யமுனைத் துறைவர்
4. பிள்ளையும் பண்டிதனும்
உக்கி லாத விஞ்சை யோடொ சிப்பு றாத வாண்மையும்
மிக்கு யர்ந்த நெறியு மின்ன வேய மிச்ச பையிலே
புக்கு நின்ற பிள்ளை தன்னைக் கண்ட புந்திப் பண்டிதன்
நக்கு, “நல்லை நம்மை வாதில் நலிய நாடிப் போந்துளை. .32.
மிக்கு யர்ந்த நெறியு மின்ன வேய மிச்ச பையிலே
புக்கு நின்ற பிள்ளை தன்னைக் கண்ட புந்திப் பண்டிதன்
நக்கு, “நல்லை நம்மை வாதில் நலிய நாடிப் போந்துளை. .32.
அரசவை . உக்கிலாத – சிந்தாத, நிலையான. விஞ்சை – கல்வி. ஒசிப்பு உறாத --- குலையாத. வேயும் – அணியா அமைந்த. அரசன் கல்வி, ஆண்மை, நெறி இவற்றால் சிறந்தவன். நக்கு – நகைத்து. நல்லை – நீ மிக்க நல்லவன்.
“நெடிய மேரு தன்னை யெற்ற நேடு புல்ல தாயினை
கொடிய வேங்கை கொல்ல வென்று மேவு பூசை போன்றனை
மடிவி லாத வீற வாயு மெ ன்னைச் சுட்டு விரலினும்
வடிவி னற்பன் வாதில் வென்று வன்மை யேற்ற லெங்ஙனே?” .33.
புலவன் ஏளனஞ் செய்த வகை. நெடிய மேரு –உயர்ந்த மேரு பர்வதம். எற்ற – அழிக்க. நேடு –தேடுகின்ற , முயல்கின்ற. பூசை – பூனை. மடிவு இலாத – அழியாத. வீறு – மேன்மை.
என்று காயு மையன் முன்னர் பிள்ளை இங்ஙன் கூறினன்
“நன்று நானி ளைஞ னென்று நன்ன ரேசு கின்றனை
குன்றி னோங்கு குஞ்ச ரத்தைக் குருகு சீயங் கொல்லலும்
குன்று தன்னைக் குற்றி ரும்பு லைத்தல் தானுங் கண்டிலை. .34.
“வெப்ப மெங்கு மோங்க ருக்கன் றன்னைக் கைக்குடை
தப்பு றாத டைத்தல் தானுங் கண்டி லைகொ லைய!நீ
ஒப்ப வோங்கு தால முற்றும் புல்லி லையி லுற்றிடும்
அப்பு விந்து தன்னு ளேயடக்கல் தானுங் கண்டிலை. .35.
வான ளாவு வையின் சும்மை தன்னை யோர னற்பொறி
ஈன மாக்கு மித்தை நீயுங் கண்டி லைகொ லேந்தலே!
மீன தன்சி னையி னொய்ய ஆலி நுண்வி தையதும்
மான நீழல் வாயு மாவி ருட்ச மாதலோர்ந்திலை. .36.
சிறுவன் கூறியது. காயும் --- சினங்கொள்ளும். நன்னர் ஏசுகின்றனை ---. குன்றின் ஓங்கு குஞ்சரம் – மலையினும் வலிமை வாய்ந்த பெரிய யானையை , குருகு – குட்டி. சீயம் – சிங்கம். குற்றிரும்பு – இரும்புத் துண்டு. உலைத்தல் – வெட்டுதல். வெப்பம் எங்கும் ஓங்க ஓங்கு அருக்கன் -- . அருக்கன் –சூரியன். தப்பு உறாது அடைத்தல் – தப்பாமல் மறைத்தல் . கண்டிலை கொல் – நீ கண்டிலை போலும். ஒப்ப ஓங்கு …..அடக்கல் – வானில் உயர்ந்த பனைமரம் முற்றும் புல்நுனி நீர்த்துளி தன்னிலே அடக்கிக் காட்டுவது. அப்பு – நீர். விந்து – பிந்து, துளி. வை—வைக்கோல். சும்மை – போர். மீனதன் சினையில் நொய்ய --- மீன் சினையினும் மிகச் சிறிய . ஆலின் + யுண் விதையதும் – ---. மான நீழல் --- பரந்த நிழல் . மா விருட்சம் --- பெரிய மரம்.
“மேலு மேலு ரைத்தல் நீக்கி வாத மேதொ டங்குவை
மேல!” வென்று ரைத்த குட்டன் றன்னை வெம்பி நோக்கியே
“பால! நீயெ ழுத்தி னங்கள் பகர வல்லை யாயினே
நூல ளிப்ப”லென்று வித்து வான றைதல் செய்தனன்.
“வாதத்தைத் தொடங்குக” எனச் சிறவன் சொல்ல, வித்துவான் “ நீ எழுத்துக் கூட்ட வல்லையாயின், இதனைச் சோதிக்க நூல் ஒன்று தருவேன்” என்றான். அறைதல் செய்தனன் – மொழிந்தனன்.
சிறுவன், “போதும் வீணு ரைகள்” என்று செப்பி மேலவா
உறுவ நூல்க டம்மை யோதி யுட்க ருத்து ரைத்துமேல்
உறுவ நூல்க டம்மை யோதி யுட்க ருத்து ரைத்துமேல்
முறுவ லோடு நின்ற வீறு தன்னைக் கண்ட முன்னவன்
இறுதல் திண்ண மென்ற தோர்ந்து சாத்தி ரங்க டம்முளே. .38.
சிறுவன் தானே நூல்களை ஓதிக் கருத்தைக் கூறினன். மேலவா உறுவ நூல்கள் --- மேலான நூல்கள். இறுதல் – தோல்வியடைதல்
சிலவெ டுத்தி யம்பல் செய்ய மேல மேல சிறுவனும்
பலவெ டுத்து ரைத்தல் தன்னைக் கேட்ட பண்டி தன்முனன்,
“புலமை யற்ற புல்ல னோடு பெரிய ஓதல் குருவியின்
தலையில் தால நற்ப ழத்தை வைத்தல் சாலு மாகலின், .39.
புலவன் சில சில ஓத, இவற்றிற்கு மேல் சிறுவனும் ஒத, வித்துவான், “உன்னிடம் கனத்த யூல்களை ஓதுவது குருவியின் தலையிற் பனங்காயை வைத்தலை ஒக்கும்” என்றான். தால நல் பழம் --- பருத்த பனம்பழம். சாலும் – ஒக்கும்.
“அத்த! இச்ச பையி லுற்ற வன்பர் கேட்க நற்பொருள்
மெத்த ஓத வல்லை யாகில் நின்றன் மேன்மை சாற்றுவல்
மெத்த ஓத வல்லை யாகில் நின்றன் மேன்மை சாற்றுவல்
எத்த ரத்தை யென்ப தோர்வல்” என்று கூற யாமுனன்,
“சித்த நல்லை செல்வ! யானுஞ் செய்வல் கேட்க” என்றனன். .40.
யாமுனன் --- யமுனைத் துறைவன். சித்தம் நல்லை – நல்ல சிந்தை வாய்ந்தவன் நீ; ஏளனமாக இயம்பியது.!
“கலைவலர் முன்னோய்! மொழிகுவல் மூன்றாம்
கருத்தவை கலைதமைக் கொண்டே
அலவென வாதஞ் செய்குவை யாயின்
வெற்றிய னாகுவை நீயே
இலையெனில் யானே இயம்புவல் நீதி”
என்றன னிளையவன் றானும்,
“குலைவது காணேன் கூறுக” வென்றான்
புலவனும் புலவரர் குழுவில். .41.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக