Wednesday, September 14, 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


சுலோகம் 26

विधिस्त्रिपुर मर्दनस्त्रिदशपुङ्गवः पावको
            यमप्रभृतयोऽपि यद्विमतरक्षणे न क्षमाः ।
रिरक्षिषति यत्र च प्रतिभयं न किञ्जित् क्वचित्
            सः नः प्रतिभटान् प्रभो शमय रङ्गधामादिषु ॥

விதிஸ்த்ரிபுர மர்த்³நஸ்த்ரித³ஶபுங்க³வ: பாவகோ
யமப்ரப்ருதயோ
பி யத்³விமதரக்ஷணே ந க்ஷமா: |
ரிரக்ஷிஷதி யத்ர ச ப்ரதிபயம் ந கிஞ்ஜித் க்வசித்
ஸ: ந: ப்ரதிபடாந் ப்ரபோஶமய ரங்க³தாமாதி³ஷு ||

விதி -- ப்ரஹ்மாவும்; த்ரிபுர மர்த்தந -- மூன்று புரங்களை எரித்தவரும்; த்ரிதஶபுங்கவ -- தேவர்கள் தலைவனான இந்திரனும்; பாவக -- அக்னியும்; யம பரப்ருதய அபி -- யமன் முதலானோரும்; யத்விமத ரக்ஷண --எந்த உம் விரோதியை ரக்ஷிப்பதில்; ந க்ஷமா -- ஸமர்த்தரல்லவோ ; யத்ர -- எந்த நீர்; ரிரக்ஷிஷதி -- ரக்ஷிக்க இஷ்டப்பட்டபோது; க்வசித் -- ஓரிடத்திலும்; கிஞ்சித் -- ஒன்றும் (எதுவும்); ப்ரதிபயம் ந -- பயங்கரமாக கொஞ்சமேனும் ஆகாதோ; ஸ: -- அந்த நீர்; ரங்கதாமாதிஷு -- அரங்கம் முதலிய திவ்ய தேசங்களில்; ந: -- எங்களுடைய; ப்ரதிபடாந் -- எதிர்படரை; ஶமய -- அடக்கவேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

உன்னிடத்தே அபசாரம் உறுபவனைக் காத்திடவே
உந்திமலர் நான்முகனும் உருத்திரனும் இந்திரனும்
வன்னியனும் யமதேவு முதலான தேவர்களும்
வலிமையிலார் என்றைக்குமே ! ஒருவனைநீ காத்திடவே
எண்ணினாயேல் அவன்தனக்கு எங்கிருந்தும் எவராலும்
எள்ளளவும் அச்சமேதும் ஏற்படாதே நிச்சயமாய்!
அன்னவன்நீ அரங்கத்தும் அதுவனைய தலங்களிலும்
அல்லல்தரும் பகைவர்தமை அழித்தொழிப்பாய் பெருமானே! 26.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார்

         உம் திருமேனியைக் காட்டிலும் எங்களுக்குப் பிரியமான வஸ்து இல்லை; அதற்குக் கெடுதலைச் செய்பவர்கள் எங்கள் சத்ருக்கள். எங்களுடைய சத்ருக்கள் உம் சத்ருக்களாகவேணும். "என் பஞ்ச ப்ராணரான பாண்டவர்களை நீ த்வேஷிக்கிறாய். ஆகையால் நீ எனக்கு த்வேஷி" என்றார் ஸ்ரீ கிருஷ்ணன். இப்படி உமக்கு விரோதியாயிருப்பவனை நீர் கொல்ல நினைத்தால் ப்ரஹ்மா, ருத்ரன், இந்த்ரன், யமன் முதலான ஒருவரும் அவனை ரக்ஷிக்க முடியாது. ஆகையால் எங்கள் ப்ரதிபடரை அடக்க வேண்டும்.

         விதி: -- ஊருக்கெல்லாம்  விதிப்பவர் ப்ரஹ்மா; அவருக்கும் விதிப்பவர் நீர்; ஸம்ஹரிப்பவனுக்கும் ஸம்ஹாரகர். ஸுரநாயகனையும் நியமிப்பவர். அக்னியைக் கொளுத்துபவர். ஜலரூபியாயிருந்து ஸம்ஹரிப்பவர். யமனுக்கும் யமன் என்று யமனே சொன்னான். ராவணனிடம்  ब्रह्मा स्वयंभुः  என்று திருவடி பாடிய சுலோகமும் இங்கே கொள்ளப்பட்டது. சிறிய திருவடியும் கோயிலில் காவலிருக்கிறார். முன் சுலோகத்தில் பெரிய திருவடியினுடையது போல இங்கு சிறிய திருவடியின் ஜிதந்தே.
         ப்ரதிபயம் ந கிஞ்சித் --  कदाचन  कुदश्चन  (கதாசந, குதஶ்சந) பயமில்லையென்றது சுருதி. க்வசந என்று முன்பு சேர்த்தார். இங்கு கிஞ்சித் என்கிறார். ஒன்றும் பயத்தை உண்டாக்க மாட்டாது என்று ஒரு பொருள்.கிஞ்சித்தும் (துளிக்கூட) பயமில்லை என்னவுமாம்.

         ந: ப்ரதிபடாந் -- யமனும் யமபடர்களும் எங்களைக் கண்டு நடுங்க வேண்டியிருக்க, இம் மனுஷ்ய படர்களைக் கண்டு நாங்கள் நடுங்கும்படி நேரலாமோ?

No comments:

Post a Comment