புதன், 21 டிசம்பர், 2011

நித்ய கர்மாநுஷ்டானங்கள்


நேற்றைய பதிவில் "நித்யகர்மாநுஷ்டான விதிகள்" என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியையும் நேற்றைய பதிவில் படித்திருக்கலாம். விதிகள் மீறப்பட வேண்டியவை என்பது நமது நாட்டில் மக்களின் மனோநிலை. சாலைப் போக்குவரத்து விதிகளிலிருந்து, ரெயிலவே முன்பதிவு, பள்ளி கல்லூரி சேர்க்கை என்று எங்கும் எதிலும் விதிகளை அலட்சியம் செய்தே வாழ்பவர்கள் நாம். இந்த கர்மாநுஷ்டான விதிகளை மட்டும் கடைப்பிடித்து விடுவோமா?

ஆனால், இந்நூலில் கண்டுள்ள விதிகளில் சந்த்யா வந்தனம் ஒன்றைத் தவிர மற்ற எதையும் நாம் பின்பற்ற முடியாத அளவுக்குக் கடுமையான விதிகள்! கர்மாநுஷ்டான விதி என்று தெரியாமலே நாம் அதில் ஒன்றைக் கடைப்பிடிக்கிறோம். அது என்ன என்று இங்கே நான் சொல்ல மாட்டேன். படித்துப் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டியது. இன்றைய சூழலில் கடைப்பிடிப்பது என்பதும் முடியவே முடியாததுதான். ஆனால் அவைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஏற்படும் பாபங்களை அறிந்தால் ....... அது இன்னும் வேதனை! நூலைப் படித்த பிறகு, நான் தெரிந்து கொண்டது நம்மில் 99.9% இவற்றைக் கடைப்பிடிக்கவில்லை, முடியாது என்பதுதான். முன்னோர்கள் என்ன சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே இந்நூலை வலையேற்றியிருக்கிறேன்.

ஸ்ரீமத் அழகியசிங்கர் திருப்புல்லாணியில் தனது அனுக்ரஹணபாஷணத்தில் மீண்டும் மீண்டும் சந்த்யாவந்தனம் செய்வதன் அவசியத்தைப் பற்றிக் கூறியது நினைவிருக்கும். இந்நூலைப் படித்த பிறகுதான் அவருடைய அபார காருண்ய குணம் புரிந்தது. நித்ய கர்மாநுஷ்டான விதிகளில் குறைந்த பக்ஷம் இன்றும் கடைப்பிடிக்கக் கூடியதான சந்த்யாவந்தனத்தின் மூலமாகவாவது நாம் சேர்த்துக் கொண்டிருக்கும் பாபச் சுமைகளைக் குறைத்துக் கொள்ளட்டும் என்ற கருணையினால்தான் அவர் அதை வலியுறுத்தியது என்று இப்போது உணர்கிறேன்.

நூலைப் படிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கிலிருந்து நகலிறக்கிக் கொள்ளலாம். இரண்டு பிடிஎப் கோப்புகளாக உள்ளன. 


 Mediafire லிங்கிலிருந்து நகலிறக்க (adiyen learnt from many thro' mail and phone that skydrive link is not properly opening and hence adiyen uploaded to Mediafire also)
Nithyakarmanushtanam 1 
http://www.mediafire.com/?6ymuq5kmr6n125m
Nithyakarmanushtanam 2
http://www.mediafire.com/?7cjwpotuin4mdnc



1 கருத்து: