வியாழன், 31 மே, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

தரு - இராகம் - சங்கராபரணம் - தாளம் - சாப்பு.
பல்லவி.

உதயஞ்செய்தனரே - அநந்தசூரிய - ருதயஞ்செய்தனரே
அனுபல்லவி.
உதயஞ்செய்துகச்சிவ - ரதர் தந்தகிருபைகொண்டுன்
னதபுண்டரீகாக்ஷ தீக்ஷீதர்தந்தசுகுமாரர் (உதயம் )
சரணங்கள்.
க. தாதைசெய்தசோம யாகத்தின்பலனே
தழைக்குங்கச்சிவரதர் தருங்கிருபைநலனே
மேதினிதனிலெங்கும் வேதமானதுவிளங்கி
நீதிசாரமிதுவென்றே க்யாதியறிந்திடவே (உத)
உ.ஜொலிக்குங்காந்தியுள்ள சுகிருதஞ்செய்தேகஞ்
சுபக்கிரக பலமிக்க குருசந்திரயோகம்
பலிக்குமவரெங்கும்பிர பலிக்கும் வரதரையஞ்
சலிக்குந் திருக்கையாளர் கலிக்குப்புதுமையாக (உத)
ங சுருதிதன்னிலேபாரங் கதராகினரே
தொடுத்தெல்லாஞ்சித்தாந் தரீதியறிந்தனரே
குருகுல வாசமது உரிமையாகவேசெய்து
பிரமசாரிவிரத மருவினவருமிங்கே (உத)


விருத்தம்
இப்படியேசித்தாந்தரீதியெல்லாம்
இசையநந்தாசாரியர்க்குத்தந்தையானார்
செப்பமாங்கிடாம்பிபத்மநாபரென்னும்
ஸ்ரீரங்கவப்புள்ளார் குமாரியாகி
அப்புள்ளார்தங்கையுமாய்வந்ததோ தா
ரம்மாளையேதிருக்கலியாணந்தான்செய்து
வைப்பவேததர்மபத்னியுடனேகூடி
வருகின்றார்வரதரருள் பெறுகின்றாரே.

கலிநிலைத்துறை
பண்கண்டேயறிவதற்குமரியராய்ப் பத்தபராதீனமாகி
விண்கண்டதேவர்கட்குந்தேவரா மிவரெனவேவேங்கடத்துட்
டண்கண்ட கோனேரித்தென்கரைமேற் கலியுகத்திற்சகலபேற்குங்
கண்கண்டதெய்வமென்றே வேங்கடாசலபதியைகருதுவாரால்
.


The commentary on "NYASA TILAKAM" is available at http://rajamragu.spaces.live.com