வியாழன், 11 ஜூன், 2009

மதுரையம்பதி

எழுதுவது என்பது மிகப் பெரிய கலை. எப்போதுமே அடியேனுக்கு வசமாகாத ஒன்று. மிக எளியவற்றைக்கூட அடியேன் எழுத்து படிப்பவர்களுக்கு பெரும் குழப் பத்தை ஏற்படுத்தி அவர்களை ஒரு வழியாக்கிவிடும். இது என்னுடைய வலைப்பூ விற்கு வருகை தரும் அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த இணையத்தில் எழுதுபவர்கள், அதிலும் தமிழில் (அடியேனுக்குப் புரிவது அது ஒன்றுதானே) மிக மிக எளிமையாய் வெகு கனமான விஷயங்களைக் கூட பாமரனும் புரிந்து இன்புறும் வகையில் , அங்கு படிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களாகவே மேன் மேலும் தெரிந்து கொள்ள வைக்கிற அளவுக்குச் சுவையாக எழுதுபவர்கள் பலரது வலைகள்அவ்வப்போது இணையத்தில் எதையாவது தேடும்போது அடியேன் பார்வையில் படுவதுண்டு. அவ்வகையில் ஒரு மதுரைக்காரர் நடத்தும் தளம் "மதுரையம்பதி" போய்ப் படித்து ரசியுங்கள்.



அதிலும் குறிப்பாக மதுரையம்பதி: பக்தி சில எண்ணங்கள்......பகுதி -2 இதைப் படித்தால் நான் சொல்வது மெத்தச் சரி என்று ஆமோதிப்பீர்கள். சரணாகதியை எவ்வளவு அழகா எளிமையாகச் சொல்லியிருக்கிறார் படியுங்கள்.

2 கருத்துகள்:

  1. வணக்கம் திருதிரு அவர்களே!.

    என்னையும் மதித்து ஒரு இடுகை இட்டமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அடியேனது நண்பரைப் பற்றிய அறிமுகத்தைப் படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. :-)

    பதிலளிநீக்கு