சனி, 19 மார்ச், 2011

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவம் 7ம் நாள்

 

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவத்தின் 7ம் நாள் மாலையில் மஞ்சள் நீராட்டப் புறப்பாட்டிற்குப் பின் உபயநாச்சியாருடன் பெருமாள் திருமஞ்சனம் செய்துகொண்ட காட்சிகள் இங்கு வீடியோவாக!

ஏனோ தெரியவில்லை! அடியேனது கோடக் Zi6 இன்று அடியேனை அடிக்கடி கைவிட்டுவிட, இடையிடையே நண்பர் ஒருவர் கேமராவில் வீடியோ பதிவிட வேண்டியிருந்தது. எனவே, வீடியோவின் தரம் நன்றாக இல்லை. மன்னிக்க வேண்டும்.

இன்று (19/3/2011) எட்டாம் திருநாள். மாலையில் பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளிய காட்சிகள் இங்கே!  ஆச்ரமத்தில் வேலைகள் இருந்ததால் நண்பரிடம் வீடியோ எடுக்கும் பொறுப்பைக் கொடுத்தால், அவர் பெருமாளைக் காண்பிப்பதைக் காட்டிலும் எங்களூர் சாலை அழகையே நிறைய எடுத்திருக்கிறார். அவ்வப்போது தெரியும் பெருமாளைப் பார்த்து ரசியுங்கள்.

திருமங்கை மன்னனைக் கட்டுப் படுத்தி ஆட்கொள இதோ பெருமாள் குதிரை வாகனத்தில் கிளம்பி விட்டார் . ஆழ்வாரை திருத்தித் தன் பணியில் ஈடுபடுத்தி, பின் தேர் கடாக்ஷம் ஆகி ஆஸ்தானம் அடைந்து அதிகாலையில் திருத்தேருக்கு ஏளப் போகிறார். அவரைப் பின்தொடர வேணும். நாளை தேர், 22/3 அன்று தீர்த்தவாரி முடிந்து மீண்டும் சந்திப்போம்.

DSC02539

DSC02541

DSC02544

DSC02542

வெள்ளி, 18 மார்ச், 2011

திருப்புல்லாணி பங்குனி உத்ஸவம் 2011

 

ஏற்கனவே பல முறை இங்கு இட்டு விட்டதால் வேண்டாம் என நினைத்தாலும், பரமக்குடி இராகவன் மற்றும் பலரின் வேண்டுகோளை ஏற்று இங்கு திருப்புல்லாணி பங்குனி உத்ஸவ காட்சிகளை இந்த வருடமும் தொடர்கிறேன். பலரின் என்பதில், புதிதாக கணினி பயிலத் தொடங்கியிருக்கும் அடியேனின் இல்லக் கிழத்தியும் அடக்கம். (அதிலும் காலை 5 மணிக்கே சென்னையிலிருந்து அழைத்து ஏன் இன்னும் பதிவிடவில்லை என்று அதட்டல் வேறு) ஆகவே பார்த்தவைகளையே மீண்டும் காட்டுகிறேனே என ஆயாசப் படவேண்டாம். மேலிட உத்தரவுகளை மீற முடியாது.

முதலில் எங்கள் ஸ்ரீ ஆதி ஜெகன்னாதனின் திருவடி ஸேவை கீழே! இன்று ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி அன்று திருப்புல்லாணி மணியாரம் சீனிவாச ஐயங்கார் குடும்ப உபயமாக புதிதாகத் தங்கப்பால் தோய்த்தது

DSC02214

துவஜாரோஹணக் காட்சிகள் சில இங்கு வீடியோவாக!

 

DSCN0045

DSCN0047 

நாலாம் திருநாளில் பெருமாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் செய்து கொண்ட காட்சிகள், அதன்பின் மாலையில் நடந்த இரட்டை கருடவாகனப் புறப்பாடு காட்சிகள்  இங்கு. ஸ்ரீமத் ஆண்டவனிடம் இங்குள்ள இராமநாதபுரம் தேவஸ்தான அதிகாரிகள், திருப்புல்லாணி ஆலய அர்ச்சகர்கள், மற்றும் கைங்கர்யபரர்கள் கொண்டுள்ள பெரும் அபிமானம் காரணமாக, சமஸ்தான திவான் அவர்களே மாலையில் நேரில் வந்து அழைத்துச் சென்று மரியாதைகள் செய்தார் என்பது விசேஷம்.. பெதுவாகவே திருப்புல்லாணி ஆண்டவன் ஆச்ரம விசேஷங்கள் எதுவாயிருந்தாலும் திருப்புல்லாணி ஆலயத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் கோவில் விசேஷம் போல் ஈடுபாட்டுடனும், அன்போடும் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு தருவது இங்கு க்ருதக்ஞையுடன் குறிப்பிடத்தக்கது.  

 

4ம் திருநாள் காலையில் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த திருமஞ்சன வீடியோ

 

மாலையில் சாத்துமுறை வீடியோ

2011 panguni evening

உள்ள வாகனங்களிலேயே மிக மிக அழகானது என்று சொன்னால் ஐந்தாம் திருநாள் சேஷ வாகனம். பரமபதநாதனாக பெருமாள் எழுந்தருளியிருக்கின்ற அற்புதக் கோலம் இங்கே. 

DSC02374

DSC02372

இன்று நடந்த எங்கள் தாயாரின் திருக்கல்யாண கோலாகலக் காட்சிகள் இங்கு. பல வருடங்களாக நாங்கள் ஆசைப் பட்டுக் கொண்டிருந்த பூக்கூடாரம் இன்று நனவாயிற்று என்பது இன்றைய விசேஷம்.

தம்பி இராகவனுக்காக கோஷ்டி வீடியோ ஒன்று நாளை வரும். 

செவ்வாய், 15 மார்ச், 2011

Read the story and alert all you know

Please read the story here about a large scale scam and alert all your friends and relatives. Also ask them to forward to their contacts
http://www.labnol.org/india/speak-asia-online-scam/18845/

திங்கள், 14 மார்ச், 2011

நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் 14-3-2011

14-3-2011 அன்று நாட்டேரி ஸ்வாமி நிகழ்த்திய டெலி உபந்யாஸம் இங்கு எம் பி3 ஆக






Get this widget | Track details | eSnips Social DNA

ஞாயிறு, 13 மார்ச், 2011

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம்

திருப்புல்லாணியில் ஸ்ரீஆதி ஜெகன்னாதப் பெருமாளுக்கு பங்குனி ப்ரும்மோத்ஸவம் 11/3 அன்று அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி நேற்று 12/3ல் கொடி ஏற்றத்துடன் இன்று இரண்டாவது நாளாக சிம்ம வாகனத்தில் பெருமாள் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.சென்ற வருடங்களில் நிறைய எழுதிவிட்டதாலும், அதே வர்ணனைகளை மீண்டும் அளிப்பது சலிப்படயச் செய்யும் என்பதாலும், கிட்டத்தட்ட சென்ற வருடப் படங்களைப் போலவே அமையப்போகும் படங்களால் அடுத்தவர்கள் மெயில் பெட்டியை நிறைக்க வேண்டாம் என்று நினைத்ததாலும் இந்த முறை ஏதும் விசேஷமாக இருப்பதை மட்டும் எழுதலாம் எனத் தீர்மானித்தேன்.
பலருக்கு நினைவிருக்கலாம். 2007ல், முன்னாலே பிரபந்த ஸேவை இல்லாமலும், வேதங்கள் பின் தொடராமலும் தன்னந்தனியாக பெருமாள் புறப்பாடு காணும் நிலையைப் பற்றி வருந்தி எழுதி, அந்நிலை மாற பிரார்த்திக்கவும் வேண்டியிருந்தேன். நினைவு படுத்திக்கொள்ள இந்தப் படத்தையும், இந்தப் படத்தையும் காணலாம்.
பலரின் ப்ரார்த்தனையின் விளைவாய் பெருமாள் திருவுளம் கொண்டு, கடந்த இரண்டு வருடங்களாக ஆண்டவன் ஆச்ரம வித்யார்த்திகள் பாராயணத்திற்கு இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த முறையும் திருப்புல்லாணியின் மீது தாங்கள் கொண்டிருக்கும் அபிமானத்தால், ஸ்ரீமத் ஆண்டவன் , திருச்சானூர் பாடசாலையிலிருந்து 15 வேத வித்யார்த்திகளை அனுப்பி வைக்க, ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் மதுராந்தகம் பாடசாலையிலிருந்து சலக்ஷண கனபாடி மன்னார்குடி ஸ்வாமியுடன் 15 வித்யார்த்திகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆக, மிக மிக நீண்ட காலத்துக்குப் பின், பெருமாள் மிக ஆனந்தமாக திருவீதிப் புறப்பாடு கண்டருள்கிறார்.  கோவிலுக்குள் கோஷ்டிகளும் அருமையாக உள்ளது. இது தொடர ப்ரார்த்திக்க வேண்டுகிறேன். இன்றைய புறப்பாட்டில் சில படங்கள் இங்கே.