வியாழன், 22 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை

4. பணயப்பத்ததி

101. எவையு முய்யவெ னய்யன யோத்திமீண்
       டவனி யாண்டருள் செய்பய ணத்துமுன்
       னவணி நன்றத னுப்பலெ னத்தரும்
       சுவண மன்னிரு பாதுகை யுன்னுவாம்.

102. நீடுகுல மேறுதிரு நீதியர சோடும்
        நாடுகுடி யன்புநெடு நாடுடனு யிர்த்தோர்
        காடுதனி யேகியிறை  யாடிரகு வீரன்
        ஈடெனநி னைத்துனைநி லைத்துணைவ லித்தான்.

103.  நாடலற நாதனெடு காடுபுகு காலில்
         நாடிமன மீளவவ னைவளமொ லித்து
         வாடுமிள மெல்லிதய வஞ்சியென விஞ்சிக்
         கூடியடி கெஞ்சியருள் கொஞ்சினைம ராடீ !

104.  அச்சுதன கன்றரகு மன்னகரை நம்பி
         துச்சமென வெண்ணியவ னுச்சியிலு னைக்கொண்
         டுச்சினிய வந்திதுரை மோதயம யோத்தி
          யுச்சமவை பாது !நின தென்றுமதி பூத்தான்.
105.   தஞ்சமென வோங்குலகு தாங்கிரகு வீரக்
         கஞ்சவிழி யஞ்சனவ ணப்பானை யாங்கும்
         மஞ்சுமுடி தாங்குவலி கண்டிளையன் பாதூ !
         கொஞ்சுல ளித்தரசு கொள்ளுனையி ரந்தான்.

106.    அய்யனடி நின்றிளவ லன்பிலுனை வேண்டல்
          துய்யமணி பாது !தனி நிற்கவுனை வைய
          முய்யவரு மாதியென மூதறிஞர் காண
           மெய்யறையு மாமுனிவ சிட்டனுள மென்னோ?

107.  மூதரசு துஞ்சவிறை முன்னடவி யேகச்
        சாதுவொரு தம்பிபரி வாதமொழி யஞ்சச்
        சீதையென சாகசநீ செய்தனையெ னிற்பொற்
         பாதநிலை! கோசலரை யாற்றுநல ராரோ?

108. ஆமுயிரெ வைக்குமிறை யென்றறைம றைச்சீ
        ராமனதி னின்னிருமை மாணுமணி பாதூ!
        ஆமவனை யேபெறவ ரும்பரத னுக்கே
        மாமுதனி திப்பணய மாயினைம தித்தே.

109. முன்னமளி மன்னபய முன்னொளிதெ ளிக்கப்
        பின்னிளவ லண்ணநகர் பின்னடிபி டிக்க
       நின்னடையி லக்கடல்க டந்தடிநி லாயவ்
       வன்னிருதர் மன்னகரி றுத்தொளிப லித்தான்

110. அத்திறநெ டுஞ்செடிக ளத்தனையு மேநீ
       யொத்திபொறை மேனிகமை கொள்ளுமணி பாதுன்
       தொத்தறலி லத்தனொரு வீரனென மூரி
       யுத்தநிலை யெற்றுமுடி பத்துடனு திர்த்தான்.

111. செப்பமுற வப்பனுரை செய்துமிகு மன்னைச்
        செப்பலுநி ரப்புதன தின்னுளந லத்தோ
        வொப்பருதி ருப்பொலிய மோலிமணி யெம்பிக்
        கப்பனணி பாது!நினை யம்முடிக வித்தான்.

112. அய்யனரு ளங்கிரிசு ரத்தலிலு னைத்தான்
       செய்யதுற வொண்சடையி னம்பிநனி யேந்தி
        மெய்யனணி பாதநதி பாது!முடி மேவுந்
       துய்யபவ னத்தனிம மித்தவனு மொத்தான்.

113. மெய்யனிறை தேறுமடி சேருமணி பாதூ!
       உய்யவுல கேழுமர சாளுரிமை கொள்ளப்
       பொய்யலையு மோலியறு பொன்முடியி லுன்னைத்
       துய்யதுற வொன்றுதிரு நின்றவன்சு மந்தான்.

114. நன்றகில நோக்குமளி நாறுமணி பாதூ !
       ஒன்றுனையு ணர்ந்தனுச னுத்தமனை வேண்டத்
       தன்றிரும திச்சரண கச்சவியி லன்னான்
       நின்றருளி னிற்குமுடி யாட்டினனி வந்தே.

115. காதலினி தேறுனது மாலடிக லக்கும்
       நீதியிறை யந்தவிதி நந்தனனி யம்பப்
       பாதுனையி ராமகிரி மாதவர்ப ணிந்தெப்
       போதுநிறை யோதுவர்க ளோம்பனல றைக்கண்.

116. உன்னியன டைத்திடனெ னத்தனிவ னத்துத்
       துன்னொளிய ழைக்குமுறை யுன்னியிறை நின்மேல்
       தன்னடியை யொற்றிநடை யாடுவலி யுற்றே
       மன்னுகடு கற்கணெடு தண்டகா டந்தான்.

117. நாதனடி நின்றுமணி யாசனம மர்த்தி
       நீதியுல காளவொரு காளைமுடி யேறிப்
       பாது !வர வீதுபுர வாசிபெறு பேறென்
       றோதுனல வாசியிசை பாடிமகிழ் கூர்ந்தார்.

118. ஏறுநடை யண்ணனிறை யேவலுரு நின்னை
        நாறுமுடி மீதுமணி பாதுகை! தரித்தே
        வீறணிம திப்பரத னின்னரசு தன்னில்
        வேறரச றத்தரைநி றுத்தினன னைத்தும்.

119. இன்புறவை யகமகில மளித்துக்காக்கும்
               பீடுடைமெய் யோகியர்கண் கண்டுபாட
        நம்பிதிருப் பரதனொரு தம்பியென்றே
               நடையிரகு நாயகனா மரங்க நாதன்
        அன்பிலனு தினமுநெடி தவன்வ ணங்கத்
                தனதுபத விலையெனமெய் யுறுதி சாற்றி
        அம்பலநின் றன்றவனுக் களித்த வந்நல்
                லடிநிலையென் சிறுமையறப் போக்கி நோக்கும்.

120.  கட்டுதி ருப்பர தன்முடி போலென்
         மட்டப வாதம கற்றிம ராம !
         கிட்டியெ னுச்சியி னிச்சலுங் கோயில்
         நட்டலி னீபரி வட்டமெ னக்கொள்.
        
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக