வெள்ளி, 6 நவம்பர், 2009

வெயில்பொழி குழைக் காதனே!

திருவருட்சதகமாலை
உலகுதனின் மழலையஞ் சொற்குழவி கைதலத்
          துன்பது கொடுத்த தனிலே
         ஒருசிறிது வளருமக் குழவிபா லிக்கவு
        முகந்துடன் கவரு மவர்போல்
அலகிலா மானிடர்க் கூழ்மறையின் வாழ்வருளி
        யவர்கள்சில பொரு ளுதவவே
       அப்பொருள் களைத்தினங் கைக்கொள்வ தவரிடத்
       தன்பினா லல்லவோ காண்

சலசலென வருமருவி முழவதிர முதுமந்தி
       தாளத்தர் போலக் கரம்
      தட்டக் கருங்குயிர் சுரமான தித்திநா
      தங்கூட்டி வண்டு பாட
விலகிவில் லுமிழ்மேனி மயிலாட மலரம்பொன்
       வேங்கைசொரி யுரகா சலா
       மென்கமல பாதமலர் மேன்மங்கை நாதனே
       வெயில்பொழி குழைக் காதனே                                             .1.

கண்மலரை யிலகுதன் விழிமலரி லிட்டவிரு
       காலினொரு விற் படையுடைக்
      கரவேட னுக்குகந் தன்றுதன் பதமுதவு
       கறைமிடற் றவனு நாண
மண்மலரை யுன்சரண மலரிடுகு லாலற்கு
        மாமுத்தி வாழ் வருளினாய்
        வந்தடிய ரெப்பொருள் கொடுத்தாடு முன்போல
        மகிழ்வுறுந் தேவ ரெவர்காண்
தண்மலர் நறுந்தொடையல் சொருகமன காடவிச்
          சவரமங் கையர் செங்கையால்
          தகைகெழு கழங்காக வாடல்புரி நீலமணி
         சஞ்ச ரிக்குல மென்னவே
விண்மலர் நறுங்கற்ப தருமேல் விழிந்திழியும்
         வேங் கடாசல நாயகா
        மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                              .2.

நீதந்த பிரபஞ்ச வனமதனு னெறியலா
          நெறிசென் றுவளர் பாவமா
          நிகழ்தாவ வனல்சுடச் சித்தாகி ராதசர
         நிரைவந் துதைத் துருவியே
நோதந் தலைக்கவும் வேரியங் குழன் மகளிர்
         நோக்கெனும் படு குழிவீழ
        நொந்தங்ங னேகிடக் கின்றதென் மனயானை
        நோய்துடைத் தேறிக் கொளாய்
மாதந்த மும்மதக் கறையடித் தழைசெவியின்
        மத்தமா விட ரகலவே
       மலைமுழைப் பேழ்வா யிடங்கரடு சுடர்நேமி
       வலனேந்து மென் சாமியே
வேதந்த தரளம்வான் மீனைப் பழித்திலகும்
          வேங்கடா சல நாயகா
         மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
         வெயில்பொழி குழைக் காதனே.                                            .3.


வாரியி னிடத்தோல மிட்டுவரு கடவுணதி
         வகைபோல வுன்பால் வரும்
         மனிதர்திரள் கோவிந்த மிட்டெழும் பேரோசை
        மழையொலிய விப்பதன்றிப்
பாரிலறி வற்றசனர் செவியினு நுழைந்துளம்
       பயில்பாவ வனலு மவியப்
      பண்ணுமப் பெயருடைய வுன்மகிமை யெம்மைப்
      படைத்தவனு மோதறி வனோ
கூரிய மருப்புடைக் கவயமடி யாகிய
      குடங்கொண்டு சொரி நறியபாற்
     கொள்ளையும் பிள்ளைமதி யின்கொம் புழப்பணைக்
     கொம்பிறால் விண்டு தூவும்
வேரியு மலைக்கங்கை சேர்பொன்னி யிற்பெருகு
       வேங்கடா சல நாயகா
      மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
      வெயில்பொழி குழைக் காதனே.                                                   .4.

நீமேவு திருமலையி லஞ்சாயன் மயிலாடு
         நிலைகுருடர் காண வறுகால்
        நிரையிம் மெனப்பாடு மிசைசெவிடர் வினவவந்
        நீர்மைகண் டூமை புகழ
மாமேவு கைப்பொருள் பறித்தோடு நெடியவான்
           மந்திபின் பங்கோ டவே
          மண்ணுலகி னீலீலை பண்ணுவாய் சாமியுன்
          மாயையா ரறிய வல்லர்
தீமேவு கண்ணுதற் கடவுளுங் குறுநகைத்
         திசைமுக மறைக் கிழவனுந்
        திகழும்வள ரொளிவச்சிர தரனுமமு தாசனத்
        தேவர் குலமுந் தொழுதுதூம்
மீமேவு கற்பகக் கொழுவிய தடம்பணையின்
         விரிமலர் சுமந்து மெலியும்
       மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                                      .5.

அனவரத மபசார மேசெயு மிளங்குழவி
         யதனிடத் தாதரவு செய்
         தம்மகவின் மழலைசொல் வினவிமகிழ் தாயர்போ
        லாயிரங் குற்றங் களைத்
தினமுமொழி யாதுபுரி கொடியே னிடத்தினுந்
           திருவருட் பார்வை வைத்துச்
          செப்புசொல் பொருள்வழுவு தழுவுமென் புன்கவி
         செவிக்கொண்டு மகிழ்வெய் துவாய்
தனதுதெளி புனலினைக் கண்டோரு மப்புனற்
            றவழ்கால் படப்பெற் றபேர்
          தாமுமா நந்தகர முத்திபெற வைத்துவிடு
         தண்டுறைக் கோனே ரியாய்
வினதைசுத னெதிர்நின்று தொழவவற் கெந்நாளும்
       விழியினருள் பொழிமே கமே
       மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                                        .6.

நாடுதுதி செயுமுன் மலைக்கேக வேணுமென
       நாடியோ ரடி வைக்குமுன்
      நாடுவிட் டோடுமவர் பாதக மனைத்துமுன்
     னன்மலைப் படியே றினோர்
பீடுடைய தெய்வத விமானமே றுவருன்
      பெருங்கோயி றனில் புக்கபேர்
      பிரமனுல கிற்புகுவ ருன்னடி தொழப்பெற்ற
      பேர்முத்தி பெறுவர் கண்டாய்
தாடகா சீவாப காரகன கீர்த்திவித்
       தாரகன காத்திரி தீரா
       சகலசக தாதார தீனசன மந்தார
      தர்மரகு குல விகாரா
ஆடக கிரீடகத் தூரிதிலக லலாட
       வசுரகுல களவி பாடா
      அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
      வனந்தரவி சங்கா சனே.                                                                   .7.

முகரித்த ரங்கத்தை வீசிவரு முனதுபொன்
          முகரியு மகன்ற நெடுவான்
          முகடுதொடு குவடுடைய வடமலையு மக்கிரியின்
          முச்சகமு மற்பு தமுறும்
நிகரிலுன் பொற்கோயி லழகையுங் காணிலோ
           நித்ய சூரியர் விரசையும்
          நிரதிசய பரம்பத மணிமண்ட பத்தையு
          நினைத்துமீ ளப்போ வரோ
மகரகுண் டலகர்ன மகனீய சுரசமய
        வசனகன நீல வர்னா
        வனமாலி காபரண வரவிபீ ஷணசரண
        மஞ்சுமஞ் சீர சரணா
அகிலலோ காதீத பஞ்சபாண் டவதூத
        விகணித மகாவி நோத
       அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
        வனந்தரவி சங்கா சனே.                                                             .8.

தெண்டிரையை யெறிகங்கை முதலான புண்யந்தி
           தீரத்தி னாலு மறையும்
          தினமோது நாவுமதி சயவேள்வி நூறும்விதி
          செய்தகை யிணை யாகுநாள்
முண்டகமு முளவிப்ர னாகிவாழ் தலினுனது
        முதியகிரி யிற்கிரு மியாய்
         முளைத்தெழும் புல்லா யிருத்தலே நன்றெளிதின்
          முத்திபெற லாமுண்மை காண்
புண்டரிக லோசனா பவநாச னாவிதுர
        போசனா கருடா சனா
        புருகூத வந்தனா கனசிந்து பந்தனா
         புண்யதே வகி நந்தனா
அண்டக வளர்க்கிரா சதாருசம் பரநாச
        வாநந்த நிலய வாசா
        அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
         வனந்தரவி சங்கா சனே.                                                        .9.

கமலமகண் மார்பினி லடங்க விதி யுந்தியங்
       கஞ்சப் பொருட் டடங்கக்
       கடல்சுற்று மண்ணுலகும் விண்ணுலகு முன்னிணைக்
       காலினு ளடங்க வண்டம்
விமலமா முதரத் தடங்கப் படைத்தநீ
      வீறுதே வகி வயிற்றும்
      மெய்யடியர் நெஞ்சினு மடங்கிநின் றனையுன்
     விநோதத்தை யோத வசமோ
சமரசித தூஷணா ம்ருதுபாஷ ணாருசிர
         தரகௌத் துவபூ ஷணா
        சத்யசா ரித்ரவசு தேவவர புத்ரவதி
        தர்மயது குலப வித்ரா
அமிதகரு ணாகரா லலிதகுண சாகரா
         வகிலதா னவ பீகரா
        அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
        வனந்தரவி சங்கா சனே.                                                       bsp;   .10.

காகா சுரற்குமருள் செய்தகண் மலருமொரு
        கல்லினுக் குதவி புரிதாட்
       கடிமலரு மலகைமுலை பொழிகரள மங்கீ
       கரித்தவாய் மலகு நெடுவான்
மேகாட விச்சிலா வருடந் தவிர்க்கமுரண்
       வெற்பைச் சுமந்த கரமாம்
      மென்மலரு முடையநீ பொல்லாத வெனையாளல்
     விகிதமே யினியாட் கொள்வாய்
நாகாரிவாகனா கனசகன மோகனா
     நானா கவன தாகனா
     நந்தகுல பரிபால சங்கீத லோலவபி
     நவகனக மயது கூலா
ஆகாச சந்நிபா காரவது லிதவீர
     வகிலலோ கோப காரா
    அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
     வனந்தரவி சங்கா சனே.                                                     .11.

---- [ பொற்களந்தைப்பதி முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார்
                                                        .......திருவேங்கடத்தான் பதிகம்]

........................................................... முன்னுரை தொடரும்............................

                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக