Monday, September 5, 2016

अभीतिस्तव:

அபீதிஸ்தவம் 


சுலோகம் 18

निसर्गनिरनिष्टता तव निरंहसः श्रूयते
         
ततस्त्रियुग सृष्टिवत् भवति संहृतिः क्रीडितम्
तथाऽपि शरणागतप्रणयभङ्गभीतो भवान्
         
मदिष्टमिह यद्भवेत् किमपि मास्म तज्जीहपत् 

நிஸர்க³நிரநிஷ்டதா தவ நிரம்ஹஸ: ஶ்ரூயதே
ததஸ்த்ரியுக³ ஸ்ருஷ்டிவத் பவதி ஸம்ஹ்ருதி: க்ரீடி³தம் |
ததா²
பி ஶரணாக³தப்ரணயபங்க³பீதோ பவாந்
மதி³ஷ்டமிஹ யத்³வேத் கிமபி மாஸ்ம தஜ்ஜீஹபத் ||

த்ரியுக -- (கலியுகம் தவிர மற்ற) மூன்று யுகங்களில்  விபவாவதாரம் செய்பவரே! ஷாட்குண்யபூர்ணரே!; நிரம்ஹஸ -- பாபமற்றவரான; தவ -- உமக்கு; நிஸர்க நிரநிஷ்டதா -- எப்பொருளும் அநிஷ்டமாகக் கூடாத ஸ்வபாவமானது; ஶ்ரூயதே -- சுருதியில் கூறப்பட்டிருக்கிறது. தத: -- ஆகையால்; ஸ்ருஷ்டிவத் -- ஸ்ருஷ்டியைப் போல; ஸம்ஹ்ருதி -- ஸம்ஹாரமும்; தவ -- உமக்கு; க்ரீடிதம் -- விளையாட்டாக; பவதி -- இருக்கிறது; ததாபி -- அப்படியிருந்தும்; பவாந் -- நீர்; ஶரணாகத ப்ரணய பங்க பீத -- சரணாகதனுடைய உம் விஷயமான பரிவைத் திரஸ்கரிக்க பயப்படுகிறவர் இஹ -- (ஆகையால்) இவ்வுலகில்; யத் கிமபி -- எது ஒன்று; மதிஷ்டம் -- எனக்கு இஷ்டமாகுமோ; தத் -- அதை; மாஸ்ம ஜீஹபத் -- நழுவ விடக்கூடாது..

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

இழிவேதும் அற்றவன்நீ என்பதனால் துக்கமிலா
இயல்புடையன் எனவுன்னை இயம்பிடுமே அருமறைகள்!
செழிப்பான அறுகுணங்கள் நிறைந்தவனாம் உன்றனுக்கு
சிருட்டியைப்போல் அழித்தலுமோர் திருவிளையாட் டெனவாகும்!
வழிபட்டுன் அடியடைந்தோர் விருப்பத்தை மறுப்பதற்கு
மனமஞ்சி நீயென்றன் விருப்பத்தில் நல்லவற்றை
ஒழியாமல் மேற்கொண்டு உரியதனைச் செய்வதனால்
உனையுற்ற எனைக்காத்தே ஊக்கமுடன் அருளிடுவாய்! 18.

 அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

         'என் விக்ரஹத்தை ரக்ஷித்துக்கொள்ள வேண்டும் என்று நீர் ப்ரார்த்திக்கிறீர் என்று தெரிகிறது. ஆனால் என்னுடையதை நான் ரக்ஷித்துக் கொள்ளாமல் விடுவேனா? வராஹ நாரஸிம்ம ராமாத்யவதாரங்களில் சத்ருக்கள் என் விக்ரஹத்தை ஹிம்ஸிக்கும்படி விட்டேனா? ஆதலால் நீர் ப்ரார்த்திப்பானேன்?' என்று பெருமாள் சங்கை ஸூசிதமாக, அந்த ஆக்ஷேபத்தை அழகாகப் பரிஹரிக்கிறார். 'உமக்கு ஸ்ருஷ்டியைப்போல, ஸம்ஹாரமும் விளையாட்டே. தன்னுடையதைத் தான் அழிப்பானோ என்று உம் விஷயத்தில் கேட்க முடியாது. நீர் ஸம்ஹாரம் செய்வதும் உம்முடையதைத்தானே! உமக்கு அநிஷ்டத்தை நீர் தடுப்பீர். விரோதிகள் உம் விக்ரஹத்தை உதைத்தாலும் அது உமக்கு அநிஷ்டமாகாது. உம்மைப் பற்றி निरनिष्टोनिरवध्य:(நிரநிஷ்டோ நிரவத்ய:) என்று ஏகாயந சுருதி கூறுகிறது. निरनिष्टो निरंहसः (நிரநிஷ்டோ நிரம்ஹஸ:) என்றும் சுருதி. ஒரு பொருள் அநிஷ்டமாவதற்கு பாபமே காரணம்; காரணமான பாபமில்லாத முக்தனுக்கு ஒரு வஸ்துவும் அநிஷ்டமில்லை, எல்லாம் ஸுகரூபமே. இது முக்தனுக்கு நீர் கொடுக்க வந்தது. உமக்கு இது ஸ்வபாவம். உலகத்தில் பயமேயில்லாத உமக்கு ஆச்ரிதனுடைய இஷ்டத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்று ஒரு பயமுண்டு. உம்முடைய திருமேனி ரக்ஷை என் இஷ்டம் (மதிஷ்டம்). உம் திருமேனியின் லயம் எனக்கு அநிஷ்டம். உமக்கு ஸ்வயம் இஷ்டாநிஷ்டங்கள் இல்லாது போனாலும், ஆச்ரிதனான எனக்கு இஷ்டபங்கம் வராதபடி உம்மை ஸதா ஸேவித்துக் கொண்டிருக்கும்படி உம் திருமேனியை ரக்ஷித்தருள வேண்டும். அதனால் ஆச்ரிதர்களுடைய ப்ரணயபங்கம் வந்துவிடுமோ என்கிற பயம் உமக்கும் ஏற்படாது.

         இங்கும் ஆளவந்தார் ஸ்தோத்ரத்தின் வார்த்தையையே அநுஸரிக்கிறார்.