வெள்ளி, 31 ஜூலை, 2009

ஒரு கற்பனை


இணையத்தின் மூலம் அறிமுகமான நண்பர் 1919ல் வெளியான ஸ்ரீ சேட்லூர் ஸ்வாமி எழுதிய "ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்" வியாக்யான நூலை அனுப்பி வைத்தார். அது இதுவரை அடியேன் கேள்விப்படாத DJVU என்னும் வகைக் கோப்பு. சுமார்500 பக்கங்கள் உள்ள அந்த நூல் கண்ணிமைக்கும் நேரத்தில் திறந்து ஆச்சர்யப் பட வைத்தது. ஆஹா ! இதை அச்சிடலாமே என முயன்றேன். தோல்வி ! சரி ! சேமித்தாவது வைப்போமே என நினைத்தால் அதுவும் முடியவில்லை. அதனுடன் திருவாய்மொழிக்கு மணிப்ரவாள நடையில் ஒரு வியாக்யானம். இவை அடியேனுக்குப் புரியப் போவதில்லை என்றாலும் மற்றவர்களுக்குப் பயன்படுமே என நினைத்து கூகுள் உதவியை நாடினால் அது கொடுக்கும் சுட்டிகள் சொல்வதோ புரியவில்லை. அடியேனுக்கு வந்தவை கல்யாணி கிருஷ்ணமாச்சாரி மாமிக்கும் கிடைத்துள்ளது. அவர் ஒரு வழி சொல்வார் என நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீங்கள் யாராவது வழிகாட்டினால் கோவில் கோஷ்டியின் போது உங்களுக்கும் சேர்த்து ப்ரஸாதம் வாங்கி அடியேன் எடுத்துக் கொள்கிறேன்.

அப்புறம் கூகுள் பற்றி ஒருத்தர் தமாஷா ஒரு கற்பனை செய்து பார்த்திருக்கிறார். 19ம் நூற்றாண்டிலேயே கூகுள் வந்திருந்தால் என்பது அவர் கற்பனை. அவரே அது இப்படி இருந்திருக்கும் என்று காண்பித்திருக்கிறார். படம் பாருங்கள்.

நண்பர் அனுப்பிய சுட்டிகள் இங்கே

ரஹஸ்யத்ரயஸாரம் + குருபரம்பரை


திருவாய்மொழி


க்ரந்தம் கற்றுக் கொள்ள