Saturday, June 18, 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் -- டிப்பணி 2

நேற்று வெளியிட்ட டிப்பணி ஒரு சோதனைக்காக -- க்ரந்த லிபியில் வெளியிட்டால் சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தால் --  இடப்பட்டது.  ஆனால்  பலரிடமிருந்து அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடியேனைத் திருத்திப் பணி கொள்ள மாறன் சுடராழி க்ருபை ஆகிய மூவரும் தயாராய் அப்பொழுதுக்கப்பொழுது பிழைகளையெல்லாம் சரி செய்து உதவும்போது, அடியேன் இனி தயக்கமில்லாமல் தொடர்ந்து டிப்பணியை இங்கு இடுவேன்.  இனி டிப்பணி மீண்டும் முதலிலிருந்து


ப்ரபந்தானுஸந்தான க்ரம டிப்பணி

1.  ஸர்வதேஶ தஶா காலேஷு அவ்யாஹத ப்ராக்ரமா  என்றது ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தைகளிலும் நித்யமாகச்  செல்லுகிற  பராக்ரமத்தையுடைய  என்றபடி. ‘ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா’ என்றது இப்படித்  திருவத்யயனோத்ஸவ பக்த  விக்ரஹ ப்ரதிஷ்டாதிகளைக்  கோயில் முதலான  திவ்ய தேஶங்களில் செய்யும்படி நியமித்தருளின எம்பெருமானாருடைய  திவ்யாஜ்ஞை என்றபடி. ’வர்த்ததாம்  அபிவர்த்ததாம்’ என்றது ஸர்வ தேஶங்களிலும் நித்யமாக அபிவ்ருத்தி அடையக்கடவது என்றபடி.

வாழித்திருநாமத்திற்கு இங்கு ப்ரசுரிக்கப்படும் வ்யாக்யானம் ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யர் அருளிச் செய்தது.

’ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி  வாஸர முஜ்வலா திகந்த வ்யாபிநீபூயாத்’ என்றது எம்பெருமானாருடைய திவ்யாஜ்ஞையானது ப்ரதி தினம் அபிவ்ருத்தையாய்க் கொண்டு திகந்தங்களிலும் செல்லக்கடவது என்றபடி. ’ஸா ஹி லோக ஹிதைஷிணி’  என்றது விதை முளையின் நியாயத்தால் அடியில்லா வினையடைவே சதையுடலம் நால் வகையும் சரணளிப்பான் எனத் தவிழ்ந்து பதவி அறியாதே பழம் பாழில் உழலுகிற ஜனங்களுக்கும் அந்தத் திவ்யாஜ்ஞையே திவ்ய தேஶ திவ்ய ப்ரபந்த நிர்வாஹாதிகளால் தத்வ ஹித புருஷார்த்தங்களைத்  தெளியும்படி செய்து ஹிதத்தைப் பண்ண வேணும் என்ற இச்சையையுடையது  என்றபடி.

’ஸ்ரீமந் ஸ்ரீரங்க ‘  என்றது பிரிவற்ற சேர்த்தியையுடைய பெரிய பிராட்டியையுடையவரே! ஆகையினால் நித்ய ஸ்ரீயான அழகிய மணவாளனே! என்றபடி. ஶ்ரியம்” என்றது இப்படிக்கொத்த  ஸ்ரீவைஷ்ணவ  ஸம்ருத்தி ரூபமான ஸம்பத்தை என்றபடி. ”அனுபத்ரவாம்’ என்றது அநீஸ்வர அத்வைதாதி  வாதிகளாலும் துர்ஜ்ஜனாதிகாரிகளாலும்  உண்டாகிற  உபத்திரவம்  நமக்குப் பின்பு ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தில் கலசாதே  இருக்கும் படியாக என்றபடி.  ’அனுதினம் ஸம்வர்த்தய’ என்றது ’தொக்க அமரர்கள்   குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்’ என்னும்படி முளைத்த கொடி விளாக்கொண்டு படருமாப்போலே இஸ்ஸம்ருத்தியும் நித்யாபிவ்ருத்தமாம்படி பண்ணியருள வேண்டும் என்றபடி. அன்றிக்கே ‘ஸ்ரீமந்’ என்று ஸம்போதித்து ’ஸ்ரீரங்க ஶ்ரியம்’  என்று அந்வயிக்கவுமாம்.  அப்பொழுது অত্র্রৈৱ শ্রীরঙ্গেসুখমাস্ৱ  (அத்ரைவ ஶ்ரீரங்கே ஸுகமாஸ்வ)’ என்கிற இடத்தில்போலே ஸ்ரீரங்க ஶப்தம் பகவத் பாகவத அதிஷ்டித திவ்ய தேஶ ஸாமாந்ய வாசகமாய் அந்த ஸம்பத்தின் ஆனுஷங்கிகமாய் ஸ்ரீவைஷ்ணவ ஸம்பத்தையும் சொல்ல வேண்டும். இவ்விரண்டு யோஜனைகளையும்  நம் ஆசார்யர்கள் அருளிச் செய்வர்கள்.  

    வேதாந்தார்த்த ப்ரதாயிநே’ என்றது திருமந்திர  மந்திரார்த்த  பாஷ்ய பகவத் விஷயாதி ஸர்வோபதேஷ்டாவான  என்றபடி. ’ஆத்ரேய பத்மனாபார்யஸுதாய’ என்றது கிடாம்பி ஸ்ரீரங்க ராஜருடைய குமாரரான  என்றபடி. ’குணஶாலிநே’  என்றது  ஸத்குண பூர்ணரான  என்றபடி. ’ராமானுஜார்யாய’ என்றது அப்பிள்ளார்  பொருட்டு  என்றபடி. ’நம:’  என்றது இவ்விபவம்  எல்லாம் அவர்  கடாக்ஷத்தால்  வந்ததாகையினால்     அவரையே ஶரணம் அடைகிறேன்  என்றபடி.  ‘யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணம்  எங்கள் வார்த்தையுள் மன்னியதே’ என்னக் கடவதிறே.  (இங்கு  ইতি যতিরাজ মহানস পরিমৰ পরিৱাহ ৱাসিতাম্  ৱিবত’ என்றதையும்  ‘கிடாம்பிக் குலபதி அப்பிளார்  தம் தேமலர்  சேவடி சேர்ந்து    பணிந்தவர்  தம்மருளால்    நாவலரும்  தென்வடமொழி  நற்பொருள்  பெற்ற  நம்பி ‘  இத்யாதிகளையும்  அனுஸந்திப்பது.)      ’இராமானுசப் பிள்ளான்  மா  தகவால்  வாழு  மணி  நிகமாந்த  குரு வாழி’  என்றது  அப்பிள்ளார்  பரம  க்ருபையாலே  அபிவ்ருத்தரான  ஸர்வாலங்கார பூதரான  நிகமாந்த  மஹா தேஶிகன்  ஜயஶீலராகக் கடவது  என்றபடி.  அன்றிக்கே  ’இராமானுசன்’   எம்பெருமானாராய், ’பிள்ளான்’  திருக்குருகைப்  பிரான் பிள்ளானாய், அவர்களுடைய  பரம க்ருபையாலே  என்னவுமாம்.  [தர்ஶந  ப்ரவர்த்தகர்  என்கிற  ஏற்றம்  பெற்றவரும்,  பெரிய  முதலியாருடைய  திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம்  அருளிச்  செய்தவருமான  எம்பெருமானாருடையவும் பகவத் விஷய  ப்ரவர்த்தகரான   திருக்குருகைப்  பிரான்  பிள்ளானுடையவுமான  க்ருபையினால்  வாழ்ந்தபடியினாலேயிறே  உபய வேதாந்தாசார்யர்   என்பது  இவர் ஒருவரிடமே  அந்வர்த்தமாய்  நின்றது.  இத்தால்  ஸத்பாத்திரத்தில்  வினியோகிக்கும்படி  ஆச்சான்  பிள்ளானுக்கு  நியமித்தருளின  எம்பெருமானார்  சரமோபதேஶம்  சொல்லித்தாய்த்து.  ’அவன்  மாறன்  மறையும்  இராமானுசன்  பாஷியமும்  தேறும்படி  உரைக்கும்  சீர் வாழி’  என்றது   நாத முனிகளுக்கு  அருளிச் செய்கையாலே  நாலாயிரமும்,  மாறன் மறையாய்  அதில் நூற்றந்தாதி  சேர்ந்ததாகையினால் அந்நாலாயிரங்களையும்  ’இராமானுசன்  பாஷியம்’  என்றதால்  ஸ்ரீ  பாஷ்யாதி  ஆசார்ய  ஸமஸ்த  திவ்ய ஸூக்திகளையும்  உபலக்ஷித்து  உபய வேதாந்தார்த்தங்களும்  இவ்வுலகத்தில்  பெருமை பெறும்படி  அவைகளை ஸார்த்தமாக  உபதேஶித்தருள்கிற  அந்தத் தேஶிகனுடைய  சீர்மை  ஜயஶீலமாகக் கடவது  என்றபடி.  [இத்தால்  தங்களை  எம்பெருமானாருடைய  திருவடி  ஸம்பந்திகள்  என்று  சொல்லிக்கொண்டு  ভাষ্য௦  তু পররঞ্জন௦  (பாஷ்யம் துரரஞ்ஜனம்) என்றிவை  முதலிவைகளிற்படியே ஸ்ரீபாஷ்யம்  பர ரஞ்ஜனார்த்தம் என்றும்,,  ஸ்ரீ கீதா பாஷ்யம்  வேண்டாச்சுமை  எடுப்பிக்கைக்காகவும்  என்றும்,  ஸர்வேஶ்வரன்  அவதரித்தாப் போலே  திருவவதாரம்  செய்தருளிய ஆழ்வாரை  நித்ய  ஸம்ஸாரி  என்றும் சொல்லுமவர்கள்  ஆழ்வார் எம்பெருமானாருடைய  பெருமையை  வெளியிடுமவர் களன்று   என்பது  தெரிவிக்கப் பட்டதாகிறது.  ஸ்வாமி  தேஶிகன்  ஒருவரேயிறே  உபய வேதாந்தார்த்தங்களும்  ஒரே அர்த்தத்தை  வெளியிடும்  ப்ரகாரத்தை    দেৱ: শ্রীমান শ্ৱশিডে:করণমিতি ৱদন্নেকমর্থ௦ ,  স্ৱপ্রাপ্তে স্সাধন௦ চ  স্ৱযনিতি হি পর௦ ব্রহ্ম তত্রাপি চিত্যে௦  இத்யாதிகளிலே  நிரூபித்து, அவற்றில் சித்த ரஞ்ஜனத்தோடே ஸர்வரையும்  எளிதாகத் தெளிவிக்கும்  ஏற்றம்  முதலியவைகளைக் கடாக்ஷித்து  த்ரமிட  வேதங்கள்  ஸம்ஸ்க்ருத  வேதங்களை விட  உத்க்ருஷ்டங்கள்  என்பதை  শ্রুতি পরিষদি তস্যা௦ সளরভ௦ যোজযন্তি ” শ্রুতীনা௦ ৱিশ্রমাযাল௦ শঠারি௦ ‘ প্রাচীনানা௦ শ্রুতি পরিষদা௦ পাদুকে পূর্ৱগণ্যা’ என்றிவை  முதலியவைகளில்  அருளிச் செய்தது என்றபடி  ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரத்தில்  இவ்வர்த்தங்கள்  ஸத்ஸம்ப்ரதாயத்தோடே ஸ்ரீபாஷ்யத்தைச் சிர  பரிச்சயம்  பண்ணின  ப்ராஜ்ஞர்களுக்கல்லது  நிலமாகாது  என்றது  இங்கு அனுஸந்தேயம்]         இவ்வர்த்தத்தையே  விவரிக்கிறார்.  – “வஞ்சப் பல சமயம்”  இத்யாதி.  வஞ்சப் பல சமயம் மாற்ற வந்தோன்  என்றது வஞ்சகங்களான  பஹு ஸமயங்களை  மாற்றுகைக்காக  வந்தவர்  என்றபடி.  மன்னு புகழ்ப்  பூதூரான்  மனமுகப்போன்  என்றது  அவர் ஸித்தாந்தத்தை  வளர்க்கையாலே  ‘தேசமெல்லா முகந்திடவே  பெரும்பூதூரில்’  என்னும்படி  ஸ்திர கீர்த்திகளையுடைய  ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த  எம்பெருமா னாருடைய  திருவுள்ளத்தை  உகப்பிக்குமவர்  என்றபடி.  கஞ்சத்திருமங்கை உகக்க  வந்தோன்   என்றது  இராமானுஜன்  ஶ்ரிய:பதியின்  வைபவத்தைப்  பரக்க  வெளியிட்டாப்போலே  ராமானுஜ தயா பாத்ரரும்  ஸ்ரீயின்  வைபவத்தைப் பரக்க  வெளியிட்டாராகையால்  பத்ம வாஸினியாய்  நாரீணாம்  உத்தமையுமான  பெரிய பிராட்டியார்  உகக்கும்படி  வந்தவர்  என்றபடி.  கலியனுரை  குடி கொண்ட கருத்துடையோன்  என்றது கலியன் உரையான நமஶ் ஶப்தார்த்தமான  திருமொழி, ஶரணாகதி ப்ரதிபாதகமாகையினால் அத்திருமொழி ப்ரதிபாத்யமான ந்யாஸ  வித்யையில்  குடி கொண்ட  நெஞ்சினரானவர்  என்றபடி.  செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன்   என்றது  செஞ்சொல்லான  தமிழ் மறைகளை  அபாதிதமாகத்  தாம்  தெளிந்து  மற்றவர்களும்  தெளியும்படி  அருளிச் செய்யுமவர்  என்றபடி  শঠচিট্কলিধ্ৱ௦সিমুখ্যোদিতানা௦| অৱিচ্ছিন্নসত্স௦প্রদাযার্ধৱেদি গুরুর্ৱেঙ্কটেশ: என்னக் கடவதிறே.  திருமலைமால் திருமணியாய்ச்  சிறக்க வந்தோன்   என்றது  திருமலையில்  நின்ற  திருவேங்கடமுடையானுடைய  திருமணியாழ்வார்  அவதாரமாய்  இவ்வுலகு  சிறந்து  வாழும்படி  வந்தவர்  என்றபடி..  ঘণ্টাহরে স্সমজনিষ্ট যদাত্মনেতি என்னக் கடவதிறே.  ............................. (தொடரும்)