வியாழன், 25 டிசம்பர், 2008

திருவருட்சதகம்

அநுசரசக்த்யாதி குணாமக்ரேஸர போத விரசிதாலோகாம்

ஸ்வாதீ நவ்ருஷகிரிசாம் ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாணயாமிதயாம்.

பின்னடைச் சத்தி யாதிப் பண்புநின் பாங்கு தாங்க

முன்னடைப் போத வெள்ளச் சுடருனக் கொளிதெ ளிக்க

நின்னயத் திருவ னென்றே நடைத்திரு விடப வெற்பன்

தன்மையொன்றுணர்த்து மாட்சித்தயையுனைத் தெரியக்கண்டேன்.

[சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேசு என்னும் குணங்களைத் தனக்குப்பின் தொடரும் ஊழியக்காரர்களாகவும்,ஜ்ஞாநம் என்னும் குணம் தனக்கு முன்கையில் விளக்கை வைத்துக் கொண்டு வழிகாட்டிக் கொண்டு போகும் வெளிச்சத்தை உடையவளாயும்,வேங்கட வெற்பனைத் தனக்கு ஸ்வாதீநமாக உடையவளாயும், தானே பிரபுவாயும், தானே ஆவிர்பவிப்பாளாயும் உள்ள தயாதேவியே கதியென்று அவளைச் சரணம் புகுகின்றேன்.]

அபிநிகில லோகஸுசரித முஷ்டிந்தய துரிதமூர்ச்ச்நாஜுஷ்டம்

ஸஞ்ஜீவயது தயேமாமஞ்ஜ நகிரிநாத ரஞ்ஜநீபவதி. .12.

உள்ளுநல் லுலகு வாழக் கொள்ளுநல் லொழுக்க முற்றும்

கள்ளுமோர் சிறங்கை யாகக் குடித்தகம் தடித்த யர்ந்தே

உள்ளவோர் விரகி லாத வென்னுயிர் தயையு னக்காய்த்

தெள்ளருட் டேவ னாவித் தேவிநீ தெளிவிப் பாயே.

[அகில புவநங்களும் செய்த புண்ணியம் அனைத்தையும் ஒரு கையால் எடுத்து உறிஞ்சி விடக்கூடிய பாவங்களைப் புரிந்து அந்தப் பாப விஷமூர்ச்சை மிதமிஞ்சி ஏறியிருக்கும் என்னையும், அஞ்சநகிரிக்கு அதிபதியான அலர்மேல் மங்கை உறை மார்பனை ரஞ்சிப்பிக்கும் அவனது ஆவித்தேவியாகிய நீ என்னை உயர்த்தி எனது ஆத்மாவை உனதாகச் செய்யவேணும்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக