திங்கள், 13 ஜூன், 2011

நம்மாழ்வார்

இன்று நம்மாழ்வார் அவதரித்த திருநாள். உலகமெல்லாம் அவரைக் கொண்டாடி மகிழ்கின்ற நன்னாள். அப்படி உலகெலாம், லக்ஷோபலக்ஷம் பேர்களை அவர் அனுக்ரஹிக்க வேண்டியிருப்பதால், அவரை இந்தத் திருப்புல்லாணியிலாவது கஷ்டப் படுத்த வேண்டாமென்று இங்கு ஒரு விசேஷமும் நடக்கவில்லை. அவரை ஏகாந்தமாக அவர் சந்நிதியிலே, திருக்கதவைக்கூடத் திறக்காமல் , அவரை சிரமப்படுத்தாமல் இருந்துவிட்டோம். அவரோ எப்போதும் ஸ்ரீமந் நாராயணனுடன் நித்யவாசம் செய்பவர், எனவே இன்று ஒரு நாள் ஏன் மங்களாசாசனம் ! அதுவும் வேண்டாம் என்று இருந்து விட்டோம். அவரை எங்கள் பக்கம் திருப்பாமல் இருந்தமையால் உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் அவரை நன்றாக அனுபவித்திருப்பார்கள், அவரது திவ்ய கடாக்ஷத்திற்கு பாத்திரமாயிருப்பார்கள் என்ற எங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுவீர்கள்தானே?

2 கருத்துகள்:

  1. :)
    //எங்கள் நல்லெண்ணத்தை பாராட்டுவீர்கள்தானே?//

    Nopes!

    ஆழ்வாரைக் கிளப்பி அருகே இருக்கும் ஒரு ஜீவனுக்காவது அறிமுகப்படுத்த வேண்டாமா?

    எம்பெருமான் அணுக்கத்தை ஆழ்வார் விரும்பினாலும், அதை விட, விட்டுப் போன குழந்தைகள் அவனிடம் சேர வேண்டும் என்பதல்லவோ அவர் உள்ளக் கிடக்கை!

    அவரை இந்நாளில் பூடி வைப்பது தகுமோ? மானைக் கொண்டே மானைப் பிடிக்க வேண்டாமோ?:)

    அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
    அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே!

    பதிலளிநீக்கு
  2. அது வெளியில் நிற்கும் எங்களுக்குப் புரிகிறது. அணுக்கத்தில் இருக்கும் அவர்களுக்கு, ? யாத்திரைக் கூட்டம் நிறைய வருகிற நேரத்தில் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு