Monday, October 5, 2009

திருப்பாதுகமாலை

28. நன்மொழிப்பத்ததி

821. கலைக்கோடி யொன்றிக் கிளைப்பீடு காக்கும்
         நலத்தோங்கு கேளிர் நயத்தோம்பு வாரால்
         நலத்தாள ரங்கன் வளப்பாவ லோங்கத்
         தலைப்பார தர்தாந் தகத்தாழ்த்து வாரே.           1.

822.  தன்னா டெனினும் பிறநா டெனினுந் தகநிற்கும்
          சென்னா டெதிலுஞ் செய்தொழி லறவோர் துறவாரால்
          அன்னா னடிமா ணிலைதா னமரும் நகர்கானில்
          முன்னார் கடுவைக் களைதன் தொழினின் றொழியாதே.    2.
                         

823 மெல்லிய புல்லும் வலித்தது பிரமாத் திரமாயே

      வல்லற மலையோ டிழிந்தது பகழிக் குறியாயே

      ஒல்லையி னீத்த மிதியடி புரியும் பொறையாட்சி

     வல்லவ ராடற் கெதுவெது வெனவே யமையாதோ? 3

824 கோள்வழி நீள்கோன் முளைபல ரவர்தா முளவாக

      மூள்வினை யொன்றில் வழுநிலை யுறினும் பதநின்றே

    ஆள்வினை யான்றோர் பதமுட வடைவா ரமைவொன்றில்

    தாள்வலி காகுத் தனுமடி நிலையுஞ் சாலுவமம். 4.

825 மன்னடை யேறும் மாதவ ரடிசேர்ந் தொழுகுஞ்சீர்

     நன்னெறி நாடி நாடுய வறநன் நிலைநிற்கும்

    அன்னவர் பாவற் போலர சுபசா ரங்களுடன்

    துன்னுவர் தேசு கோசலர் தொழுநேர் சூரியராய். 5.

826 அரசிய னெறியிற் பிரசையி னசையோ டரசீய

     வரமிசை யிளவற் கவளெதிர் வேண்டத் தரவுமுடன்

    குரிசின னிலைதா ணிலைபெறு முடிநல் லபிடேகம்

   அரிதுணர் தனதுள் கருதொரு தெய்வங் கரிசாலும். 6.

827 ஒக்கத் தாங்கு மொருபத நிலையுந் தவிசுந்தாள்

    பக்கத் தேறா சனமரு கமருந் தகையொன்று

    மிக்கத் தோன்றுந் தவிசினு நிலைக்கே பதமீந்தான்

விக்கிர முடனா டுவரிட மதிபர் வெகுமதியர். 7

828 அடியடி தோறு மடிநிலை யதுவே சஞ்சலமாம்

இடவது தானு மிறையவ னிலைதன் பதமிடையே

உடநிலை பேறு நலனுறு மொருநன் னிறைநிலையில்

படிதக வுறுமத் திருவுறு படியிற் றன்படியே. 8.

829. கதிக்கேது வாயோர் பதத்தே நடக்கும்

திதிக்கேது வாயோர் பதத்தே நிலைக்கும்

பதிப்பாது நோக்கப் பொருட்பான்மை யாரே

மதிப்பார் நிறுத்தொன்று தோன்றற்க ருத்தே. 9.

830 தாழ்த்திலுந் தாள்கொளத் தக்கமேன் மக்கணேர்

வாழ்க்கைகொள் வார்களத் தானிலாழ் வார்களே

தாழ்த்துகா குத்தனத் தாளிலாழ் வார்க்கவன்

வாழ்த்துபூ வாட்சிமா வாழ்ச்சிதான் வாய்த்ததால். 10.

29. கலம்பகப்பத்ததி

831 எப்பொரு ளவ்விதி டப்பட வேறு

செப்பந லப்பெயர் சீர்நிலை மேவி

நற்பத நல்குமெ னோதிடு மவ்வர

றப்பத நன்னிலை யாகவெ னக்கே 1.

832 மின்னிடை மன்னடி யின்னிலை நங்காய்!

முன்னகை முத்தொளிர் புன்னகை பூத்தோ

ரின்னளி மஞ்சுரை விஞ்சவ ரங்கன்

தன்னொட வன்மனை தானுழை வாயே. 2.

833 நன்மொழி நாயரி பாவலொ லிக்கும்

நன்மையு னைத்தொழு மன்பர்கள் பீழைக்

கன்மமொ ழித்திடு வன்மைபு துக்கும்

மன்மறை முந்தொரு மந்திர மாமே. 3.

834 பீடிரு மாலடி நீடு பரப்பு

மோடலி னீமணி யோடுவ ளர்ந்தே

நீடிய வவ்வெயில் செவ்விய பாவால்!

கூடிய வூழொளி கோடி கொழிப்பாய். 4.

835 ஆதவ புட்கொடி யாதி மராடீ!

காத நிலாவுக லாபந லச்சீர்

மோதுமு னைத்தொழ முன்னுறு மீசன்

மீதணி பொங்கர வங்கள் பதுங்கும். 5.

836 சந்திர தாரையி னாப்பண் மராடீ!

உந்திரு பக்கமு மொக்கம ணிக்கல்

சிந்தொளி யத்திரு சித்திர வண்ணத்

தெந்திரு கண்கவ ரெந்திர வண்ணம். 6

837 மன்னரி யங்கிரி மாணல ணைக்க

மின்வியர் முத்துக ளங்க மிலங்க
  நன்மைய மெய்ம்மயிர் பாது! சிலிர்ப்ப
  இன்னயர் வுன்னணி யம்மணி யேங்கும்.   7. 
 

838. மாட்டிட வுங்களை மாயவன் வந்தான்
வாட்டுமு னேகவி ராக்கத ரென்றே
நீட்டரு ணின்கர மீதரி பாதூ!
ஒட்டொலி யோட்டொளி யோச்சுதி போலும்.                        8

839. மாமணி யாவய மாவரி பாதூ!
ஆமொளி வாய்வட மாயிடு கல்லைத்
தோமறு கூவிர நோக்கரி பாதத்
தாமரை மாவரி யந்திர மாவாய்.                                9

840. பத்திர வுத்திவ ணத்திரி பச்சை
ஒத்துமு கத்தணி செம்மணி யொண்மை
நத்தரி பாதுனை நோக்குவ னாதன்
அத்திரு கொஞ்சொரு கிஞ்சுக மென்றே.                   10

841. மேலரி மாமணி சேரணி யோரத்
தேலொளி பாதுனி லேலும ரங்க
மாலிரு பக்கவ ரிக்கனி மன்னப்
பாலலை யார்தன தாலிலை மேனி.                        11

842. நீரடி யாடிம ராடி! நி தானப்
பாமலி சாலம ளக்கர ளாவி
ஆமறி சூழலி லாயர ரக்கர்
தாமெயி ராமனு டுக்குறி தாரை                              12

843. நாடர சாண்டிடு நான்றும ராடீ!
நீடணி மாமணி நீமநி ரப்ப
நாடணி பாதம மாதவ நாடும்
ஓடதி யென்றுறு கோதுழி தோறும்.                         13

844. நாயக னத்தமு மத்தமு நாகம்
போயிட வையக மூளிரு ளோவ
வாயுறு செம்மணி யம்மணி வாளில்
ஆயொளி யீனிறை சந்திதி கழ்ந்தாய்.                      14

845. இன்னரு ளுந்திறை யேறிவ ழங்கும்
சொன்னிலை செல்லடி தோறுமி யம்பும்
மன்னவ னோக்கும றைக்கலை யென்றே
உன்னுவர் பாதுனை மும்மறை யான்றோர்.               15

846. முத்தெளி கேசர வச்சிரெ யிற்றப்
பத்தக லாதந லத்தரி மாற்றில்
அத்திற லாளரி யாளுதற் கொத்த
புத்துரு நீதிரு பூத்தனை பாதூ!                              16

847. காலடி செவ்விய சீரொலி மாதர்
நாலிவெ யிற்புவ னம்புரி யன்பே
சாலுனை மூதுவர் சாற்றுவர் பாதூ!
மாலடி யாலம ராளமெ னத்தான்.                           17

848. சாரொலி கல்லணி வண்ணவ குப்பில்
ஆரம ணிக்கதி ரார்தலிற் பாதூ!
சேரரி பொற்பத பற்பளி வேத
நேரதி தேவதை நீயென வோர்வன்.                      18

849. மாதவ னவ்வா மாகம றைந்த
போதிட மூள்பிர தோடமு நாட
மாதரு னாதமு றாதற மோனப்
பாதநி லைத்தவம் பாது! பு ரிந்தாய்.                      19

850. ஓடுநர் நீரவை டூரிய வோடை
ஆடம ருத்துட னாடரி நீழல்
கூடரி பாது! கு ளிர்நில மென்ன
நாடவர் நீநெடு வாடற ணிப்பாய்.                         20

851. தேசபி டேசன நீகொள நீமம்
கோசல ராதியன் கூசற வோச்சி
வாசமந் தோதரி வாணுத லிந்து
காசம ழுங்கம ராடி!க லித்தான்.                           21

852. மாயவன் தேவியர் மாடந டக்கச்
சேயரி நீலக லத்துநி லத்துத்
தோயரி தாணிலை தோன்றுதி நேயச்
சாயையெ னத்தகு சாயைய வற்கே.                       22

853. ஒன்றிய சந்திர நீலவொ ளிச்சீர்
நன்றுப தாவனி! நாதன டிப்பூ
மன்றிரு பூமிம டந்தையர் வண்ண
மென்றுபொ துத்திரு மூர்த்தமெ ளிர்வாய்.                23

854. அத்தளிர் மாமணி யங்குலி மாமை
ஒத்தொளி முத்துந கத்தெளிர் பாதூ!
பத்தமு தத்துணர் பத்திப டிந்த
அத்தன டிக்கிள ரக்கிள ரொத்தி.                           24

855. மஞ்சன மாடரி பாதரி சந்தம்
விஞ்சும ணத்திரு மேணிக மழ்ந்தே
மஞ்சணி மலையொ டஞ்சன வண்ணன்
கொஞ்சடி கூடொரு கூடனு கர்வாய்                       25

856. மன்னிலை! நின்னொலி மின்னுரு மாந்தப்
பின்னமு றைப்புல னீதிபொ றாதே
உன்னல வாயிர லோசன மன்னுங்
கன்னமு மாவுரு பன்னக மாகும்.                             26

857. வாற்கர மாயிர மார்த்தந டைக்கண்
ணேற்கரி மாபத மேவரி பாதுன்
பாற்கிளர் புத்தரு ளெட்டுரு வாதி
பாற்கர மூர்த்தியெ னப்பொலி வாயே.                     27

858. காட்டிலு மன்பத நாட்டிலு மொக்கப்
பூட்டிய பாதருள் பூண்டொரு கற்குக்
கூட்டற வில்லெழி லுட்டிய வுன்னை
ஆட்டுவ ரய்யர்ம ணாட்டிகள் சீரே.                          28

859. நற்கதி நாரண னாரண நாறப்
புற்கல மித்திர மண்டில மொத்த
நற்கதி ராயிர நாமணி பாதூ!
சொற்கதிர் நாதநி னொத்தலு திப்பன்.                     29       
860. மின்மணி மீதொளி மீளிவி ளங்கச்
சின்மய நாதமி டித்தும ராடீ!
புன்மையர் செய்மறை மிச்சையு ரைக்கொய்
தன்மெயி னாரணன் தாண்மெயு ணர்த்தி    .               30

861. பேரளி வள்ளனீ பெய்திரு வுள்ள
நீரணி பாதுக! நின்பா மேந்தும்
தாரணி யப்பொறை கண்டளி தானைச்
சாரணி நின்னகை சாத்தினை போலும்.                      31 

862. சீர்மலி வின்மணி சித்திர பானு
பாமலி நின்மல பாவக மின்னீ
கோமலி சந்திர கோமள மெங்கள்
தோமறு முச்சுடர் தூமணி பாதூ!                                32

863. வித்துரு மத்திரு வொத்தொரு முத்திற்
பத்துடை யார்பர வத்தகு தாரை
நத்தளி சந்திர சுந்தர பாதூ!
தொத்தழ னீக்கொரு சந்தியை யொப்பாய்.                   33

864. பாவனி லங்கள ரங்கனொ துங்கப்
பூவிள வப்பன தப்பத நோவா
மேவலி னீவிரி மும்மணி நீமம்
தூவலி யுற்பல மாமலர் தூவும்.                                34

865. மாணில மண்ணலொ டாடம ராடீ!
பூணொளி யோடுநீ பூவொலி பூக்கக்
காணரி தேவியர் கட்கொரு காமன்
தோணிது லக்கிய வாகுது லங்கும்.                            35  

866. பதியு முத்து நகமினிற் பதும ராக மதனினீள்
பதியி ரேகை நிறைவினிற் படயு லாவ னிலவலிற்
கதிய ரங்க னிறைபதக் கலவ னின்று குலவுசீர்
மதியி னின்னை யடிநிலாய்! மகிவ ணங்கி மகிழுமே.         36

867. உலகு வந்த மணிமுடி யுனபி டேக மாடிநீ
இலகு முன்ன லரதனத் திரகு மன்னர் மாபதி
வலமு வந்து வரமணி யொளிவ ளைந்த மண்டிலம்
தலைந கர்க்கு நிறையழ லகழி யாய தடிநிலாய்.!                    37       
868. தளிரு மணிக டவழுமா தபன நிகழு மாதனத்
தொளிரு மமல னடிநிலா யுமிழு முனது மாமணி
யொளிகள் பாத னரிகளை முறிய நலியு முரணொளி
முளைக ளனைய முளைநலம் மலிய வவனி பொலியுமே.                38

869. உலக முமிழு மழகனார்க் குரிய வரிய சுயவரக்
கலைக ளிலகு சுருதிவல் லவிக டளிம களநல
நிலைமை யறையு நிறையொலி யினிய சரண திரணநீ
குலவு னொளியி னிலவுமங் கலிய சரடு தொடுதியே.                    39

870. உரிய வருண நிரைபல யினிய வொலிநல
வரிகொ ளரியி லிலகநீ வரியி லமரர் முடிமிசை
அருளு மரியி னிறைமையே வலகு சாகை யெனவுனைப்
பரிவி லனக மணிபதா வனி! ப ணிந்து புனைவரே.                    40

871. நிலையி லமரு மியலடி நிலை!பொ றுத்தி  யகிலமும்
மலியு மிரத முதிர்பலன் மனந லத்தி லருளுநீ
பொலியு மமல நிலையெனப் பொறை ய ரங்க னிறைபதக்
கலவ லகல லளவளா வளவு சால நிலவுவாங்.                        41       
872. அளியி னீல வரியினீ யழக னார்ப தாவனீ!
களியி லேக ரளிமலர் கமழ லோங்கு புங்கமாய்த்
தளிர ரங்க மணவரன் தகைவி ழைந்த தேவிமார்க்
குளவ னங்க னொலிதருங் குணந யத்தி லங்குவாய்.                    42

873. அகல வாயி ரங்கர மரங்க நாத னடிநிலாய்!
தகவி னீட்டி யோங்குபூங் கனகை நீர்த்த டத்துநின்
னகைத னிற்கொ டுங்கலி நடுந டுங்கி நாடிடா
வகையொலித்தவாகினீ வழங்குவண்ண மெண்ணுவன்.                    43

874. தாள மோடு செம்மணி தளிர மங்க லாதனத்
துரிமை யேற்ற வீற்றிருந் தெளிர்ப தாவ னீயுனைப்
பரத னாட வந்தனை பரவு னாத வம்மகிக்
காம வன்தொ டப்பொரி யரிவி ரிந்த சிகையதாம்.                    44

875. வளைய ரங்க னடைகளே வனைய மீளி மண்டபத்
தளியி லங்கு மரவடி மணிமி னீடு சிறகினீ
கிளரு மீகை வணமிகக் கிறிசெ றிந்த கதிநயத்
தொளிரு மண்ண லுவணனே றுருவ மென்ன நிலவுவாய்.                45

876. அமல னோங்கி யுலகளந் தருணி வந்த திருவடிக்
கமல மண்ண லடிநிலாய்! பணையு னீயு மிணையவே
நிமல வான முனதுநித் திலசு மத்தி னணவிலே
அமைய வொன்று மறுபத வருமை யொன்றி லமருமே.                46  

877. அகம லர்ந்து சகமெலா மமல நன்றி புரிநடைப்
பகவ னுந்து பதமலர்ப் பணிம லர்ந்த பதநிலாய்!
தகவ ணங்கு னிளவிரல் தளிர ணங்கு விரிகுடை
நெகிழு முத்து முகநல னிரையு மிழ்ந்து நிறைதியே.                    47

878. கமலை யுரிய னிருபதங் கதியி னின்க ணிலையுற
நிமல னகில நடையிலே நிகழ வேகி மறிதர
அமையு மகில திதிபர மதனை நின்க ணிறுவியே
அமர வினிய வறிதுயி லயர்வ னாத னடிநிலாய்.!                    48

879. உறவு துன்னு முனதளித் துயமு யற்சி யறுசுயக்
கறைமு யற்சி யவையறக் கனக மன்னு பதநிலாய்!
அறுதி யென்று மறையிடித் தறையு மந்த வுறுதியே
செறிமு யற்சி புரிவர்நின் னிழல மர்ந்து நிலைநலார்.                    49

880. கமலை யிரத நறுமலர்க் கரம லர்ந்த வருடலிற்
சுமையு மிருது பதமலர்ச் சவிய னந்தன் மதலைதான்
அமையு முனது வலிமையி லடிநி லாயி டரிபடத்
தமர வரிய நெடியகற் கசந டங்க ளிசைவனே.                        50

881. தேறுகல் வீறு நீம மேறுபல் வருண மான்ற
வாறுநீ சிலம்பு நாத வாகுமா மறையின் மூலம்
நாறுமா மகிழ்நன் பாவால்! நாடுமால் மேவு மார்வங்
கூறுநான் காய நாதக் கூறுமாத் திரையு ணர்த்தும்.                    51

882. ஒலிநிலைக் குணமு யர்த்தோ ருயர்சதா கதிந யத்தே
நிலவலிற் றனதொ ளிக்கண் ணிறைதலிற் புவன முற்றும்
நிலைகொணின் னிலையி னூன்றி நிகழ்தலி லழகன் பாதூ!
குலவுமைம் பூத மன்னுங் குணவன மாலை யொப்பாய்.                52

883. மீளமன் னகரி ராமன் மிளிரவன் சரணங் கூடி
ஆளுமப் பரந்து டைத்துன் னளிநடைப் புதுமை பூக்குங்
கேளியிற் பாது! விஞ்சுன் சிஞ்சிதத் துலகு வாழ்த்துங்
காள லொலியின் கோலா கலமெழுஞ் சவிப யந்தாய்.                    53      
884. வளர்ந்துல களந்த வள்ளல் வரியிரு சரணம் பற்றிக்
கிளர்ந்தொளி பரந்த சாமக் கிளைகளா யிரங்கண் மீதே
மிளிர்ந்தெழு பாது! நின்கண் பிரமனல் வினையி னன்னீர்
குளிர்ந்தது புரிந்த மொக்குள் குலவுமுன் தரள மொத்தே.           54

                                                                                 
885. சோதிசேர் சாதி யேமஞ் சுடரெழி லசோக மாழை
போதமா தவன தாடற் கூடலர் திரும லர்த்தாள்
மாதிரந் தோறு நாறு மலர்வர ராக நாதன்
பாதுகாய்! பூக்கு முன்கண் பரிமள வசந்த நோக்கே.                    55

886. பரனடிப் பதும நாறல் பரகதிக் குறுதி தேறல்
எரிதுவர் முத்தி லங்க லெழுநிறை  யிராக மன்னல்
உரனலர் மனன மூற லுறுநிலை யரங்கன் பாதூ!
விரிதலிற் புனிதர் சித்த விருத்திநீ நிறுத்தி யொத்தி                    56

887. உறைநவ மணியி னெல்லிற் கூறுதொல் வேறு பாட்டில்
நிறைநவ வரிக்க ணெல்லை நிறுவிநீ யிறைவன் பாதூ!
துறைநவ நயத்த மாயன் தொடுகழல் தொழுதற் கொத்த
அறைநவ நாபர் கண்ட மண்டலங் கொண்ட பண்பே.                    57

888.  தேறுசொல் லார வில்லோர் வீறணி குணத்துப் பாதூ!
         கூறுபன் மணியி னீமக் கோவையின் சோதி  மல்க
         ஏறியத் தறுக ணானைச் சிகரமீ தமர நின்சீர்
         ஏறுமக் கும்ப மின்னீ டிடுமுடு மாலை வண்ணம்.                 58.   

889. புரியுமுன் தருமம் பாதூ முன்னுபூந் தவிச மர்ந்தாங்
கரியமுத் தணிகு ணங்கொள் ளக்கரத் தக்க மாலை
விரவநீ யருகி னாதன் விரிபத மலரின் விம்பம்
தெரியநின் மனத்து முன்னற் றிதிநல நிலைத்தி போலும்.                59

890. பெற்றதன் னொற்றை யெச்சப் பற்றினிற் பேணி வையம்
முற்றுமன் னொக்க நோக்கி முகந்தரு முகுந்த னொக்க
நிற்றலிற் கதியி னின்கண் ணிறுத்தவ னிலைபெ றுத்தல்
நற்றுயில் புரிய நின்கை யடை த்தல்கை முதியம் பாதூ!                60

891. இடியரு ளரங்க நாத னிணையடி வழங்க நின்னோ
டடிநிலை! கடிதி னின்னை யஙகுபுத் தேளி ரீட்டங்
கடிமலர் பொழிந்து நின்சீர்க் கதிநலம் பரவி யாங்கே
குடியிறை யிடுமு ழக்கி லுலகுக ளெதிரொ லிக்கும்.                    61

892. முனிவரர் நியமமேறு முறையகம் நிறைய மேவி
இனிதடி தோறுமேலு மெண்ணுபண் பண் ணடையின் வண்ணப்
புனிதநின் னொலியி லத்தன் புனைபதத் திரண! நீயே
தொனிமறை யனைய நாதன் துணையடி துலக்கு வாயே.                62

893. திதிதிறை கலைக டோறு மினிநயத் தமுத ரோம்பச்
சதிரணி யமல நீழற் சந்திர முழுமை சால
முதுநல நிலவிற் பாதூ! முழுமதி யுதய மேறிப்
பொதுளக விருள கற்றும் பூரணை  யொருத்தி நீயே.                    63

894. மென்னடைப் பந்தி நாடும் பீடுசொன் னடைதொ டுக்கும்
உன்னதத் திழுக்கு நீக்கும் முடலையிற் சுடலை யாடி
சென்னியின் மிளிருஞ் சேறும் பிறையொடு ககுத்த ருய்யும்
நன்னரிற் கங்கை யொத்தோர் பாதூ! நீ தோன்ற லுற்றாய்.                64

895. துய்யதிருப் பளிகுருவ மிளிரப் பாதூ!
               சுருதிவளப் பரிமளமேன் மேலு நாறச்
        செய்யபொருண் மெய்யுறுதி தெரிக்க நீதி
              செறியதிருச் செல்லுமடி தோறுஞ் செவ்வி
        பெய்யருணீர்த் துறைபெருக வுருப்ப நீக்குஞ்
             சீதநயத் தளித்துலகு நடத்து முன்னைக்
        கையிலகு திருக்கொடுக்கு மிடுக்கில் வையம்
            பையவிளை யாடுநடைக் காளை நாடும்.                        65

896. பிறங்குதிரு வடிநிலைகா ளரங்க நாதன்
            திருவளர்தன் னடையினிலம் வளையு லாவுந்
       திறங்கொளநும் மணியொலியி லிருப தங்க
           ளிடுமியலி னிணையினடைத் தொடர்புக் கொத்த
       நிறங்கொளநா வருங்கிளவி நடக்க வோதும்
           நீதியிலோர் துளக்கமற நிலங்க டோறுங்
      கறங்கலிலின் மறையினிசை முறையொ லிக்க
           வமையுமிடங் கணியிணையிற் செறிவீர் நீரே.                66

897. துன்னுதனை யேத்திமனத் துன்னு நல்லோர்க்
                குற்றபக லெல்லியற வுதித்துப் பாதூ!
          மன்னுயிர்க ளுய்யமணிக் கதிரு ணர்த்தி
                யுத்தமுறு தோடவிடர்த் தொத்த றுத்துப்
           பன்னுகலைப் புலவர்நிரை பரவும் பண்பிற்
               பரமனலப் பதமலர்தாள் விரியும் வண்ணச்
           சொன்னமயக் கரத்தினிறம் பரப்பித் தோன்றுங்
               கோதறுமுற் சந்தியென வோங்கு வாயே.                        67

898. தெருளுமணி நோக்குறமென் னடைந யத்துச்
              செம்மணியின் செழுமையுமி ழிதழ்க னிந்து
        தெருவரிய நுழையிடையின் மின்னல் மன்னித்
             திகழுமணி வலயநலஞ் சிலம்ப நீர்மை
        விரியொளிமுத் தருமைநறு முறுவல் பூத்துச்
            சேரரியின் மாமையிலோர் சாமை பூக்கத்
        தெரிவனுனை யடிநிலை! யா னயன்ப டைக்கு
             மிளம்பிடியர் படிச்சந்தப் பாவை யென்றே.                        68

899. கண்படமன் னவன்குடிக ளரசொன் றின்றிக்
                கலங்கிநிற மழுங்கிநிலை குலைந்து வாடும்
        பண்டொருநான் றணிமணியா சனத்த மர்ந்து
              பரமனணி பாதுனிறை பாடி லங்கும்
        பண்பினிற நெறிநுதலுன் பாரிப் பொன்றிற்
              படரொளியுன் னலமணிக ணிறங்க ணாட்டும்
        நண்பினிலைக் குணமறையவ் வரைய றுக்கும்
              நலமிசைநன் னூலின்விழுக் காடு சாலும்.                            69

900. மேவருணற் குருக்களுனைத் திருமாற் கிட்டோ
             ரேற்றலுரை சாற்றியடி யேற்க வென்றே
        கூவவுனைப் பூவடியி லேந்தி யண்ணல்
           கூடிநடை யாடுதிருக் கண்டு தொண்டர்
       பாவனிலை யுய்வணமுன் பால தென்றே
           பாவனநீ புரிந்தசரண் தமக்கு மாகத்
      தூவுளமன் னுனதுரிமை யுறுதிப் பாட்டிற்
          புரிந்தபெருந் தவத்தாவர் தாமே யாவார்.                            70

901. ஆற்றுகறைக் கருமவயச் சரும யாக்கை
             கழன்றகலுங் காலமுற வடியோங் கட்குப்
        போற்றுமறை முடியரங்க னடிப்பூ மன்னும்
             புனிதமணி பாதுன துன் மணியி னாதங்
        காற்றுவிரி தேனலருந் துளவ நாற்றங்
            கலந்துகுளிர் முதிரிரத முமிழ்ந்து வாட்டம்
       மாற்றுதெரு ளாரமுதஞ் சுருதி யார
            வார்த்தருளு நயத்திலெம தார்த்தி நீக்கும்.                        71

902. கண்ணுதனின் பணியின்முடி நண்ணித் தாழ்த்தக்
               கண்ணிதவ ழிந்துமணிக் கதிர்கள் மேவத்
        தண்ணிலவுன் சந்திரமா மணிகள் விந்து
           தளிர்ந்தவலர் மலிந்தநளிர் வளத்துப் பாதூ!
       எண்ணரிய பவவுரும மருகாந் தாரங்
           கிடந்துழலு மெளியருனை யடைய நின்னோர்
      தண்ணளியின் துளிகளவை தெளித்து நீயே
           தணித்தருள்வா யவர்கணெடு வாட்ட மன்றே.                     72

903. கொண்டவருவச் சிரத்தரிமின் னீலக்காரி
           குலவுகுளிர் முத்தெளிநீர்த் தாரை நல்கக்
      கொண்டநடைச் சபலையெழில் பொழிய வண்ணக்
           கொண்டலென விண்டுபதத் தொலிக்கு முன்னைக்
      கண்டுகளி கொண்டவளி நீல கண்டன்
           கனத்தொருசந் திரகநுதி யுயர்த்த வாறே
     பண்டருதன் கனருசியே பரவப் பாதூ!
            பரிந்துநெடுந் தாண்டவநன் றாடு வானே                        73

904. உலகநல மனவரதங் கருது முள்ளத்
             துலகளந்த பரமனடி புரந்த பாதூ!
       மலியுனளி மலர்த்தரியி னிருதா ளேந்தி
           மலர்மகளோ டரங்கநகர் முற்றுஞ் சுற்றித்
      தலமெழுமங்கலநிகழும் விழவு தோறுந்
          தடையறவொவ் வொருவரக வாயி னாடி
      நலமவர்பால் வினவுநயம் விளங்கு நின்சீர்
           நவமணியி னிறையொலிநீ புரிகின் றாயே.                    74

905. உளங்குளிரக் குடைந்துவிளை யாடல் பூக்கு
             முவகைவிரி பக்கவணி யொக்க மன்னக்
        கிளர்மதன வளத்தனுநாண் குணத்துக் கொத்த
           கிழமையொலி நயநிகழ வரியி னீலம்
       ஒளிர்புகலி லொருபுகலென் றரியின் செந்தாள்
          உமிழ்மதுவொன் றுயர்மதனி னுகரு நீயே
      அளிநலமன் னருளினிலை வண்ணத் தண்ண
             லடிநிலை! யொன் றுற்றவெமக் கபய மாவாய்.              75

906. கனகமுதிர் கதிரடையச் சடையின் செவ்வி
             கனத்தெளிர்மா மணிக்கிளர்தன் பொற்பின் கற்கள்
        கனலுமுடி மின்னிலைமீ தவனி பாயுங்
             ககனநதி தரளவொளி புரளக் கோணிற்
       பனியலையுங் கலைப்பிறைநீர் தலைப்பெ யத்தான்
             பவனெனுமுப் புரமெரித்த பகவ னத்தன் 
       குனிமுடியிற் கொள்ளவுனை வள்ள லன்னான்
         குணநெடியன் பாவலவை யாவி லோங்கும்.                     76

907. ஊங்கமுத ரொழுங்கிலிரு மருங்கு மொக்க
            வுணர்களுடன் பணியவவர் முடியிற் பாது!
        தாங்கவவர்க் கிட்டபரி வட்டப் பாங்கிற்
             றனுகழலத் தரளவெயிற் சட்டை நாற
      வாங்கொருதன் சேடநிலைக் கெல்லை சாலப்
           பாலலையன் துயில்பள்ளி பயின்ற சேடன்
      ஓங்கியிரு பதத்திரண விசித்தி ரங்கொள்
           ளோருருவ மெனவடியே னோர்வ னம்மா.                    77

908. சென்னியுறை பிறையணியி னொழுகு சீதஞ்
             செறியமரர் சிரமலரின் மதுக்க லந்து
       துன்னுபதத் திரணவணத் தயன்தொ டங்கிப்
              புல்லிறுதி யாகுலகு வகைவ ரம்பில்
       மன்னியத னுதயநிலை பெறுத்த னீக்கல்
           மதிபுகுதல் முனிதலரு ணோக்க லாக்கும்
      முன்னலரி புரியுநிறை முன்ன லண்ண
          லோதுமணி பாதநிலை போற்று வாமே.                     78

909. விஞ்சருளத் திருமகளார் சிஞ்சி தச்சீர்
            விரவியெழு விரைவினயம் பயந்து வீசுன்
        மஞ்சொலியுஞ் சந்தவிரைத் திருத்து ழாயின்
             மணமுமுட னுகரவொரு நான்று நின்னோ
        டஞ்சலெனக் கஞ்சமலர்க் காடு பூத்த
            கண்ணெடிய தண்ணளியின் வண்ணத் தண்ணல்
       கொஞ்சளியிற் றொல்லடியேன் முன்னந் தோன்றச்
           சோதிமணி பாதுக! நீ யுதவு வாயே.                        79

910. தாங்கம ராடி! நீ யாடரி நின்னைத்
        தாங்குவன் பூவிடை நீநடை யாட 
        ஓங்கரி தக்கய கூர்மலி யாள
        ஓங்கலு யர்ந்தெழு போதியு ருக்கண்.                        80