Sunday, March 28, 2010

அன்னமாய் நூல் பயின்றார் ஏறி வரும் அன்ன வாகனம்

இன்று 7ம் திருநாள். நேற்றுதானே திருக்கல்யாணம் ஆயிற்று! அதனால் தினமும் காலையில் நடக்கும் புறப்பாட்டுக்கு இன்று ஒரு நாள் ரெஸ்ட்.

மாலையில் சூர்ணோத்ஸவம். ஸ்ரீதேவி பூதேவிகளுடன் பெருமாள் திருவீதிப் புறப்பாடு. அதன் பின்னே ஒரு அற்புதமான திருமஞ்சனம். பாஷ்யம் ஐயங்கார் என்று ஒரு ப்ருஹஸ்பதி இந்த ஊரில் இருந்தார். அவரது மண்டகப்படி. அவருக்குப் பின் அவர்கள் குடும்பத்தார் நடத்துவது. இந்த வருடம் 55வது ஆண்டு மண்டகப்படி. திருமஞ்சனம் என்றால் இப்படி இருக்கவேண்டும் என்று மெச்சும்படி அமைவது இந்த ஒரு நாள். மற்ற எல்லா நாட்களிலும் பெருமாளுக்கு மட்டுமே திருமஞ்சனம். 7ம் திருநாள் மட்டுமே உபய நாச்சிமாருடன் திருமஞ்சனம். இப்போது 2003க்குப் பிறகு விடாயத்தி உத்ஸவத்தில் பெருமாள் நாச்சிமாருடன் ஸ்ரீவானமாமலை மடம் எழுந்தருளி அங்கும் திருமஞ்சனம் நடக்கிறது. 4ம் திருநாள் திருமஞ்சனத்தைப் போலவே இதையும் உலகுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால், காமரா, Zi6 இரண்டுமே சார்ஜ் இல்லாமல் ஏமாற்றமாகி விட்டது. பெருமாளே என நினைத்தால் ஜெயா டிவி குழு வந்து நிற்கிறது. ஒரே இன்ப அதிர்ச்சி. அவர்களுடைய உயர் ரக காமராவில் பதிவாகியுள்ள இந்த திருமஞ்சனம், சூர்ணோத்ஸவம், பின் நடந்த திருவீதிப் புறப்பாடு எல்லாம் அனேகமாக இந்த வாரத்துக்குள்ளேயே ஒளிபரப்பாகும் என்று சொல்கிறார்கள். தவறாமல் பாருங்கள்.

ஆக மாலையில் சூர்ணோத்ஸவப் புறப்பாடு, அதன்பின் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும் திருமஞ்சனம், அதன்பின் சாயரக்ஷை பூஜைகள், அதன்பின் சாத்துமுறை கோஷ்டி அப்புறம் திருவீதிப் புறப்பாடு என்பதாலே 7ம் திருநாள் மண்டகப்படி எப்போதுமே அர்த்த ராத்திரியில்தான். இப்போதாவது 11 மணிக்குள் புறப்பாடு ஆகிவிடுகிறது. அடியேன் சிறுவனாயிருக்கும் போதெல்லாம் இரவு 2மணிக்கு மேல்தான் புறப்பாடு ஆகும். நாங்கள் தூங்கி வழிவோம். ஆனால் பாவம் அந்த வாகனத்துக்கு நாங்கள் வைத்த பெயர் தூங்குமூஞ்சி வாகனம் என்று. அது என்ன வாகனம்? அதுதான் தலைப்பிலேயே சொல்லிவிட்டேனே!அது அம்சமான ஹம்ஸ வாகனம்.

தாவு தனிமத்தள முருகு தவில்பேரிகை
      சமுத்திரம் போல் முழங்கச்
சங்கீத ராகங்கள் கந்தருவர் பாடவே
      சாமரை யிரட்ட வெண்டிசைக்
காவலரு, நாவலரு, மூவுலக மாதருங்
     கைகுவித் தேத்தி வாழ்த்தக்
கொடியசுராதி யரிராக் கதர் கணங்கள்கெற்
    பங் கலங்கத் துலங்கு
பூவலருமான சப்பொய் கையுட் பழகிவரு
     புண்டரீகத் தயன் வரும்
பொற்சிறைச் செங்காற் பசிய கூட்டன்ன
    மொடு புணர்ச்சிபழகுதல் மருவிவாழ்
சேவலன்னத்தின் மேல் வீற்றிருந் தாயிரந்
    தினகரோ தய மென்னவே
தெரிதமிழ்ப் புல்லாணிவேதி வருசெக நாதா
    தெய்வச் சிலைக் கடவுளே.

P1010508

என்று வாகன மாலை போற்றும் அருமையான அன்ன வாகனத்தின் மீது அன்னமாய் நூல் பயின்றாரான P1010510பெருமாள் திரு வீதி கடாக்ஷித்தார்.

 

 

 

 

ஏழாம் நாள் உத்ஸவங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எட்டாம் நாளில் குதிரை ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். அன்றே ஸ்ரீதேசிகன் பாடினாரே , திருச்சின்னமாலையில், யானை பரி தேரின்மீது அழகர் வந்தார் என்று ,

P1010511

அவ்வளவு சௌந்தர்யமாய் வீதி வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் கள்ளன் பிடிபடப் போகிறார். P1010514 பிடிபட்டு வாடி வருந்தி நாரணா எனும் நலம் தரும் நாமத்தைக் கண்டுகொள்ளப் போகிறார். அங்கு போக வேண்டும். பட்டயம் வாசிக்கின்றவர் மிக மெல்லிய குரலில் வாசிப்பதைக் கேட்க வேண்டும். அதன்பின் பெருமாள் நாளைய தினத்துக்காக திருத்தேரைக் கடாக்ஷிப்பதைக் கண்டு ஆனந்தப் பட வேண்டும்.P1010516 எனவே ஒரு சின்ன பிரேக் . மீண்டும் ஏழாம் நாளில் மேலும் சிலவற்றையும், எட்டாம் நாளில் பாக்கியையும் பகிர்ந்து கொள்ள இன்றே வருவேன். (KRS ! I am sorry. கடைசி வரை நீங்கள் கேட்ட பட்டயத்தைப் பெறவே முடியவில்லை)