சனி, 25 ஜூன், 2011

எச்சரிக்கை!

இன்று திருப்புல்லாணிக்கு வந்திருக்கிறேன். எப்படா இவன் வருவான் என்று காத்திருந்தாற் போல நண்பர் (இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எப்போது எப்படி இவரிடம் மாட்டிக் கொள்வேன் என்பது இன்று வரை அடியேனுக்குத் தெரியாத ஒன்று) காலங்கார்த்தாலேயே வந்து விட்டார். வந்ததும் வராததுமாக கேள்விகளை வீச ஆரம்பித்தார். இந்த ப்ளாகை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? சேட்லூர் ஸ்வாமியின் நூல்கள் கிடைக்க வில்லை அதை நீ எழுதுவது சந்தோஷம்தான். ஆனால் அதை அப்படியே தருவது சரிதானா? க்ரந்தம் எத்தனை பேரால் படிக்க முடியும்? அதிலும் நீயே எழுதியதைப் போல, விண்டோஸ் 7 இருந்தால், அதிலும் அந்த ஃபாண்ட் இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்றால், ஒத்தை விரலை வைத்துக் கொண்டு மாங்கு மாங்கென்று டைப் அடித்து வலையில் இடுவதில் என்ன பயன்? இல்லை உனக்கு க்ரந்தம் அடிக்கத் தெரிகிறது என்று உலகுக்கு தம்பட்டம் அடிப்பதுதான் உன் நோக்கமா? என்று திணற அடித்து விட்டார். குழம்பிப் போனேன். சற்று நேரம் கழித்து கோயமுத்தூர் ஸ்வாமியும் க்ரந்தம் படிப்பவர்களே அனேகமாக இல்லை என்று கருத்துச் சொன்னார்.  யோசித்துப் பார்த்த பின் யதார்த்தம் புரிந்தது. எனவே இனி தொடரப் போகும் சேட்லூர் ஸ்வாமி வ்யாக்யானங்களில் க்ரந்தம் இருக்காது. அன்பர் வினோத் துணையுடன் க்ரந்த வாசகங்கள் தமிழில் இருக்கும். இன்று முதல் "திருமந்திரச் சுருக்கு" ஆரம்பமாகிறது. அதை  சதம் அடிக்கப் போகும் நமது  ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன் ஸ்வாமி அடியேனுக்குப் புரிகிற மாதிரி எளிமையாய் வழங்குவார் என்ற நம்பிக்கை உண்டு.


||ஸ்ரீ:||
சீரார்  தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனருளிச் செய்த
திருமந்திரச்சுருக்கு

நாவலர் மறைநாலொன்று நலந்திகழ் மறையொன்றோராத்
தாவலைப் பலைக்கு மோகத் தழுந்திநின்றல மருகின்றீர்
தூவலம்புரியாமொன்றிற் றுலக்கமா மணிவண்ண மொன்றால்
காவலென்றகரத் தகவாய் கருத்துறக் காண்மினீரே.                      …1.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேசிகாய நம:
திருவஹீந்திரபுரம் சேட்லூர் வித்வான் பகவத் விஷயம்
ஸ்ரீ உப. வே. பண்டித பூஷணம்
நரஸிம்மாசார்ய ஸ்வாமியின்
வ்யாக்யானம்.
ஸ்ரீமத் ரஹஸ்ய பதவி முதலாக ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் வரையிலான க்ரந்தங்களினால்  அந்தந்த அதிகாரிகளுக்குத் தக்கபடி ஸங்க்ரஹ விஸ்தார ரூபங்களாகத் தாமருளிச் செய்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் ஸுகமாக அனுஸந்தானத்துக்கு யோக்யமாம்படி தமிழ் ப்ரபந்த ரூபமாக அருளிச் செய்யக்கோலி முதலில் திருமந்த்ரார்த்த்த்தை ஸங்க்ரஹிக்க உபக்ரமித்து அதில் அகரார்த்தத்தை அருளிச் செய்கிறார். --- நாவலர்  இத்யாதியால்

[ ப – ரை]  நா – நாக்கில், அலர் – வ்ருத்தியடைகிற, மறை – வேதங்கள், நாலு – நான்கும், ஒன்றும் – ஒன்று சேர்ந்திருக்கையாகிய, நலம் – நன்மையினால், திகழ் – ப்ரகாசிக்கிற, ஒன்று – அத்விதீயமான, மறை—வேதத்தை, ப்ரணவமாகிற வேதத்தை என்றபடி, ஓரா – ஸார்த்தமாக விசாரியாமல், தாவலைப்பு – தாவு – ஸ்தானங்களில், அலைப்பு – அலைதலால், அலைக்கும் – ச்ரமத்தைக் கொடுக்கும், மோகத்து – ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய அஜ்ஞானத்தில், அழுந்தி நின்று – முழுகினவர்களாக இருந்து, அலமருகின்றீர் – ஆயாஸத்தை அடைகிற சேதனர்காள்! தூ – பரிசுத்தமான, வெண்மை நிறமான என்றாகவுராம், வலம்புரியாம் – வலம்புரி சங்கம் போலிருக்கிற, ஒன்றில் – ஒரு ப்ரணவத்தில், துலக்க – ப்ரகாசம் செய்யப்பட்ட அல்லது ப்ரகாசமாக என்றாகவுமாம், மா – பெரிய , மணி – நீல ரத்னம் போன்ற, வண்ணம் – வர்ணத்தையுடைய, ஒன்றால் – ஒரு வஸ்துவினால், விஷ்ணுவினால் என்றபடி, காவலென்று – ரக்ஷணம் என்று மற்ற வஸ்துக்களுக்கு என்று சேர்த்துக் கொள்ளவும், அகரத்து – அகாரத்தினுடைய, அகவாய் – தாத்பர்யார்த்தத்தை, கருத்துற – உங்கள் மனதில் நன்றாக உறைக்கும்படி, காண்மினீர் –அறியுங்கோள். “துவக்கவண்ண மொன்றால்  என்று பாடாந்தரம், அப்பொழுது துவக்கமாம் – ஜகத்காரணமாகிய, வண்ணமொன்றால் –ஸ்வபாவத்தையுடைய ஒரு வஸ்துவினால் என்றர்த்தம்.
[தா – ம்] நாவலர் இத்யாதி – ஆத்யந்துத்ரயக்ஷரம்ʼ ப்³ரஹ்ம த்ரயீயத்ர ப்ரதிஷ்டிதா| ஸகு³ஹ்யோந்ய: த்ரிவ்ருʼத்வேத³: யஸ்தம்ʼவேத³ ஸ வேதவித்|| என்றும், மஹதோ வேத³ வ்ருக்ஷஸ்ய மூலபூதோ மஹாயம்ʼ என்றும், ஸர்வ வேதங்களின் ஸாராம்ஸங்களின் சேர்க்கையாகவன்றோ ப்ரணவத்தைச் சொல்லுகிறது1 மேலும், யத³ந்தஸ்த² மஸே²ஷேண வாங்மயம்ʼ  வேத³வைதி³கம்ʼ என்றும் இவர்தாமே அருளிச் செய்திருப்பது இங்கனுஸந்தேயம். ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த²ம்ʼ, ப்ரணவேநைவஸர்வவாக் ஸந்த்ரண்ணாபவதி என்றிவை முதலியவைகளில் சொல்லுகிறபடியே ஸர்வசப்தங்களும், அவற்றின் அர்த்தங்களும் இந்த ப்ரணவத்துக்குள் அடங்கியன்றோ இருப்பது. கி³ராமஸ்ம்யேக மக்ஷரம்ʼ என்று பகவான் தானும்  ஸ்ரீகீதையில் அருளிச் செய்தார். ஸ்ரீபாஷ்யகாரரும் அர்தா²பிதாயினஸ்²²ப்³தா³: கி³ர: தாஸா மேக மக்ஷரம்ʼ ப்ரணவோஹ மஸ்மி என்று விவரித்தருளினார். இப்படிப்பட்ட மஹிமையுடன் கூடியதும், வேதம் என்றும் சொல்லப் பட்டதும், இந்த ப்ரணவமே என்று தெரிவிப்பதற்காக மறை ஒன்று என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. ஓரா – அர்த்த பர்யந்தம் விசாரியாமல். யஸ்தம்ʼவேத³ ஸ வேத³வித் என்கிறபடியே தன்னை அறியவே ஸர்வார்த்தங்களையும் அறிந்து தரவற்றாய் என்று ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச் செய்யப் பட்டதிறே. தாவலைப்பு இத்யாதி – அநேகஜன்ம ஸாஹஸ் ரீம்ʼ ஸம்ʼஸாரபத³வீம்ʼ வ்ரஜந் ‌‌மோஹஸ்²ரமம்ʼ ப்ரயாதோஸௌ வாஸநா ரேணுகுண்டி²த: என்பதின் அர்த்தம் இத்தால் அருளிச் செய்யப் பட்டதாகிறது. அதாவது அனேகமாயிரம் ஜன்மங்களின் பரம்பரைகளில் ஓடி இளைப்பையும் அஜ்ஞானத்தையும் அடைந்து அந்தக் கர்ம வாஸனையாகிற அழுக்கினால் பூசப்பட்டவனாகிறான் என்று சொல்லி இருப்பது இங்கு அனுஸந்திக்கப் பட்டதாகிறது. இத்தால் ப்ரணவத்தில் சொல்லப் படுகிற ச்ரிய:பதியே ஸர்வரக்ஷகன் என்கிற ஜ்ஞானமில்லாமையினால் தேவதாந்தரங்களை ரக்ஷகராக நினைத்து வ்யர்த்தமான ச்ரமத்தை அடைந்து நிற்கும் சேதனர்காள் என்றதாயிற்று. ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழியேறக் கண்டீர் கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூரதனுள் ஆடுபுட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதுமே என்ற பாட்டில் அருளிச் செய்யப்பட்ட அர்த்தமும் இங்கு ஸங்கரஹிக்கப் பட்டதாயிற்று. இத்தால் ப்ரணவார்த்த ஜ்ஞானத்தின் ப்ரயோஜனம் ரக்ஷகாந்தரர்களை ஆச்ரயிப்பதினால் உண்டாகும் அதிகமான ச்ரமத்தின் நிவ்ருத்தி என்று நிஷ்கர்ஷிக்கப் பட்டதாயிற்று. தாவலுப்பு என்று பாடாந்தரமாய், தாவு – தாவனம், ஓடுதல் என்றபடி, அதனால் உண்டான , அலுப்பு – நிர்வேதத்தினால் என்று யோஜிப்பாருமுண்டு. தூவலம்புரி இத்யாதி – இங்கு பரிசுத்தியாவது க்ஷேத்ரஜ்ஞஸ்யேஸ்²வர ஜ்ஞானாத் விஸு²த்³தி: பரமாமதா என்றும், நிஸ்²சிதே பரஸே²ஷத்வே ஸே²ஷம் ஸம்பரிபூர்யதே| நிஸ்²சிதே புனஸ்தஸ்மின்ன ந்யத்ஸர்வமஸத்ஸமம்ʼ|| என்றும், தேநசேத³ விவாத³ஸ்தே மாக³ங்கா³ம்ʼமாகுரூநுக³ம:; என்றும் சொல்லுகிறபடியே இதொன்றே ஸர்வ கர்மங்களுக்கும் பூர்த்தியைக் கொடுக்கக் கூடியதாயும், இதொன்றில்லாவிடில் மற்றெல்லாக் கர்மங்களும் அனுஷ்டிதங்களானாலும் நிஷ்பலமாம்படியான மஹிமை என்றபடி. வலம்புரி இத்யாதி – வலம்புரி சங்கம் போல் ஸந்நிவேசத்தை உடைய ரேகா விசேஷத்தினால் தெரிவிக்கப்படுகிற, அன்றிக்கே தாமஸாஹங்காரமாகையாலே சப்த தந்மாத்திரங்களுக்குக் காரணமா யிருக்கிறது பாஞ்சஜன்யம். அப்படியே ப்ரணவம் எல்லா சப்தங்களுக்கும் காரணமாய் அவைகளுக்குள் நிறைந்திருக்கிறது. இதைத் திருவுள்ளம் பற்றியே ப்ரணவ மஹிமத் பாஞ்சஜன்ய க்ரமேண என்று இவர் தாமும் அருளிச் செய்திருக்கிறார். துலக்க – ஸர்வ சேஷித்வேந ப்ரகாசம் செய்யப் பட்ட. அன்றிக்கே துலங்க என்பது வெல்லொத்தாய் துலக்க என்று கிடக்கிறதாகவுமாம். அப்பொழுது ஸம்சயாதிகள் ஒன்றுமில்லாமல் நிச்சயமாயிருக்கிற. துலங்குதல் – நிர்மலமாயிருத்தல். மாமணி இத்யாதிக்கு – மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே என்று கல்ப ஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வ வேதஸார பூதமான ப்ரணவத்தினால் சொல்லப் படுகிற தேவதா விசேஷத்தின் ரூபத்தை நிஷ்கர்ஷித்திருப்பதினால் அந்த ரூப விசேஷத்தையுடைய ச்ரிய:பதியே ப்ரதிபாத்யமாகிறனென்று திருவுள்ளம். துவக்கமாம் இத்யாதி பாடாந்தரத்தில் ஸமஸ்த ஸப்³³மூலத்வா த³காரஸ்ய ஸ்வபாவதம்ʼ ஸமஸ்த வாச்ய மூலத்வாத் ப்³ரஹ்மணோபிஸ்வபா³வத:: ||என்கிற வாமன புராண வசநத்தை அநுஸரித்து ஸர்வ வாசக ஜாத ப்ரக்ருதியான ப்ரணவத்துக்கு ஸர்வ வாச்ய ஜாத ப்ரக்ருதியான ச்ரிய:பதியே பொருளாக வேண்டும் என்கிற ஔசித்யம் ஸுசிப்பிக்கப் பட்டதாகிறது. துவக்கமாம் வண்ணம் என்று அகாரத்தை விலக்ஷித்து, அகாரவாச்யனான விஷ்ணுவினால் காவல் என்று அந்வயிப்பாருமுண்டு. அப்பொழுது அகாரத்துக்கு அர்த்தம் நிரூபிக்குமிடத்தில் அகார வாச்யத்தினால் காவல் என்று சொல்லும்படி வருகிறபடியினால் ஆத்மாச்ரய தோஷம் வருகிறது என்றும், அகாரத்தினால் ரக்ஷணமென்று அகாரத்தின் தாத்பர்யார்த்தத்தை என்றாகிறபடியினால் புனருக்தியும் வரும் என்றும் அறியத் தக்கது. காவல் – இது கவரக்ஷணே (அவ என்கிற தாது ரக்ஷணத்தைச் சொல்லுகிறது) என்கிற தாதுவின் மேல் ஏற்பட்டபதம் என்று திருவுள்ளம். இங்கு அவ என்ற தாதுவின் மேல் ஏற்பட்ட அகாரம் ரக்ஷகன் என்கிற பொருளை மாத்திரம் தெரிவிக்குமே ஒழிய விஷ்ணுவே ஸர்வ ரக்ஷகன் என்கிற அர்த்தத்தைத் தெரிவிக்குமோ என்னில் ? தெரிவிக்கும், எப்படி என்னில் :- ரூடிசக்தியினால் சொல்லப்படுகிற அர்த்தத்தையும் யோகசக்தியினால் சொல்லப்படுகிற அர்த்தத்தையும் ஒன்றாகக் காண்பிப்பது யோகரூடமான பதங்களின் ஸ்வபாவம். பங்கஜம் என்பதற்கு யோக சக்தியினால் சேற்றில் உண்டாகியது என்றர்த்தம். அது பாசி, கோரை முதலிய வஸ்துக்களையும் சொல்லும். அப்படி இருந்த போதிலும் தாமரையையே சொல்லுகிறதென்று ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதற்கு ரூடி சக்தியினால் தாமரைப்பூ பொருளானபடியினால் அந்தத் தாமரைப்பூ சேற்றில் முளைக்கிறது என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறதே ஒழிய சேற்றில் முளைக்கும் மற்றைய வஸ்துக்களைச் சொல்லுகிறதில்லை .அதாவது ரூடி சக்தியினால் ஏற்படுகிற தாமரைப்பூ என்கிற பொருளையும், யோக சக்தியினால் ஏற்படுகிற சேற்றில் முளைக்கிறதென்கிற பொருளையும் சேர்ந்த ஒரு வஸ்துவைக் காட்டுகிறது. அதைப்போல அநிஷே தேவுமான் விஷ்ணௌ அகாரோ விஷ்ணு வாசக: என்று சொல்லுகிறபடியே ரூடி சக்தியினால் சொல்லப் படுகிற விஷ்ணுவே யோக சக்தியினால் சொல்லப் படுகிற ரக்ஷகனாயிருப்பவனும் என்றேற்படுகிற படியினால் இவ்வர்த்தம் ஸித்திக்கிறது.
இப்படி அகாரார்த்தத்தை அருளிச் செய்து அதில் ஏறி லோபித்துக் கிடக்கும் சதுர்த்தீ விபக்தியின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் – இளக்கமில் என்றாரம்பித்து.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக