செங்கமலத்தயன் இத்யாதி ---.,பார் திகழ் பாத்திரபதத் திருவோணம் எனும் திருநன்னாளே என்றது ভুৱনস্য মদ্ধ্যে என்று உபநிஷத்துச் சொல்லுகையால் இப்பூமி உள்ளளவும் ப்ரஸித்தமாய் ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிற திருவேங்கட முடையானுடைய தீர்த்தோத்ஸவ தினமான பாத்ரபதத் திருவோணம் என்கிற திருநன்னாளானது என்றபடி. பாத்ரபதம் என்று மங்களகரமாகையால் வெறுநன்னாளாகாதே திருநன்னாளாய்த்து. செங்கமலத்தயன் அன்னவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள் என்றது.
সতত௦ সঙ্কুল௦ শ্রীমত্ ব্রহ্ম কল্পৈ: মহাত্মভি: என்றும், திசைமுகனனையோர் நாங்கை நன்னடுவுள் என்றும், செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் என்றும், வாழ்தொல் புகழார் குடந்தை என்றும் சொல்லுகிறபடியே மஹாத்மாக்கள் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவரான செம்மை மிக்க அந்தணராகையால் அவர்களே திசை முகன் அனையோர்கள் என்றும், தொல் புகழர்கள் என்றும் சொல்லுகையாலே அப்படிக் கொத்த செங்கமலத்தயன் அன்னவர்களான பெரியோர்கள் கால த்ரயத்திலும் ஸ்தோத்திரம் பண்ணி ஸந்தோஷிக்கும்படியான நாளாய்த்து என்றபடி.
জাতস্সন: সন্তারযিষ্যতি என்றும் কলৌ খলু ভৱিষ্যন্তি নারাযণ পরাযণা: என்றும் பொலிக பொலிக என்றும் சொல்லக் கடவதிறே. சீர்கொள் இராமானுசவெனும் மந்திரம் பதிகளில் வாழ்ந்திடு நாள் என்றது எம்பெருமானும் பிராட்டியும் கேட்டு மகிழும்படி சீர்மைபெற்ற ராமானுஜ தயாபாத்ரம் எனும் அநாத்ய வித்யாபிஶாசோச்சாடனக்ஷம மந்திரமானது அழகிய மணவாளன் நியமனப்படிக்கு கோயில் முதலான திவ்ய தேஶங்களில் அனுஸந்திக்கப் பட்டு ஜயஶீலமாம்படியான நாளாய்த்து என்றபடி. செங்கயல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த அரங்கர் சிறந்திடு நாள் என்றது திருவரங்கத் திருப்பதியில் ஆழ்வார்கள் அர்ச்சனா ஸ்தாபனத்தையும் திருவத்ய யனோத்ஸவத்தையும் பரவாதிகளால் தடுக்கப் பட்டிருந்த ஸ்ரீரங்கநாதனுடைய நித்யாராதனத்தையும் என்றும் அவ்யாஹதமாய் நடப்பிவிக்கும்படி நம் தேஶிகன் ப்ரதிமத நிரஸனம் பண்ணினாராகையால் நிலம் பொருந்தின திருவரங்கத்தம்மானான அழகிய மணவாளனும் மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர்களோடே சிறந்து வாழும்படியான நாளாய்த்து என்றபடி. சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடு நாள் என்றது ப்ரபத்தியே உபாயம் என்று திருக்கச்சி நம்பிக்கு அருளிச் செய்த திருவுள்ளத்தை திருமந்திராதி வேதாந்த ஶாஸ்திர வ்யாக்யான முகத்தாலே உலகத்தார் அறியும்படி நம் தேஶிகன் ப்ரகாஸிப்பிக்கையால் ‘ அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்’ என்னும்படிக்கு அப்த பூர்த்தி உத்ஸவத்தில் விஶேஷ கடாக்ஷம் செய்தருளினவராய் ஸிந்துராசல மத்யத்தில் ப்ரவேஶித்து ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிற ஶ்ரிய:பதியான பேரருளாளர் ஸித்த ஸங்கல்பராய் வாழ்ந்திடும்படியான நாளாய்த்து என்றபடி. தெங்கொடு மாங்கனி தேன்சுனை வேங்கடத்தீசர் பிறந்திடு நாள் என்றது தேங்காய் மாங்கனி தேன்கள் சூழ்ந்த சுனைகள் பொருந்தின திருவேங்கடத்திற்கு ஈசரான திருமலையப்பன் திருவவதரித்த நாளாய்த்து என்றபடி. நம் தேஶிகன் திருமணியாழ்வாரின் அவதாரம் என்னப்பட்டபோதிலும் அதை வ்யாஜமாகக் கொண்டு திருவேங்கடமுடையானே அவதரித்தபடியினால் ஸாக்ஷாத் அவதாரம் என்னத் தட்டில்லை. சீர் மதி ஆகம மௌலி தந்தேஶிகர் பிறந்து வளர்ந்திடு நாள் என்றது அவ்யாஹதமாய் ஸதஸத் விபஜனம் பண்ணும்படி சீர்மை பெற்ற மதி விஶேஷத்தையுடைய வேதாந்த தேஶிகர் திருவவதரித்து அபிவ்ருத்தராகும் படியான நாளாய்த்து என்றபடி. ‘கூர் மதியீர் எள்ளத்தனை யுகவாதிகழா தென்னெழில் மதியே’ என்னக் கடவதிறே. பங்கய மாமலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள் என்றது பத்மாஸனையான பெரிய பிராட்டியாருடைய விபுத்வ உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குணங்களையும் அஜ்ஞர்கள்கூட அறியும்படி ப்ரகாஶிப்பிக்குமதான நாளாய்த்து என்றபடி. ‘ஒன்று மூன்றெழுத்தாய் ஒன்றும் ஒன்றில் ஒன்றுடைய முன்னே ஒன்றிய இரண்டை உள்ளி உளரென உய்மினீரே’ என்னக் கடவதிறே.
இத்தால் நம் தேஶிக ஸ்ரீஸூக்திகளால் தெளிவுடையவராய் ஸ்வரூப ஜ்ஞானம் பெற்று உபாயத்தை அனுஷ்டித்து புருஷார்த்தத்தை அடையும்படியான ஶக்தியில்லாத சேதனர்களையும் கேட்பது மாத்திரத்தினாலே உபாயானுஷ்டான பூர்த்தியை உண்டாக்கி புருஷார்த்தத்தைக் கொடுக்கும் மஹா மந்திரம் রামানুজ দযাপাত্র௦ என்றும் அம்மந்திரத்துக்கு விஷயமான நம்தேஶிகனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தர்ஶனமும் , திவ்ய சரித்திர ஶ்ரவணமும், திவ்ய கல்யாண குண த்யானமும் அம்மந்திரத்தைப் போலே உபாயானுஷ்டானத்தை உண்டாக்கி புருஷார்த்தத்தைக் கொடுக்கும் என்று சொல்லிற்றாய்த்து,
very useful kainkaryam.awaiting pdf also. Thanks,Rgs Veeraraghavan
பதிலளிநீக்கு