசிரியர் தெரிவித்துள்ளார் - என்.வி.எஸ்)
அதற்காக ச்ரமம் பாராட்டாது ச்ராத்த மந்த்ர ரிக்குகளை தேவநாகரி அக்ஷரத்தில் - படிப்பவர் அபஸ்வரமாய் உச்சரியாவண்ணம், ஸ்வரத்துடன் மூலத்தை எழுதி "ஸம்ஸ்க்ருத பாஷா ஜ்ஞானா அபிவ்ருத்யர்த்தம்"
(உபயோகிப்பாளர் ஸம்ஸ்க்ருத மொழியில் புலமை பெறவேண்டும் என்பதற்காக என்ற பொருளையே ஒரு மந்த்ரம்போல் எழுதியுள்ளார் ஆசிரியர் - என்.வி.எஸ்)
பதவுரையும் எழுதினேன். மந்த்ர ப்ரச்நத்திலுள்ள மற்ற பாக மந்த்ரார்த்தமும் மிகவும் லோகோபகாரமாய் (உலகுக்கு உதவியாய்) இருக்குமென்று கருதினேன். ஏனெனில் நான் தென் தேச ஜில்லாக்களில் (தென் தமிழகத்தில்) வசித்திருந்தபோது - "வேத தர்ம பரிபாலன ஸபையோர்" இவ்விஷயங்களை பல வித்வான்கள் மூலம், பலவிடங்களில் உபந்யஸித்திருப்பதைக் கேட்டிருந்தேன். அவை இச்சென்னை மாகாணத்தாருக்கும் பயன்படட்டும் என்று எழுதலானேன்.
இதில் மூலம் கொடுக்கப்படவில்லை காரணம் அது வேதம். அதை ஸஸ்வரமாய் அபஸ்வரமின்றி உச்சரிக்கவேண்டும். இது அத்யயனம் பண்ணியவர்களுக்குத்தான் முடியும். அவர்களுக்கும் மூலம் தேவையில்லை. பதங்களின் அர்த்தப்போக்கைப் பார்த்தாலே மூலம் தானாகவே ஜ்ஞாபகத்திற்கு வந்துவிடும்.
(- ஆனால் நம்முடைய இந்த மறு வெளியீட்டில் மூலம் முடிந்தவரை சேர்க்கப்படும் - காரணம் அத்யயனம் பண்ணாதவர்கள் தமிழ் புத்தகங்களைப் பார்த்து ஸ்வரம் மட்டுமின்றி, சப்தத்தையும் தவறாகச் சொல்கிறார்கள். எனவே ஸ்ரீ வடுவூர் வீரவல்லி கனபாடி தேசிகாச்சார் ஸ்வாமின் - ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் மூலம் வெளியிட்டுள்ள பூர்வாபர ப்ரயோக புத்தகங்களில் உள்ளபடி பதச்சேதம் செய்யப்பட்டு, ஸஸ்வரத்துடன் கூடிய தேவநாகரி மந்த்ரங்களைச் சேர்த்து வெளியிட்டு இந்த கைங்கர்யத்தை முழுமையடையச் செய்வதன் மூலம் - எதிர்காலத்தில் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது அடியேனுடைய தாஸஸ்ய விஜ்ஞாபனம் - என்.வி.எஸ்).
இதர விசேஷ அம்சங்களை விஷய ஸூசிகை பக்கங்களில் கண்டுகொள்ளவும்.
பங்குனி உத்ரம். நே.ஈ.வேங்கடேச சர்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக