புதன், 22 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் -- டிப்பணி 4


அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன் வாழி என்றது தூப்புல் குலத்துக்கு அலங்காரமாக அவதரித்திருக்கிற நம் தேஶிகன் ஜயஶீலராகக் கடவது என்றபடி. அவன் பாதாரவிந்த மலர் வாழி என்றது ‘சேவடி செவ்வி திருக்காப்பு’ என்னுமாப்போலே நம் தேஶிகன் திருவடித்தாமரைகள் ஜயஶீலங்களாகக் கடவன என்றபடி. இத்தால் கால தத்வம் உள்ளதனையும் இத்திருவடி ஸம்பந்தச் செல்வம் செல்லக் கடவது என்றாய்த்து. ‘அவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள் வாழி’ என்றது আচার্যত্ৱোপযুক্তা என்கிறபடியே ஸமஸ்த ஸஜ்ஜனாஶ்ரயணீயதமமாகையாலே தோஷைகதேஶமும் கலசாத நம் தேஶிகனுடைய மலர் போன்ற திருவடிகளை তচ্চ সস্ম্রত্য সস্ম্রত্য என்கிற ஶ்லோகத்தின்படியே ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருக்கையாகையால் ন সশযোত্র তত্ ভক্ত পরিচর্যা রতাত্মনা என்கிறபடியே ஒரு தீங்கும் இல்லாதவர்களான সন্তমেন என்று சொல்லப்பட்ட நல்லோர்களான நைனாராசார்யர் முதலான பெரியோர்கள் திருவோலக்கம ஜயஶீலமாகக் கடவது என்றபடி. இவ்வர்த்தத்தையே விஶேஷிப்பித்து வாதூல ஸ்ரீநிவாஸா சார்யரும்

জযতি নিগমচূডা দেশিকেন্দ্রো দযাৰু:

জযতি সুমতি সেৱ্যা সোভনাতস্য সূক্তি:

জযতি শুভগুণ  শীলযন সূরিসঙ্ঘো

জযতি ৱসুমতি য তস্য সন্ত্চারধন্যা

என்று வைபவ ப்ரகாசிகா ஸ்தோத்திரத்தில் அருளிச்செய்தார்.

   ‘வாதாசனவரர்’ இத்யாதி – ‘உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனு நாளே’ என்றது திருவேங்கடமுடையான் தீர்த்தோத்ஸவத்தால் ஶ்ரேஷ்டமான புரட்டாசித் திருவோணம் என்கிற நன்னாளானது என்றபடி. வாதாசனவரரிவர் என வரு மா பாஷியம் வகை பெறு நாள்’ என்றது வேதாந்த ஶாஸ்திரத்திற்கு அத்யந்தோபயோகியான பத ஶிக்ஷையைச் சொல்லும் வ்யாகரண ஶாஸ்திரமான அருமைப் பட்ட மஹாபாஷ்யம், இத்தேஶிகர் வாதாசன ஶ்ரேஷ்டரான பதஞ்ஜலி என்னும்படி வகை பெறும்படியான நாளாய்த்து என்றபடி. வகை  என்று க்ரமத்தைச் சொல்லித்து. இத்தால் நம் தேஶிகன் மஹாபாஷ்யத்தை பதஞ்ஜலி போல் உள்ளபடி உரைப்பர் என்றதாய்த்து. வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசிஅறிந்திடு நாள் என்றது இப்படி வேதாந்தோபயோகி ஶாஸ்திரம் வகை பெறவே இவ்வேதாந்த ஶாஸ்திரத்திற்கு இந்த யுகாரம்பத்தில் ப்ரும்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு ப்ரவர்த்தகரான துழாய் முடிப் பெருமாளைப் போலே வகுளாபரணப் பெருமாளான நம்மாழ்வார் நாத முனிகளுக்கு உபதேஶிக்கையாலே நாலாயிரமும் அவர் ஸூக்தியாய் அந்தமிழான நாலாயிரத்தின் வாசியை உலகத்தார் அனைவரும் அறியும்படியான நாளாய்த்து என்றபடி.

ভাষা গীতি: প্রশস্তা ভগৱতি ৱচনাত্ রাজৱচ্চোপচারাত্ সা চাগস্ত্য প্রসূতাত্ৱিতি পরিজগ্রহে ভূমিকা ভেদ যোগ্যা | যতত্ কৃত্য শ্রুতীনা মুনিগণ ৱিহিতৈ স্সেতিহাসৈ: পুরাণৈ: তত্রাসৌ সত্ৱ সীম্ন: শ௦মথনমুনে স্সহিতা সার্ৱভৌমী: ||
என்றும், ‘இவ்வர்த்தத்தை சித்தரஞ்ஜனத்தோடே ஸர்வரையும் எளிதாகத் தெளிவிக்குமவற்றில் ஆழ்வார்கள் அருளிச்செயல் ப்ரதானம்’ என்றும், விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவுமடிமை எல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்,வண்டுவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம் பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே என்றும், இவ்வாசார்யன் தாமே அருளிச் செய்தாரிறே. ‘பேதாபேதம் பிரமம் எனா வகை பிரமம் தெளிவித்திடு நாள்’என்றது இப்படி மஹாபாஷ்யம் வகை பெற்று நாலாயிர ப்ரபந்தங்களும் வகை பெறவே ப்ரும்மம் பேதம் என்றும் அபேதம் என்றும் சொல்லாதிருக்கிறபடி ப்ரமத்தைப் போக்குவிக்குமதான நாளாய்த்து என்றபடி. ‘பேச்சொன்றுக்குச் சத தூஷணியைப் பேசிய தேசிய நாள்’ என்றது இப்படிக்கொத்த ஸித்தாந்தத்தில் குமதிகள் தூஷணம் சொல்லுமாகில் ஒரு தூஷண வாக்யத்திற்கு நூறு தூஷணத்தைச் சொல்லி அத்தூஷணம் ஸித்தாந்தத்தில் கலசாதே போகும்படி நம் தேஶிகன் பேசுகையால் தேஜஸ்ஸையுடையதான நாளாய்த்து என்றபடி. அன்றிக்கே ஒன்று  என்ற பேச்சுக்கு  அதாவது அத்வைத மதத்திற்கு, அதாவது அதை நிரஸிப்பதற்காக ஸ்ரீஶத தூஷணியைச் செய்யுமதான நாள் என்னவுமாம். ‘தீதாகிய பல மாயக்கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்’ என்றது மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே வேண்டும் கால் வேண்டுவதே விளம்புமதுகளாகையால் நன்மை பெறாதே தீதாகியதுகளாய் அனேகங்களான மாயா மதாதி சமயக் கலைகளை ஒரு க்ஷணத்தில் ஜயிக்கும்படியான நாள் என்றபடி. இத்தால் குமதிகள் கூடி அஹோராத்திரம் உபந்யஸித்தாலும் நம் தேஶிகன் ஒருத்தரமாய் அருளிச் செய்து அவ்வுபந்யாஸங்களை நிரஸிக்க வல்லார் என்றதாய்த்து. திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்’என்றது ஸரஸ்வதி ஶிரஸா வஹித்தபடியினால் திகந்த வ்யாப்தையான கீர்த்தி பெற்ற ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீ தத்வ டீகாதிகளால் நம் தேஶிகன் தெளிய அருளிச் செய்யும் நாளாய்த்து என்றபடி. ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள் என்றது செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகையால் மற்றவர்களால் ஓதப்படாததுகளான வேதபாகங்களையும் ஓதுமவரான வேதாந்த தேஶிகன் திருவவதாரம் செய்திடு நாள் என்றபடி. இத்தால், ধর্ম সস্থাপনার্থায সভৱামি যুগে যুগে என்கிறபடியே நம் தேஶிகனாய் திருவவதரித்து ஸத்துக்கள் நெஞ்சாறல் தீரும்படியாயும், அஸத்துக்கள் நெஞ்சாறல் படும்படியாயும் எம்பெருமானே செய்தருளினான் என்றதாய்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக