வெள்ளி, 30 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி

31. உருக்கப்பத்ததி
951.  ஆதுலர் பாலரு ளாதரவில்
           ஏதம றப்பர வித்தையென 
           மூதிறை யேதரு மோருறுதிப்
           பாதுகை யில்லடை யானடைவேன்.             1

952.    அளிநயத் தமுத ரங்க னருளுமென் வருபி றப்பிற்
            களிநயத் தமல மேனிக் கதிர்வளத் தமர்க ளண்ணல்
            தளிரிறைப் பதத்தி லுன்னைத் தகநிலை பொருத்து மிந்த
            அளிநிலப் பரமன் தொண்டி லமர்வனா னடிநி லாயே!.  2

953.    தாலமீ தூழி கோடி யுருட்டுநீள் கால வட்டஞ்
            சாலவே புரட்டு கோடி தாதையர் மறைய னந்த
            மாலெழுங் கோல வண்ணப் பாதுகா யின்று மந்தோ
            கோலெனக் குலவு நின்னைக் கொழுந்தெனத் தேடி யோடேன்.       3   

954.   புகழ்வளர் திருவி ளங்கும் பூரணத் திருவ ரங்கம்
           திகழ்மறை முடியி னீழ னிறைநவ நிதியைப் பாதூ!
           மகிழ்வுற வெளியர் கட்கென் றிரங்கிநீ வழங்கிக் காக்கும்
           புகல்வணம் புறக்க ணித்தென் புகர்மனம் புறம்பு மேயும்.            4

955.   விஞ்சுசஞ் சலம னத்தென் வினையினான் விலகி யுன்னைக்
          கிஞ்சமுந் தஞ்ச மென்னாக் கிறிதனின் மறித லாடக்
          கொஞ்சுவற் சலையு னீரத் துருகிநீ யருகி யென்னைக்
          குஞ்செனப் பரிந்து பாதூ! கொள்ளவே கடமை யன்றோ?.            5

956.  செம்மைமா லடிபிடித்திங் கெனதுபாற் செலுத்து மார்வத்
          தம்மைநீ தகைமையாடுந் தலைமையொன் றில்லை யாயில்
         அம்மவோ திருமு குந்த னாரரு டனையு மீறிப்
         பம்மலா டெனது பாபம் பரந்திறை நிலைகொ ளாதோ?                6

957.  மீறியா னென்னை யானே யிடிக்குநல் குரவி னோலக்
         கூறலீ துணருன் கேள்வி கொண்டிலா விதியென் பாதூ!
         ஊறுதே  னரிய டிப்பூ வுமிழ்மணப் பிரச மாந்தி
         மாறுபித் தேறி நீயும் மறந்தெனை மயங்கி போலும்.                7

958. அண்ணனின் பரமி தென்றே யளித்தரி யடிக்க ணென்னைப்
         பண்ணநீ பின்னு மென்னைப் பற்றவோர் கேடு நாடில்
         தண்ணறப் பரந்து டைத்த தமியரைப் பரிந்து நோக்கும்
         புண்ணியப் பதநி லாயுன் புகழ்த்திரு குனிந்து நாணும்.            8   

959.  நூக்குபல் காவ னாக நுழைவரும் புழையிற் சீறிக்
         காக்குமவ் வச்சை மாக்கட் கடைத்தலை நடத்த லஞ்சி
         ஆக்குபொன் னரங்கச் செல்வம் வழங்கவே காக்கு முன்கண்
         பூக்குமென் மனர தங்கள் புரந்துநீ பொருந்து பாதூ!.                9

960.  வெய்யமுக் கோர மேற வேண்டிநீண் மறலிற் கானல்
          நய்யுமன் பதைக்கி ரங்கி நன்கடி நிலை!ய ரங்கன்
         மெய்யடி பிடித்துக் கையின் மெய்யெனப் பெறும்ப தத்தை
         அய்யுற லறுத்துக் காட்டு மாதரம் பொலிய நின்றாய்.                10

961.  சலப்பல நிலப்ப கட்டிற் சமையுமைம் புலன்வி ரித்த
         வலைப்பட விழுந்து ழன்று வலிவினை யழுந்து மெம்மைத்
         தலைப்பிடி தகப்பி டித்துன் தகைப்பிடி நயத்துப் பாதூ!
         நலப்பத நிலைத்த நீதா னாடியே விடுவிக் கின்றாய்.                11

962.  நகுதிரு வுரத்த ரங்க நம்பியைக் கால்பிடிக்கத்
         தகுதிரு வுரத்த நீயே தமியனேன் தவறு முற்றும்
         தொகுமவ னிவப்பு மாணக் குணக்கட லிடைக்க லக்கும்
         வகைதொரு முனைத்த டுக்க வல்லரார் பாது காயே!.                12

963.  மறப்பதே தொழிலாய்த் தோன்றி மறவினை வனையும் போகம்
         கறப்பதே நுகரெ னக்குக் கைதொடற் புதிது யாதோ?
         துறப்பதே தொழிலாய்த் தோன்றுன் துணையிலக் கால்தொடற்கண்
         சிறப்பதே புதிதாம் பாதுன் திருவுளம் புரிய தேகாண்         13   

964.  கறைபல நிறைய நாளுங் கரையறப் புலன்க ளோம்பி
         முறையற வளர்ந்த வென்றீ முதுவினை வெறிவி லக்கச்
         செறிமுறை யறத்தின் வண்ணச் செவ்வடி நிலை!ய ரங்கன்
          நறுமணங் கமழ்ப தப்பூ நாற்றநீ யூட்டு வாயே.                    14

965.  உரியநின் பணிதி ருத்துன் னுரிமைநீ யெனது பாணி
         அருமையின் பிடியிற் கொண்ட வடியனே னினியுஞ் சென்று
         பொருளிடைப் புரளு மாக்கட் புடையொரு பொழுது நீட்டல்
         அரியடிச் சுடர்நி லாயுன் னழகினுக் கழிவு கண்டாய்.                15       

966.   கரிலிறக் கழிக்க வோதுங் கருமநான் புரிய வேண்டிற்
          புரியதன் புரையொ ழிக்கப் புரிகழு வாய்க டோறும்
          வருமிழுக் கவைக்குஞ் சாந்தி வரையென விளங்கு பாவால்! 
        ஒருமுதற் கதியெ னக்கா மொண்மைநிற் கொண்ணா வோதான்?16           
967.   குடியுளத் தடைய ரிற்கண் குமைக்குமென் தீம னப்போக்
         கிடரொலிப் படர்பு லன்க ளிழுக்குமென் வாயி லந்தோ!
         கடியவிவ் வுறுக ணாழிக் கரையெனைக் கடத்தற் காகும்
         அடிநிலாய்! சுடர நீளும் பத்தியோ வன்றி நீயோ?.                17

968.  ஓரிகள் வெறுக்குந் தென்ற லொளிர்பசுங் கதிரைத் தேனர்
         பூரியர் புரந்த நின்சொற் புனிதநற் பதத்தை யம்மா
         பேரிறைப் போத மொன்றைப் பேதுறு மனத்த ரெம்மா 
         னேரடி நிலை!யி  தந்த நியதியின் திருக லொன்றோ?.            18

969.  விடவுடற் கடுவெ டிக்கு மெமபட ரிடிகள் கேட்க
         அடிநிலா யுனைய டைந்த வடியனேன் கடவெ னோதான்
         நடையாங் கனத டிக்கந் தரங்கர்நா வழங்குஞ் சேவைக்
         கிடுசட கோபன் தொண்டா! வெனும்பணி விளிம டுப்பன்.            19

970.  மாலையி டும்மண மாலிகை மேலக்
         காலொரு கல்லிழை காதன யத்தென்
         பாலினை மாபதி பாதம லர்த்துஞ்
         சீலமெ னக்கருள் சீரரி பாதூ!
                            20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக