ஏற்கனவே இங்கு ஸ்ரீ கேசவ ஐயங்கார் தயாசதகத்தை திருவருட்சதகமாலை என தமிழாக்கம் செய்ததை எழுதிக் கொண்டிருந்தேன். முதல் 5 பாட்டுக்களுக்குப்பிறகு தொடரமுடியவில்லை. இன்றிலிருந்து மீண்டும் 6வது பாடலிலிருந்து தொடர்கிறேன்..
ஸமஸ்த ஐநநீம் வந்தே சைதந்யஸ்தந்யதாயி நீம்
ப்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம். .6.
துன்னுமுடி மின்னுமிறை யுன்னுதிரு மன்னன்
பொன்னருளி னன்னகுரு வென்னவுயி ரெல்லாம்
மன்னுமக வன்னவுணர் வம்மமினி தூட்டும்
அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன். .6.
{ உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியை சரணம் அடைகிறேன்.}
வந்தே வ்ருஷகிரீசஸ்ய மஹிஷீம் விச்வதாரிணீம்
தத்க்ருபா ப்ரதிகாதா நாம் க்ஷமயா வாரணம்யயா. .7.
அன்னவன ருட்குறுத டக்குகள டக்கத்
துன்னுகமை கொண்டுதனி முன்னுதவு நன்மைத்
தன்னிலை யிலோங்கிமகி தாங்கியெனு நாமம்
மன்னுவிடை யத்திரியன் பத்தினிது தித்தேன். .7.
{அகில புவனங்களையும் தாங்குகிறவளும், வேங்கடாத்ரி நாதனுக்குப் பத்தினியாயும், கமையெனும் பொறுமைக்குணத்தால் வேங்கடநாதனுடைய கிருபைக்கு விக்நங்களனைத்தையும் தடுப்பவளான க்ஷமை எனப் பெயரிய பூமிப்பிராட்டியைத் துதிக்கிறேன்.}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக