ஞாயிறு, 12 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை 19&20

19. பச்சைப்பத்ததி
661. ஏற ரிக்கரு ளப்பொலி வேர்நிறத்
தீறி லவ்வரி தத்துவ நீளொளி
நாறு மத்துள வொத்தப யப்புற
வீறு மம்மணி பாதுவி றைஞ்சுவன். 1

662. அருணடைச் சரண ரங்க னகிலமுன் வயமு லாவும்
அருமையின் புறணி நின்ற கலுழவம் மனத்தன் பாதூ!
புரிதனக் குரிய நாமம் புனையுமுன் மணியி லண்ணல்
தெரிகழல் திகழக் கண்டே தேறுவன் கலுழ னென்பான். 2

663. அளிமணத் தளிம மண்ண லடையமுன் னெழில்கொ ழிக்கும்
வளமணப் பச்சை நாறுன் னொளிகளே யமல பாதூ!
தளிரவன் சரண லர்த்தும் நளிர்விரைத் துளவ மென்றே
களிமனைத் துனைவி தந்நற் கரங்களிற் குனிந்து கொள்வார். 3

664. பத்துடைப் பகவர் நின்கண் பணிந்துதூ வணிசு மங்கள்
அத்திறப் பசுமை நல்குன் மரகதப் பயப்பி லாழ்ந்து
நித்தமவ் வரிநி றத்தே நிறைமணத் துளவ மன்ன
உத்தமன் புனித பாதூ! உருவளத் திருவி ளங்கும். 4

665. பூதலம் தழைய மாயன் புகழ்விளை யாடல் பூக்கும்
போதுநின் கதியி லன்னான் பொதியெழில் பொழியு மேனிச்
சோதியங் கடலெ னச்சீ ரொழுகமா லடிநி லாயுன்
பூதளிர் மரக தத்துப் பூத்தெழும் பதியம் போல்வாய். 5
666. மதியருண் மணவ ரங்கன் மணிபதா வனி! யு னன்னர்க
கதிர்வளங் கனத்த பச்சைக் கரங்களின் மருங்கு சூழும்
சதிர்மறைச் செல்வ மங்கை மங்கல முடிக்கண் சாலப்
புதியபச் சறுகு மாலைத் தொகைகணீ தகவி சைப்பாய். 6

667. அரிதமார் கலிய தாமங் கடுகநற் பதம தென்றில்
தெருபராங் கதிசெ றிந்தே திரிதருன் பிரமச் சீர்த்தி
விரிதலா லிலகு தேரோன் விசயநாப் பண்வி ளங்கும்
அரிநிலா வணிதி ருத்தே ரடிநிலாய்! படியு லாவாய். 7

668. வளரரி மறையி னெல்லை வனநறும் பொழிலி னோரத்
தொளிர்தலி லுனது பச்சை குளிரெழில் தழையு மாறே
தெளிபரன் சரண கச்சீர் நிகழ்வா நதியி னீத்தந்
தளிரிரு கரைப சும்புற் றரைவளம் திகழும் பாதூ!. 8

669. உயரொரு கதியி னோக்கி லுடையவன் கொடைய டிக்கே
துயமறை துளங்கத் தன்னைத் துறந்துவாழ் தொண்டு மன்ன
மயவரி யிசையு முன்னற் பசுமையின் மலிவிற் பாதூ!
நயமண மலர்து ழாயின் வனநளி வளர்க்கி றாயே. 9

670. புலவருன் புனித சேவை புரியநல் வரியி லன்னார்
மலிசுடர் முடியி னம்மா மணிகணக் குரலி னாப்பண்
வலவனங் கிரிநி லாயுன் வளரரி வனப்பி லாங்கே
மலர்பசுங் கிளிநி றத்த மகிழ்பசுங் கதிர்வி ரிப்பாய். 10

671. வளவிள விளைவின் மாண வரிதெரி யறுகின் வண்ணங்
கிளருன தொளியி லண்ணல் திகழிணை யடிநி லாய்! நீ
நளிர்மதி முடிய னேந்துஞ் சதிருழைக் குழவி நாடி
வளர்பத விழைவின் மேய் வருநிறை யரிதெ ளிப்பாய். 11

672. பரனடிப் பதும நண்ணும் பசுநிறக் கிழமை பூக்க
அருமறைத் திருவு ரைப்பண் ணருச்சனை முறையி னாடி
விரிதளம் புரிது ழாய்கள் விழைந்தரி யடிநிலாயுன்
திருவெழின் மரக தச்சீர் திகழொளித் திரளி லாழும். 12

673. மறையக மணம லர்ந்த மரகத மணிக ணத்தின்
நிறைவள நிழல்க ணீட்டி நிகழ்குது கலத்துப் பாதூ!
துறைதொறு மருவு மாயோன் சுருதியாங் குமரி கட்கோங்
கிறைமண மலியச் சென்னி மிசைமருந் கொழுந்தி சைப்பாய். 13

674. ஒருநினக் குரிமை சான்ற வுயர்மதித் துறவு மன்னும்
வரையகத் துறைகள் மல்கா ரணியகத் தவசி வாழக்
கருதருன் னரித வண்ணச் சாமமா நீம மீதே
உருவளக் கிளைக ளான்ற முளையரண் வனைதி பாதூ!. 14

675. மன்னுசீ ரொழுகு சாகை மணிபதா வனி! ம ணாளத்
தென்னரங் கனது செந்தாள் தேனுகிர் விரியுந் தாமம்
மின்னுநல் லரித பன்னந் துன்னலிற் பாது! நின்னைப்
பொன்னிநீர்த் தடத்து லாவும் பொழிற்றிரு வெனத்து திப்பாம். 15

676. தழைமண நளின மூலந் தளிருகிர் மிளிர நாளும்
ஒழுகினி திரத நீரி லொளிருமுன் னரித நீமத்
தழகன தடிம லர்க்கண் ணலர்புதுச் சதன மன்ன
எழுநில நிகழும் பச்சை யெழிலடி நிலை! தெ ளிப்பாய். 16

677. நல்குர வொலிந லிந்த நரையிலார் தெரிவை யீட்டஞ்
சொல்குறைக் குருகு பாதுன் சுடர்மர கதம னிக்கண்
மல்கொளி மலிய மாயன் மலர்பதத் தணைய வன்றே
ஒல்குவல் லசுர ரில்லம் புல்லெழும் பசுமை வீசும். 17

678. பொதிமதத் திமிர நண்ணுப் பொலிபக லொளிவி ளங்கும்
பொதிருமம் மேலி ணீலக் குருவரி பதம ளாவும்
புதுபசும் பரியின் வாசி புரியிறைக் கதியிற் பாதூ!
நிதிமிக வரித மன்னின் னிறைதிரு நிகழ்த்து வாயே. 18

679. மாமகிப் புனித மங்கை மனங்கவர் மருங்கி லாயர்
கோமளக் கொடிகள் கோடி கோலெனத் தேடுந் தாரை
மாமயல் கொழிக்குங் காளை மருவநின் னரியிற் பாதூ!
ஆமறைக் கிழவிக் கமமா சாமநீ சமைக்கின் றாயே. 19

680. கோலநின் வாளரிச் சாமவா ழோலையில்
மூலமா நாரணன் மூரிமன் வீறவில்
தாலமா தாதலத் தாமரைக் கோயிலாஞ்
சீலமே பாது! நீ ஞாலமீ தேறுவாய். 20

20. நீலமணிப்பத்ததி
681. அரித னோடரி நீலம வற்றொடு
மிருநி லந்தெளி தாளொளி வீறினிற
புரிமு யற்சிபு றம்பட வேபெறப்
பெருந யந்தரு பாதுகை பேணுவன். 1

682. வரிகொ ணல்லரி வாழ்மணி நின்னொளி
விரிவ ளங்கிளர் நீலிநி றக்குணம்
பரவு நாரணன் பாது! மறைத்தலை
நரையு றாநல நல்கும ருந்தென. 2

683. கோதி லாமறை மங்கையர் கோதையென்
றோத லாமணி யோங்குனொ ளித்திரள்
ஆதி மாமண வாளன ருட்கடல்
மீது நாரமி ளிர்ந்தென பாதுகாய்! 3

684. தீதி லாவரி நீலவ ரிக்கிளர்
நீதி நின்றடி நீநிழ னீளலில்
மீது சீரெழு சீதர னாரிருஞ்
சோதி கீழுறு மோதரி பாதுகாய்!. 4

685. துவரை மன்னன ரங்கமு வந்திட
அவுரி மன்னிற வந்நதி யென்னமா
தவப தாவனி! தாங்குநி னீலநேர்
சவிவ ரிந்திரு காவிரி சாலுமே. 5

686. தேறு நாரண னேறிறைத் தீரர்கட்
கிறி னின்னரி நீல மணிச்சுடர்
வீறி லேறரி பாதுகை! வீசலில்
நாறு வாரவ ரன்னவன் சாயலே. 6

687. நீல நின்மல நின்மணி நீமமை
சீல ராமவர் கண்களி னீயிட
மூல மன்னிறை கோசம மர்திரு
மாலெ னும்மறை மாநிதி தோன்றுமே.
688. திடனி னீளுநி னீலம ணிச்சுடர்
படர்ந லத்தரி பாதுகை! வீடெனுந்
திடவி சும்பினி குத்தைக ணீக்குமா
றிடுக லத்திற வொன்றென வெண்ணுவன். 8

689. கொடிய வையக நையுறு கோரநன்
றிடிய வாரமு தாரணி நீலநீள்
தடம ணிச்சுடர் தாங்கரி பாது! மால்
படல மன்னப டர்ந்துது ளங்குவாய். 9

690. கிளர நின்னரி நீல நிழல்கட
வுளர்வ ணங்குது ணர்முடி மீமிசை
வளர ருள்விளை யாடரி பாது! நீ
அளிகொ ளவ்வரி யந்தமி லங்குவாய். 10

691. அரிம ணிக்கரு மைவரி யாற்றலில்
அரிய தத்துவ மாய்வினை யோர்மலர்
நரைய கத்துறை நாட்டந னந்தலைக்
கருவி ழித்திரு பாது! வ யங்குவாய். 11

692. மாவி ழிக்கரு மைவள மேறுசீர்
மேவு மம்மணி மாலெழி லாழியின்
பாவ னின்னரி நீல மணிக்கதிர்
தூவ லென்னத ளிர்ந்துது ளங்குமே. 12

693. மீளி யோகு மிளிர்தவர் மாமதி
நீளி ராவில டித்திதி! நின்மணி
வாள ணங்கணி யாவர ணத்துமீக்
கோளொ ழுக்கில ரங்கனைக் கூடுமே. 13

694. நீல மாமணி பாதுக! நின்னொளிக்
கோல மாவிழி யஞ்சன மைகொளார்
சால கத்துறை மாநிதி மாலையோர்
காலு மேயவர் காணகி லார்களே. 14

695. சந்த மன்னரி நீல மணிச்சுடர்க்
கந்த ரங்க நயத்தரி பாதுனை
வந்து மாலடி வையவ டுப்பொறன்
றுந்து பூமி மடந்தையென் றுன்னுவன். 15

696. காசி னிப்பிற வாமசி யாசுகண்
டீச னங்கிரி வாசினி பாது! நின்
தேசு வீசரி நீல மசிக்களால்
ஆசை முற்றுமு னாசிபொ றித்தபோல். 16

697. பாது னேர்மணி வாள்வழி மேவலிற்
போது மோர்பக லூடுப டாததாற்
கோதி லாய்ச்சியர் கோவல னோடிராப்
போது போல்வெறி யாதுவி ழைந்தனர். 17

698. பாது! மாலடி மன்னிய வர்க்கரி
யாத வச்சம னல்குமு னீலமீ
தேது வாதியர்க் கீதுகண் கூடென
வோது தற்கிர துண்மையு ணர்த்திபோல். 18

699. ஓசை நற்பிறை பூசனை யாற்றிடக்
கேச வற்கரி பாதுகை! நின்மணித்
தேசு வண்டுதி ரண்டெமு னைத்தரும்
வாசி யிற்பிர யாகைய தாகுமே. 19

700. மால டித்தல மாநக வாலமுன்
நீல மாமணி நீர்மைக லத்தலின்
சீல னன்னவன் சீரெழி லாழியின்
சோலை யங்கரை யோங்கொளிர் பாதுகாய்!. 20

701. ஈது னிந்திர நீலமெ னச்சிலர்
பாது! மந்தர்கள் பார்ப்பர்க ளம்மநீ
போத யோகிய ருள்ளம ருட்கருள்
சாது றிஞ்சிய சால்பது சாற்றுவோம். 21

702. துன்னரி நீல மெல்லி புரிநயக் காரிப் பக்கம்
தென்னடைத் தெளிவு மொன்றி யெவரையுங் கரைக டத்தும்
உன்னதத் தந்த மாவீ டுறுபத வரம்பி லாதென்
றுன்னுமம் மறையி னுண்மை யுணர்த்துவா யெமக்குப் பாதூ!. 22

703. சற்கணஞ் செறிய வெற்றிச் சதிர்நடை யரங்க வேந்தன்
நற்கதி யுதயஞ் சான்ற நத்தநின் னீல மீன
வற்புதக் குமுத நோக்கிற் பாது! நீ விபுத மாதர்
இற்புகழ் வதனப் பற்பு விரிக்குமிந் நீதி யென்னே!. 23

704. திருவிழி யெழில்பு ரந்த திகழரி நீலக் கல்லின்
நிரையினி லரங்கன் தோற்றச் சாலநற் சிலைக ளென்னத்
தருமிக யோத்தி தன்னிற் பாதுனைப் பரம முத்தி
புரிநிறை சால மென்ற நிலமெனப் புகழ்வ ரான்றோர். 24

705. தென்னரங் கனதி ருந்தா ளின்னுயிர்த் துணைவி நின்மீ
தன்னவ னமளி நின்றங் கிரண்டுமூன் றடிந டக்க
மன்னரி விரியு னீல மணியொளி மலிந்து பாவால்
இன்னல்செ யரக்கர் மாதர் விரித்துவீழ் கூந்த லொக்கும். 25

706. அரங்கனக் கணங்க ணாட வழங்கடி யெடுக்குங் காலுன்
பரவரி நீல நீமம் பாதுகாய்! பரவக் கண்டு
கரநெடுங் கோலொ டண்ணல் காவலா யேவல் செய்வோர்
காரையங் கழைக்கு முன்னப் புகுடியென் றுணர்வர் தாமே. 26

707. அடியர்கட் கிடுமை யாடு மாங்கனுக் கவிடி கூடும்
திடமதித் தேவ யாற்றுக் கெமுனைமா லமுத முந்நீர்க்
கடர்நிழற் சோலை வேலை மலர்மகள் குழலின் கற்றை
நெடுமறைக் கிடுந ரந்தம் பாதிதுன் னீல நேர்த்தி. 27

708. படரருள் பயந்த பண்பிற் பரமனிப் புவன நோக்கும்
நடைகொளப் பெருகு பாதுன் னயவரி நீல நீழல்
சுடரவன் முருக டற்கைம் மாமதக் கன்ன மூற்றும்
கடமதக் கரிய தாரைக் கமலமென் றுன்னவாமே. 28

709. ஒளிர்பரன் தளிர டிப்போ துமிழடை மரந்த மென்னக்
குளிரநீ யளிக ளொப்பத் தோய்ந்தரி நீலக் கற்கள்
வளர்திடன் கனத்து நின்கண் பதிந்தவை வதிந்து பாதூ!
கிளரொளி பரந்து கீழும் மேலுமே நிகழு நாளும். 29

710. கடுவைக் கடுவாற் களைவா ரதுபோல்
தடநின் னரிநீ லமணிக் கருளால்
நடைநல் லாரிபா துனைநா டுநலர்
மடமைக் கருளைத் துடியிற் கடிவாய். 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக