செவ்வாய், 13 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதிஸ்தவம்


சுலோகம் 25

भुजङ्गम विहङ्गमप्रवर सैन्यनाथाः प्रभो
            तधैव कुमुदादयो नगरगोपुरद्वारपा ।
अचिन्तयबलविक्रमाः त्वमिव रङ्गसंरक्षकाः
            जितं त इति वादिनो जगदनुग्रहे जाग्रतु ॥

பு
ஜங்க³ம விஹங்க³ம ப்ரவர ஸைந்யநாதா²: ப்ரபோ
         ததைவ குமுதா³³யோ நக³ரகோ³புரத்³வாரபா |
அசிந்தயப³லவிக்ரமா: த்வமிவ ரங்க³ஸம்ரக்ஷகா:
         ஜிதம் த இதி வாதி³நோ ஜக³³நுக்³ரஹே ஜாக்³ரது ||

ப்ரபோ -- ப்ரபுவே!; அசிந்த்ய பல விக்ரம -- எண்ணுதற்கரிய பல பராக்ரமங்களை உடையவர்களும்; த்வமிவ -- உம்மைப்போல; ரங்க ஸம்ரக்ஷகா -- அரங்கத்தைக் காக்க வேண்டியவர்களும்; புஜங்கம விஹங்கம ப்ரவர ஸைந்யநாதா -- ஸர்பச்ரேஷ்டன் ({சேஷன்), பக்ஷிராஜன், ஸேனைநாதன் ஆகியவர்களும்; ததைவ -- அப்படியே; நகர கோபுர த்வார பா: -- நகரம், கோபுரம், த்வாரம் இவற்றைக் காப்பவர்களும், ஜிதம்தே -- உனக்கு ஜயம் வருக; இதி வாதிந -- என்று சொல்லிக்கொண்டு; ஜகதநுக்ரஹே -- எங்களை அனுக்ரஹிப்பதில்; ஜாக்ரது -- விழித்திருக்க வேணும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

அரவரசன் புள்ளரையன் சேனைநாதன் தம்மோடு
அணித்தலைவர் குமுதர்போல் ஆவாரும் நகரத்தின்
திருவாயில் கோபுரத்தின் திருக்கதவம் காப்போரும்
திருமாலுன் தனைப்போல திருவரங்கைக் காப்போரும்
பெரும்வாகை உனக்கென்று போற்றுகிற வாயினராய்
பேரரவம் இட்டவராய் பரவியெங்கும் செல்பவராய்
திருவரங்கம் மட்டுமின்றி திரைகடல்சூழ் உலகினையும்
சிந்தையுடன் நற்காத்துச் செயல்படவே வேண்டுகிறோம்! 25.

அன்பில் ஏ.வி. கோபாலாசாரியார்

         பள்ளிகொண்டிருக்கும் எம்மை தாஸரான நீங்கள் எழுப்பலாமோ? 'பயத்தினால் இப்படிச் செய்கிறோம்' என்றால் உங்களைக் காக்க நம் காவல்காரர்களில்லையோ என்று சங்கை வர, அவர்கள் விழித்து இருந்து தங்கள் சேஷத்வத்திற்கு ஏற்றபடி "ஜிதம்தே" என்று மங்களம் பாடினால் போதும். அவர்களும் தூங்குகிறார்களோ என்றுதான் கவலை.


         புஜங்கம -- ஸ்ரீசங்கராசாரியாரும் இவ்வரங்கத்தை इदं हि रङ्गं (இதம் ஹி ரங்கம்) என்கிற சுலோகத்தையிட்டு தினமும் மங்களாசாஸனம் செய்தார். "पाणौ रथाङ्गं शयने भुजङ्गं  (பாணௌ ரதாங்கம் ஶயநே புஜங்கம்) என்று கையார் சக்கரத்தையும் நாகஶயனத்தையும் கீர்த்தனம் செய்வர். भुजङ्गमाङ्गशायिने विहङ्गमाङ्गगामिने तुरङ्गमाङ्गभेदिने नमो रथाङ्गधअरिणे ॥    என்று ஸர்வஜ்ஞமுனியின் ஸம்க்ஷேபஶாரீரகத்தின் முடிவு மங்களம். அவர் கிரந்தத்தை ஸ்ரீசங்கரர் பார்த்துப் புகழ்ந்தாரென்பர்.

         புஜங்கமப்ரவர -- "ஆங்கு ஆரவாரமது கேட்டு" என்றபடி சீற்றம் வேண்டாம். வாதிந  என்பதால் "ஜிதம்தே" என்று நாக்கினால் உச்சரித்தால் போதும்.


         ஸைந்யநாத -- இவர் விஷ்வக்ஸேநர். இவர் இல்லாத இடமில்லை. ஸேனைத்தலைவரும் ஸேனை வீரரும் தூங்குவரோ?


         நகர கோபுர த்வார பா -- நகரவாசல், கோபுர வாசல், ஸந்நிதி வாசல் எங்கும் காவல். இந்தக் காவலரெல்லாம் தூங்கவேணுமோ? ஸநத்குமாரர்களைத் தடுத்த காவல்காரர்கள் சத்ருக்களைத் தடுக்க வேண்டாவோ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக