வியாழன், 15 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


சுலோகம் 28

यतिप्रवरभारतीरसभरेण नीतं वयः
            प्रफुल्लपलितं सिरः परमिह क्षमं प्रार्थये ।
निरस्तरिपुसंभवे क्वचन रङ्गमुख्ये विभो
            परस्परहितैषिणां परिसरेषु मां वर्तय ॥

யதிப்ரவரபாரதீரஸபரேண நீதம் வய:
         ப்ரபு²ல்லபலிதம் ஸிர: பரமிஹ க்ஷமம் ப்ரார்த்²யே |
நிரஸ்தரிபுஸம்வே க்வசந ரங்க³முக்²யே விபோ
         பரஸ்பரஹிதைஷிணாம் பரிஸரேஷு மாம் வர்த்தய ||

விபோ -- ப்ரபுவே! ; யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -- யதிராஜனுடைய ஸார தம ஸரஸ்வதீ ரஸாநுபவ கனமாகவே; வய: -- யௌவன வயதானது; நீதம் -- சென்றது; சிர -- தலை; ப்ரபுல்ல பலிதம் -- மலர்ந்த புஷ்பம் போல் வெளுத்து விட்டது.; பரம் -- இனி; இஹ -- இவ்வுலகில்; க்ஷமம் -- (எனக்குத்) தக்கதை;  ப்ரார்த்தயே -- வேண்டுகிறேன்; நிரஸ்த ரிபு ஸம்பவே -- சத்ருக்கள் இருக்கலாம் என்று ஸந்தேஹிக்கக் கூட அவச்யமில்லாமல் நிர்ப்பயமான; ரங்க முக்யே -- அரங்கம் முதலிய க்ஷேத்ரங்களில்; பரஸ்பர ஹிதைஷிணாம் -- ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேஹித்திருப்பவரின்; பரிஸரேஷு -- அருகில்; மாம் -- அடியேனை; வர்த்தய -- இருக்கச் செய்யவேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

எதிராசர் சொற்சுவையை அனுபவித்தே இளமைசெல
என்தலையும் நரைத்ததுவே முற்றிலுமே அப்படியே!
எதுவொன்று என்றனுக்கே இனியுமிங்கே ஏற்றதுவோ
அதனைநீயே அளித்திடுவாய்!அரங்கநகர் பெருமானே!
எதிரிகளாய் எவருமே இருந்திடாத நிலைகொண்ட
எழிலரங்கம் போலேதும் இடமொன்றில் ஓரொருவர்
இதந்தனையே விரும்புவரின் இடையினிலே அடியேனை
இருக்கவைத்து வரும்நாளை இனிதாக்கி அருள்வாயே! 28.


அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         அரங்கம் மட்டுமல்ல, நம் திவ்ய தேசங்கெல்லாம் சத்ரு ஹிம்ஸை இல்லாமல் இருக்க வேணும். கச்சியை விட்டு அரங்கம் வந்த எனக்கு ஸ்ரீபாஷ்யாதி ப்ரவசநம்  செய்வதிலேயே நீண்ட காலம் இன்பமாய் வயதெல்லாம் சென்றது. பரஸ்பரஹிதைஷிகளும் பரம பாகவதர்களுமான பெரியோர்களுடைய ஸத்ஸங்க ரஸமும் அனுபவிக்கப் பட்டது. இந்த ரஸங்களுக்கு விச்சேதமில்லாமல் ஆயுளின் மிகுதியும் அரங்கத்திலேயே கழிய வேணும்.

         யதி ப்ரவர பாரதீ ரஸ பரேண -- ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் எமக்கு நித்யம். प्रपद्ये प्रणवाकारं भाष्यं रङ्गमिवापरं  (ப்ரபத்யே ப்ரணவாமாரம் பாஷ்யம் ரங்கமிவாபரம்) दृष्टं श्रीरङ्गधामनि  (த்ருஷ்டம் ஸ்ரீரங்கதாமநி) என்று சொல்லாமல் ஸ்ரீபாஷ்ய காலக்ஷேபம் கூடுமோ? அரங்கத்திற்கு ஆபத்து வந்தால் பாஷ்ய காலக்ஷேபம்  இன்பமாக எப்படி நடக்கும்? நிர்ப்பரராயினும் பாஷ்யத்தின் ரஸபரம் அளவேயில்லை. யதிராஜனுடைய கத்யங்களை தினமும் அனுஸந்தித்து ரஸத்தில் முழுகுகிறோம். இங்கேயே  ஸ்ரீரங்கத்தில் ஸுகமாக வஸிப்பாய் என்று தேவரீர் நியமனத்தைச் சொல்லிக்கொண்டே யிருக்கிறோம். யதிராஜன் திருநாமத்தைச் சொல்லி, அவர் ஆக்ஞையை விருத்தியும் அபிவிருத்தியும் செய்யவேண்டுமென்றும், யதிராஜனுடைய அரங்கம் வாழவேண்டுமென்றும் பிரார்த்தித்தால் பெருமாள் மறுக்க மாட்டார் என்று முடிவில் அதைப் பிரார்த்திக்கிறார். ஸுந்தரபாஹு ஸ்தவத்தில் முடிவில் ஆழ்வானும் யதிராஜனோடு அரங்கத்தில் வஸிப்பதைப் பிரார்த்தித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக