Thursday, June 7, 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 3

ஶ்ரீ:

40 ஸம்ஸ்காரங்களின் பெயர்கள்

ஸம்ஸ்காரங்கள்

ஸம்ஸ்காரங்கள் மொத்தம் 40 ஆகும். அவை கர்ம ரூபம். 8 ஆத்ம குணங்கள் இருக்கின்றன. ஆக 48ம் சேர்ந்தே ஒரு ஜீவன் நற்கதியடைய காரணமாகின்றன. கௌதமாதிகள் 48 ஸம்ஸ்காரமென்றே பிரித்துக்காட்டாது கூறுகின்றனர்.

கர்பாதானம், பும்ஸவநம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசநம், சௌளம், உபநயனம், ப்ராஜாபத்யம், ஸௌம்யம், ஆக்நேயம், வைச்வதேவம் என 4 வேத வ்ரதங்கள், ஸ்நாநம்(ஸமாவர்தனம்), விவாஹம், பஞ்ச மஹா யஜ்ஞங்கள் ஆக 19. 7 பாக யஜ்ஞங்கள், 7 ஹவிர் யஜ்ஞங்கள், 7 ஸோமஸம்ஸ்தை (யஜ்ஞங்கள்) ஆக 21. தேவ யஜ்ஞம், பித்ரு யஜ்ஞம், மநுஷ்ய யஜ்ஞம், பூத யஜ்ஞம், ப்ரஹ்ம யஜ்ஞம் என்பதே பஞ்ச மஹா யஜ்ஞங்களாம். அஷ்டகா, அந்வஷ்டகா, பார்வணம், ச்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆச்வயுஜீ என 7 பாக யஜ்ஞங்கள். அக்நியாதானம், அக்நிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணி என்ற 7ம் ஹவிர் யஜ்ஞங்கள். அக்நிஷ்டோமம், அத்யக்நிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என 7 ஸோம யஜ்ஞங்கள். ஒவ்வொரு த்விஜனுக்கும் உபநயனம் உள்ள வரை ஸம்ஸ்காரங்கள் அத்யாவச்யமாகும். நைஷ்டிக ப்ரஹ்மசாhpயாய் இருக்க உத்தேசித்திருப்பவன் விவாஹாதிகளில் அதிகாரமில்லையாதலால் இவற்றுள் சில ஒரு ஜன்மத்தில் ஒரு தரமும், சில பன்முறைகளும், சில ப்ரதிதிநமும் அநுஷ்டிக்கப்படவேண்டும்.

ஸ்த்ரீகளுக்கும் ஜாதகர்மம் முதல் உபநயனம் வரை உள்ள ஸம்ஸ்காரங்கள் உண்டு. அவர்களுக்கு விவாஹமே உபநயன ஸ்தானம். பர்தாவோடிருத்தலே குருகுலவாஸ துல்யமாம் (ஸமம்).

அஹிம்ஸாஸத்யமக்ரோத: த்யாக: சாந்திரபைசுநம்

முதலிலாத்ம குணங்களைச் சுருக்கிக் கூறிவிட்டுப் பிறகு பெரிய மந்த்ரார்த்த விஷயங்களுக்குப் போகலாம்.

ஆத்ம குணங்கள்

1. தயை:- ஸர்வபூதஹிதேரத:, தயா பூதேஷு என்று பலவிடங்களில் பகவான் கீதையில் ஜீவகாருண்யத்தைப் பற்றி உபதேசிக்கிறார். பிறர் கஷ்டத்தைத் தன்னுடையதுபோல் பாவித்துத் தன்னாலியன்ற பொருள் (பணம் முதலியன), உடல் (சரீர கஷ்டம்), ஆக்கை (ப்ராணன்)களால் உதவிபுரிவதில் ஆசைப்படவேண்டும். பகவான் தன்னிடம் இருப்பதுபோல் ஸர்வ ஜீவராசிகளின் ஹ்ருதயங்களிலும் இருக்கிறார். அதால் அவருக்குச்செய்வது போலாகும். அவர் த்ருப்தியடைகிறார். ‘ஊரார் குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன் குழந்தை தானே வளரும்” என்பதல்லவோ பழமொழி.

2. க்ஷாந்தி:- அந்யநாலேற்படும் வாக்காலோ(திட்டு), சரீரத்தாலோ ஏற்படும் துன்பங்களை பதில் செய்யாது பொருத்துக்கொள்ளவேண்டும். பகவான் ஒவ்வொருவர் உள்ளிருந்தும் ஸதா ஸர்வகாலமும் ஆட்டி வைத்துக்கொண்டிருப்பதாக கீதை 18-61ம் ச்லோகம் உத்கோஷிக்கிறது. நாம் செய்யும் பாபத்தை பகவான் பலர்மூலம் நம்மை சிக்ஷிக்க அவர்கள்மீது கோபிப்பானேன்? தெருவில் போகும் ஒரு ப்ராஹ்மணனை ஓர் அப்ராஹ்மணன் இழிவாய் பேசுகிறான். இவன் அதை ஸஹியாது பதில் பேசத் தொடங்குவானேயாகில் அவனால் இவனுக்கு இன்னும் பலர் மூலமும் பரிபவமேற்படுவது நிச்சயம். பொருமை கடலினும் பெரிது. நம் பாபத்தை நாம்தான் அநுபவிக்கவேண்டும். பொறுத்தாலது செய்தவனையே தாக்கும். தீங்கிழைப்பவனுக்கு நன்மை செய்யச் சொல்லுகிறது சாஸ்த்ரம்.

3. அநஸூயா:- (பொறாமையின்மை): அவரவர் கர்மாநுஸாரியாய் ஸுகதுக்க லாபாலாபங்களை யநுபவிக்கப் பொறாமைப்படுபவனே அழிந்துபோவான். அவனுக்கு லாபமில்லை, பொறாமைப் படுபவனுக்கு நஷ்டமில்லை பாபந்தான் மிஞ்சும்.

(லாபம் அநுபவிப்பவனுக்கு பொறாமைப் படுபவனால் நஷ்டமில்லை, பொறாமைப்படுபவனுக்கு எந்த லாபமும் இல்லை பாபம்தான் மிஞ்சும் என்றிருக்கவேண்டும்-என்.வி.எஸ்.).

4. சௌசம்:- தைவாஸுர ஸம்பத்விபாக யோகமென்று தனியாக பகவான் கீதையில் (18ல் 16வது அத்யாயம்) போதிக்கிறார். த்ரிகரண சுத்தி யாவருக்கும் அவச்யமாகும். பரஸ்த்ரீகளை மனத்தினால் ஆசைப்படக் கூடாது. அதேமாதிரி அயலானுடைய (பிறருடைய) எந்தப் பொருளையும் விரும்பலாகாது. மநஸ் சுத்தி இருந்தால் போதுமென்று லௌகிகர் கூறுவர். அது எளிதில் வந்துவிடாது. பிறர்மீது குறைகூறுவதற்கான பாபத்திற்கு ப்ராயச்சித்தம் இல்லை என்கிறது சாஸ்த்ரம். ஆசாரஹீனனை (ஆசாரமற்றவனை) வேதங்கள் கூட அவர் எவ்வளவு கநபாடியாயிருந்தாலும் சுத்தி செய்யாதாம். ஆகையால் பொய் பேசாமை, வர்ஜ்யாவர்ஜ்யமின்றி புசியாமைகளைக் கவனிக்கவேண்டும். இவைகளை இதன் முன் பின் பக்கங்களில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தர்மசாஸ்த்ரங்களில் விரிவாய் காணலாம்.

5. அநாயாஸம்:- பகவான் நமக்கிட்டிருப்பது இரு வேலைகளே. 1.கர்மாநுஷ்டானம் 2.ஸதா பகவத் த்யானம். இவைகளைவிட்டு நம் வேறு காரியங்களை அவர் ஈஷத்தும் (சிறிதும்) ஸம்மதிப்பதில்லை. பக்தனின் யோக க்ஷேமம் அவருடைய பொறுப்பென்று ஏற்றுக்கொண்டிருப்பதால் நமக்குக் கிடைத்திருக்கும் ஸ்வல்ப ஆயுளை தஸ்மாத்(ஆகையால்) ஸர்வேஷு காலேஷு(எக்காலத்தும்) யோகயுத்தோ பவ(யோகத்தை அநுஷ்டிப்பவனாய் இரு), ‘தஸ்மாத்ஸர்வகாலேஷு மமாநுஸ்மர” (ஆகையால் எப்போதும் என்னை நினைத்திரு) என்றபடி ஆத்ம த்யாநத்தில் ஈடுபடப் பார்க்கவேண்டும். வாக்காலும் (பேச்சாலும்) நாம் அபசப்தத்தை (தகாத வார்த்தைகளை) உச்சரிக்கக்கூடாது. ‘நாச்லீலங் கீர்த்தயேத் தீமாந்” என்றபடி. சில அநாச்சாரங்களால் நம்மிடமுள்ள லக்ஷ்மீகரம்போய் மூதேவி வந்தடைவதாகச் சாஸ்த்ரம் முறையிடுகிறது. கச்சமில்லாதவனை நக்னன் (துணியில்லாதவன் - நிர்வாணன்) என்கிறது. ‘புண்ட்ரமில்லாதவனின் நெற்றி ஸ்மஸான ஸத்ருச்யம்“ (சுடுகாட்டுக்குச் சமம்) என்கிறது. உஷஸில் (சூர்ய உதயத்தில்) உறங்குபவனை மூதேவி வந்தடைகிறாள் என்கிறது. ஆகையால் ஸதா பகவந்நாமோச்சாரணபரனாய் பார்ப்பவர்கள் சந்தோஷப்படும்படி நடை, உடை, பாவனைகளோடிருத்தலே மங்கலமாகும்.

7. அகார்ப்பண்யம்:-  ஸுக துக்கங்களை ஸமமாய் பாவிக்க பகவான் அடிக்கடி உபதேசித்திருப்பது ஜ்ஞாபகத்திலிருக்கவேண்டும்.  ஆறிலுஞ்சாவு, நூறிலுஞ்சாவு என்பதையும் மறவாதவராய் ஜந்மஸாபல்யத்திலேயே (ஜனனத்தின் பயனான ஜன்ம விமோசனத்திலேயே) நாடிய மனத்தினராயிருக்கவேண்டும்.

8. அஸ்ப்ருஹா :- ‘அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதார க்ருஹாதிஷு“ என்பதிற்போல் மனைவி மக்கள் வீடு வாசல் பணம் சொத்துக்களின் மீது ஈஷத்தும் (சிறிதும்) மனம் வையாது, பரம வைராக்ய சீலராய் அவைகளைத் துச்சமாய்க் கருதினால்தான் மனஸ் ஆத்மாவில் நிற்க ஹேதுவாகும். ஆத்மாவில் மநஸ் நிலைத்திருப்பவனுக்கு வேறு எவ்வளவு பெரிய ஆநந்தமோ, துக்கமோ வந்தாலும் மநம் அதைப் பொருட்படுத்தாதிருப்பதே முமுக்ஷுவின் லக்ஷணம் என்கிறார் பகவான்.

இம்மாதிரி இன்னும் இதர (கோபமின்மை போன்ற) தேவ குணங்களும் (16ம் அத்த்) ஜந்ம ஸாபல்யத்திற்கு அநுகூலம்(உதவிகரம்) ஆகும்.

 

ஸம்ஸ்காரங்கள்
    சுபம் அசுபம் என்று கர்மாக்களை இருவிதமாய் பிரித்துக்கொள்ளலாம். ஆபஸ்தம்ப பூர்வப்ரயோகம், ஆபஸ்தம்ப அபரப்ரயோகம் என க்ரந்தங்களின் பெயராகும். கர்த்தா ச்ராத்தம்போல் ஸம்ஸ்கார சப்தமும் இரு கர்மாக்களிலும் வ்யவஹாரத்திலிருக்கிறது. கர்த்தா என்றால் செய்கிறவன். ச்ராத்த கர்த்தா என்று சொல்லுகிறோம். ஹவ்யம் என்னும் தேவபூஜா காரியத்திலும் யஜமானனை இதே பெயராலும் வழங்கி வருகிறோம். சுபத்தில் அப்யுதயத்தை நாந்தீ ச்ராத்தமென்கிறோம். ச்ரத்தையோடு செய்யப்படுவது ச்ராத்த பதார்த்தமாகும். அதுபோல் ப்ரேத, தஹன ஸம்ஸ்காரமென்றும் சொல்லுகிறோம். அதைப் பிரித்துக் காட்டுவதற்காகவே சுப ஸம்ஸ்காரம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த 40 ஸம்ஸ்காரங்களிலும் நாம் பொருள் எழுதப் புகுவது முதல் எட்டிற்கே. அதவாது கர்பாதானம் முதல் விவாஹ பர்யந்தம்.
கர்பாதான மந்த்ரார்தம். மந்த்ர ப்ரச்நம் 12ம் கண்டம்.
ஓர் ரிக்கிற்கு 2 வாக்கியங்கள்:
'ஆரோஹூரும் உபபர்ஹஸ்வ பாஹும் பரிஷ்வஜஸ்வ ஜாயாம் ஸுமநஸ்யமாந:
தஸ்யம் புஷ்யதம் மிதுநௌ ஸயோநீ வஹ்நிம் ப்ரஜாம் ஜநயந்தௌ ....'
1. ஆதாநம் - வைத்தல், செய்தல், உண்டாக்குதல் என அர்த்தம். கர்பத்தை வைத்தல், புருஷனிடம் உள்ள சுக்லத்தை (உயிரணுக்களை) ஸ்த்ரீயினிடத்தில் வைத்தல். இது யாவருக்கும் தெரிந்திருக்கிறபடி வேதமும் உத்கோஷிக்கிறது.
    அதில் முதல் ரிக்கில்(மந்திரத்தில்) உள்ள ஊரூ - தொடை, ஆரோஹ - ஏறு, ஆலிங்கனம் இப்பதங்களால் ஸ்த்ரீ ஸம்போகத்தைக் (தாம்பத்ய உறவைக்) கூறுகிறது. தம்பதிகள் கூடும்போது, இருவருக்கும் மனஸ்துஷ்டியாக (மனம் ஸந்தோஷமாக) இருக்கவேண்டும் என்கிறது வேதம். ஸந்துஷ்டி இல்லாது புணர்வது அவலக்ஷணம், பலஹீனம், ரோகம் இவைகள் ஜநிக்கும் (பிறக்கும்) ஸந்ததிகளுக்கு (குழந்தைகளுக்கு) ஏற்படும் என்கிறது சாஸ்த்ரம்.
    2. அரணியிலிருந்து கடைந்த அக்நியைப்போல் தேஜஸ்வியான புத்ரன் உண்டாகட்டும்.
    3. பித்ருக்களின் ஹிதத்திற்காக ஸத்புத்ரனை உண்டுபண்ணுகிறேன்.
இங்கு ஓர் வேத வாக்யம் ஞாபகத்திற்கு வரவேண்டும். அதன் பொருளாவது: ஒருவன் பிறக்கும்போதே (ரிஷிகள், தேவதைகள், பித்ருக்கள் ஆகிய) மூவரிடம் கடனாளியாகப் பிறக்கிறான்.
    உபநயனம் ஆனதும் வேத அத்யயனம் செய்வதன் மூலம் ரிஷிகளின் கடனைத் தீர்க்கிறான்.
    க்ருஹஸ்த ஆச்ரமத்தில் யாகம், பஞ்சமஹா யஜ்ஞம் போன்ற அக்நி கார்யங்களைச் செய்து  தேவதைகளின் கடனைத் தீர்க்கிறான்.
    ஸத்புத்ரனைப் பெற்றால் அப்புத்ரன் ஆஸ்திகனாய் விதிப்படி ப்ரேத கார்யம் (
இறந்தவர்களுக்குச் செய்வது), ச்ராத்தாதிகளைச் செய்து, பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர்களை த்ருப்திசெய்து வைக்கிறானாம். (இதனால் பித்ரு கடனைத் தீர்க்கிறான்).
    ஆகையால் ஒருவன் போகிப்பது (
தாம்பத்யத்தில் ஈடுபடுவது) அவனது ஸுகத்திற்காகவே அன்று. அந்த நினைவே பாபஹேது (பாபத்திற்கு வழிவகுக்கும்) என்று சாஸ்த்ரத்தில் இருப்பதை எழுதியிருக்கிறோம். அவனது முன்னோரை நரகத்தினின்றும் கரையேற்றி வைப்பதே ஸம்போகிக்க காரணமாகும்.
    விவாஹ மந்திரத்தின் முதல் ரிக், இவ்விவாஹத்தை தேவேந்திரனும் கலந்து ச்ரத்தையுடன் அநுக்ரஹிக்கிறான். அவனுக்கும் நான் விவாஹம் செய்துகொள்வது இஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், விவாஹம் ஆனதும் நான் என் பத்நியோடு செய்யப்போகும் ஸோம யாகத்தில் அவனுக்கு ஆஹாரம் கிடைக்கப் போவதை அவன் நிச்சயமாக அறிந்துகொண்டிருக்கிறான். இம்மாதிரி (
இவ்வாறாக) விவாஹம் செய்து கொள்வது தேவ, பித்ரு கர்மாக்களை அநுஷ்டிப்பதற்காகத்தான். அப்படி இல்லாதது (மனைவியால் தான் இன்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மணம் புரிந்துகொள்வது) தாஸியை (விலை மாதரை) அநுபவிப்பதற்கு ஒப்பாகும் என்கிறது சாஸ்த்ரம். ஸம்பந்தம் பதி-பத்நி வ்யவஹாரம் போய் (தர்மத்தை அநுஷ்டிக்காத வெற்று தாம்பத்ய உறவு) தாஸி என்றும், அவளை வைத்துக்கொண்டிருப்பவன் என்றும் ஆகிவிடுகிறது.
    4. நமக்கு நல்ல ஸந்ததி மட்டுமின்றி, ஸம்பத்தும், பேரன், கொள்ளுப் பேரன்களைப் பார்க்கும் வரை தீர்காயுஸ்ஸும் உண்டாகட்டும். ஹவிஸ்ஸுகளை ஹோமம் செய்கிறவர்களாயும் இருப்போமாக.
    5. யாசிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்போமாக. இருவரும் கூடும் முன் தேவதை பூஜையைச் செய்வோமாக. (ஹோமத்தாலும், பல(
பழ) தானத்தாலும் பகவத் பாகவதர்களின் அநுக்ரஹமேற்பட்டு, ஸத்ஸந்ததி ப்ராப்தமாக (கிட்ட) ஹேதுவாகும் (உபாயம் ஆகும்) என்பது மந்த்ரம் மூலம் தெரியவருகிறது)