வியாழன், 23 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான டிப்பணி

 

கடந்த சில தினங்களாக ஸ்ரீ சேட்லூர் ஸ்வாமியின் ப்ரபந்தானுஸந்தான க்ரம வ்யாக்யானத்தையும், அதன் அனுபந்தமாக ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யாரது வாழித் திருநாம வ்யாக்யானத்தையும் இங்கு அந்நூலில் கண்டபடியே மணிப்ரவாளமாகவே எழுதிவந்தேன். Windows XP மற்றும் Windows 7 பயன்படுத்துபவர்கள் க்ரந்த லிபிக்கு நான் பயன்படுத்திய EgranTamil font இல்லாமையால் அந்த இடங்களிலெல்லாம் எழுத்துருக்களுக்கு பதிலாக கட்டங்கள் வந்தும், XP காரர்களுக்கு  தேசிகன் ‘ஶ’ (sha) தெரியாததால் கூடுதல் கஷ்டங்களும் ஏற்பட்டிருக்கும். அந்த நாளில் வந்தபடியே எழுத வேண்டுமா அல்லது இன்று க்ரந்தம் தெரியாதவர்களும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டுமா என்ற கேள்வி முதலில் என்னுள் எழுந்தது. ஒரு ஆசைக்கு அப்படியே எழுதுவோம் feedback அடிப்படையில் தொடர்வதை முடிவு செய்வோம் எனத் தீர்மானித்து மணிப்ரவாளத்தைத் தொடர்ந்தேன். மும்மூர்த்திகளாய் ஸ்ரீசடகோபன் ஐயங்கார் ஸ்வாமி, ஸ்ரீ முகுந்தன் ஸ்வாமி, ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமி (கம்ப்யூட்டர் தோற்று விடும் வேகம்) திருத்தி உதவிட அது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஆச்சரியமாக , வழக்கமாக 20 அல்லது 30 பேரே படித்துக் கொண்டிருந்த இந்த வலைக்கு மணிப்ரவாளம் எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை தினமும் சுமார் 800 பேர் வருவதாக என் statcounter சொல்கிறது. ஆகவே இதைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

இதுவரை எழுதியதை சரியாகப் படிக்க முடியாதவர்களுக்காக டிப்பணி முழுவதும் பிடிஎப் ஆகப் படிக்க இங்கு

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் prabanthanusanthana kramam வாழித் திருநாமம் வ்யாக்யானம் PBS1

1 கருத்து:

  1. மணிப்ரவாளச் சொற்களுக்கு பொருள் அல்லது அகராதி இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்..sivananda.thirumalai @gmail.com

    பதிலளிநீக்கு