செவ்வாய், 27 ஏப்ரல், 2010

திருப்புல்லாணி உத்ஸவம் 6ம் நாள் திருக்கல்யாணம்.

இன்று ஸ்ரீசீதா ராமன் திருக்கல்யாண வைபவம். முன்னாலெல்லாம் நாங்கள் திருக்கல்யாணம் முடிந்து வீடு திரும்ப அதிகாலை 4 மணி கூட ஆகிவிடும். சிறு வயதில், அருகில் கீழக்கரை இருப்பதால் பெருமாளும் முஸ்லிம்களைப் போல இரவில் வெகு நேரம் கழித்து மணம் முடிக்கிறார்போலும் என்றெல்லாம் கேலி பேசியிருக்கிறோம். ஆனால் இப்போது கைங்கர்யத்துக்கும் சரி, கண்டு களிப்பதற்கும் சரி ஆட்கள் இல்லை. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை முன்படுத்தி வந்து, இன்று வீதிப் புறப்பாடு ஆறு மணிக்கெல்லாம் துவங்கி ஸ்ரீராமன் கோவிலுக்குத் திரும்பி திருக்கல்யாணம் முடிந்து நாங்கள் 8 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்தாகி விட்டது. கல்யாணம் காண வந்தவர்களை வீடியோவில் எண்ணி விடலாம் பாருங்கள்.
அப்புறம் ஒரு வேண்டுகோள். இந்த வீடியோவைப் பார்க்கும்போதே பல கேள்விகள் எழும். சிறு வயதிலிருந்தே நான் கேட்டு பதில் கிடைக்காமல் அலுத்துப் போன பல சந்தேகங்கள் உங்களுக்கும் தோன்றலாம். பெரியவா நாளிலிருந்தே அது அப்படித்தான் என்ற ஸ்டாண்டர்டு பதிலைகிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாக கேட்டு வருகிறேன். அதிலும் இன்று ஒரு அபத்தமும் நடந்தது. வீடியோவை உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 
குருடும் குருடும் ஆடும் குருட்டாட்டம் என்பது எங்களுக்குப் பொருந்தும்.


7 கருத்துகள்:

  1. லைப்-ல இதுவரை இப்படி ஒரு வீடியோ பார்த்ததே இல்லீங்க!
    அற்புதம் . மிக்க நன்றி .

    அனுமனோடு கூட்டு சேர்ந்து மனதார உரக்க சொல்வோம்.
    ஜெய் ஸ்ரீ ராம்ம்ம்ம்ம் !
    ஜெய் ஸ்ரீ ராம்ம்ம்ம்ம் !
    ஜெய் ஸ்ரீ ராம்ம்ம்ம்ம் !

    பதிலளிநீக்கு
  2. வெயிலுக்கு இதமாக இருக்கிறது நீங்கள் வைக்கும் ஐஸ். முன் பிறவியில் ஏதேனும் மன்னரிடம் பாடிப் பரிசு பெறும் புலவராக இருந்திருப்பீர்களோ! இப்படிப் பொய்யுரைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  3. அண்ணா... வீடியோ 2 நிமிஷ்த்துக்கு அப்புறம் நகர மாட்டேங்குது.. காலையில் இருந்து முயற்சித்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
  4. ராகவ்,
    சரியாக உள்ளதே! வேறு 3 இடங்களில் பார்த்தேன். சில நேரங்களில் பஃபர் ஆவதற்காக சில வினாடிகள் ஆகிறது. கமலக்கண்ணி அம்மன் கோவிலார் கூட முழுவதும் பார்த்த பிறகுதானே பின்னூட்டம் இட்டிருக்கிறார்! ஒன்று செய்து பாருங்கள். As soon as it begins to play, pause it for a few seconds and then again start play.

    பதிலளிநீக்கு
  5. திருப்புல்லாணி ஸ்ரீ ராமர் யானை மேல் அமர்ந்து வலம் வரும் வீடியோ - வை கண்டது இதுவே முதல் முறை!
    அற்புதமான காட்சி ஸ்ரீ ராமர் யானை மேல் வரும் காட்சி!
    இவை உண்மைதான் ஐயா!

    பதிலளிநீக்கு
  6. அண்ணா, வீடூ, ஆபீஸ் ரெண்டு இடத்திலயும் முயற்சித்து வீட்டேன்.. யூட்யூபில் அப்லோட் செய்ய முடிந்தால் செய்யுங்களேன்..

    பதிலளிநீக்கு
  7. //பெருமாளும் முஸ்லிம்களைப் போல இரவில் வெகு நேரம் கழித்து மணம் முடிக்கிறார்போலும் என்றெல்லாம் கேலி பேசியிருக்கிறோம்//

    அடடா, தற்கால இளைஞர்கள் நாங்க கூட இப்படியெல்லாம் பேசறது இல்லீயே! :)

    சீதா கல்யாண வைபோகமே!
    ராமா கல்யாண வைபோகமே!

    கல்யாணம் முடிஞ்சதும், யானை மேல் கிளம்புவது, அப்படியே கோதை காட்டினாப் போலவே இருக்கு! அங்கவனோடு உடன் சென்றாங்கு ஆனை மேல்...

    யானையின் கம்பீரம் சூப்பர்! துதிக்கை அசைவும் நல்லா இருக்கு! வாயில் கரும்பு போல வச்சீங்கன்னா இன்னும் அலங்காரம் ஜோரா இருக்கும்!

    பதிலளிநீக்கு