திருப்புல்லாணியில் இருந்தோருக்கு இன்று ஒரு ஆனந்தமான நாள். காலையிலே தாயாரும் பெருமாளும் குளிரக் குளிரத் திருமஞ்சனம் கண்டருளி இரவிலே பார்த்தவர்கள் எல்லாரும் பரவசம் அடையும் வண்ணம் ஊஞ்சலில் எழுந்தருளி மகிழ்வித்தனர்.
உள்ளே இருந்து ரஸி (க்ஷி)க்கின்ற தாயார்
அங்கு முடிந்து மடத்திற்கு வந்தால் அங்கும் டோலை! கண்கொள்ளாக் காட்சி!. அனுபவித்து அனுபவித்து அழகியசிங்கர் செய்கின்ற கைங்கர்யங்கள், உபசாரங்கள் எல்லாம் அதைக் கண்டவர்களை மெய்மறக்க வைத்தன.
ஒரு அமெச்சூர்தனமான வீடியோ !
இன்று தனது அனுக்ரஹ பாஷணத்தில் 46ம் பட்டம் அழகியசிங்கர் இங்கு சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் மேற்கொள்வதற்கு ரசமான ஒரு விஷயம் சாதித்தார். அன்று தன்னை நாடி வந்து பூஜித்த இராமனை, அவன் சயனம் கொண்டிருக்கும் இங்கு வந்து அவனை ஆனந்தப்பட வைக்கவே ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் அழகியசிங்கர்களை இங்கு சங்கல்பம் மேற்கொள்ள வைத்திருக்கிறான் என்றார். இன்று ந்ருஸிம்ஹன் எழுந்தருளியிருந்த அழகு அதை உறுதிப் படுத்தியது.
அப்புறம், இன்று உள்ளூர் கேபிள் டி.வி. சானல்காரர்களின் ப்ரார்த்தனையை ஏற்று அவர்களுக்காக அனுக்ரஹ பாஷணம் அருளியபடியால், பெரும்பாலும் பொதுவாகவே அனுக்ரஹபாஷணம் அமைந்தது. சொல்ல நினைத்திருந்த தர்ம சாஸ்திர விஷயங்களை நாளை அருள்வதாக சாதித்தாயிற்று. ஆனாலும் இறுதியில், அடியேன் மூலமாக சிலர் கேட்டிருந்த ஐயங்களுக்கு அழகிய சிங்கர் அளித்த பதில் எல்லாருக்கும் பயனளிக்கும்.
சொல்ல மறந்ந்து விட்டேனே! தினமும் மாலையில் சின்ன அழகியசிங்கர் திருவீதி ப்ரதக்ஷிணமாக வந்து கோவிலில் இப்படி ஏகாந்தமாக எல்லா ஸந்நிதிகளிலும் ஸேவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.
அனுக்ரஹ பாஷணம் கேட்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக