புதன், 5 அக்டோபர், 2011

வெண்ணெய் உண்ட பெருமாயனாய் எங்கள் தேசிகன்

திருப்புல்லாணியில் நடந்து வரும் ஸ்வாமி தேசிகனின் 744வது திருநக்ஷத்ர உத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று காலையில் சாற்று முறைக்குப் பின், ஸ்ரீ லக்ஷ்மீஹயக்ரீவ, ஸ்ரீ சுதர்சன, ஸ்ரீ தனவந்த்ரி ஹோமங்கள் நடைபெற்றன.
மாலையில், ஸ்வாமி தேசிகன் வெண்ணெய் தாழி கண்ணனாக, ஸேவை ஸாதித்தார். சென்னை நங்கநல்லூர் ரங்கராஜனின் தந்தை திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் அய்யங்கார் பல காலம் இந்த தேசிகன் சன்னிதியில் ஆராதகராய் சிறப்பாய் கைங்கர்யம் செய்தவர். அந்த அனுபவத்திலே, ரங்கராஜன் ஸ்வாமியும் மிகுந்த ஈடுபாட்டுடன், மிக அழகாக தேசிகனுக்கு சாத்துப்படி செய்திருந்தார். ஸ்வாமி தேசிகன் அடியேனுடைய தாத்தா நாளில் தன்னை இப்படி விதவிதமாக அனுபவிக்க வைத்து மகிழ்ந்திருந்தவர். சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின் இன்று எங்களையும் மகிழ்வித்தார்.
ஆச்ரம சிஷ்யர். ஒரு அற்புதமான மனிதர். அனகாபுத்தூரில் வாழ்கின்ற வழுத்தூர் ரங்காச்சாரி ஸ்வாமி. இவரைப் பற்றி ஒரு தொடர் பதிவே போடலாம். அவ்வளவு அசாதாரண குணங்கள் நிரம்பிய அபூர்வமான நல்லவர். இப்போதைக்கு சுருக்கமாக, இவர் க்ருஹம் ஒரு புத்தகக் கடல். எந்த சம்பிரதாய விஷயமான நூல் என்றாலும் விவரங்கள் இவரிடம் கிடைக்கும். விவரமென்றால், அட்டை முதல் அட்டை வரை நூலின் பெயரைச் சொன்னால் எல்லாவற்றையும் சில நொடிகளில் சொல்ல வல்லவர்.  இவர் எத்தனை புத்தகம் படித்திருக்கிறாரோ அத்தனையும் அந்த மாமியும் படித்திருக்கிறார். ஸ்ரீ ரங்கநாத பாதுகா இதழ்கள் digitalse பண்ணப் பட்டபோது, இவருடைய பங்களிப்பு மிக அதிகம். ஆரம்ப காலத்தில் வெளியான பழைய இதழ்கள் பலவற்றை எங்கெங்கோ தேடிப் பெற்றுக் கொடுத்து மகிழ்ந்தவர். இந்த ஸ்வாமி திருப்புல்லாணி ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவர், தேசிகன் மூலவர் உத்ஸவர்களுக்கு வெள்ளி யஜ்நோபவீதம் செய்து கொடுத்து விட்டிருக்கிறாஃ. நாளை அவற்றை ஆசார்யர்கள் அணிந்து மகிழப் போகிறார்கள்.
DSC03165DSC03166DSC03167DSC03168DSC03169DSC03170 
வெண்ணெய் தாழி படங்கள் இங்கே.
DSC03184
 கண்ணாடியில் பின்னழகு
DSC03181

பின்னழகும் திருப்பாத கமலங்களும்
DSC03182

DSC03188


ஒரு சிறு வீடியோ இங்கு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக