Friday, August 8, 2014

ராமாநுஜ ஸப்தார்த்தம் 11

26. ராமாநுஜ என்ற பதம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரைக் குறிக்கிறது.
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” (திருமாலை) என்ற இவருடைய பாசுரத்திற்கு பாகவதர்களுடைய சேஷம் (உச்சிஷ்டம்) உண்ணத்தக்கது என்று வ்யாக்யானம் செய்துள்ளனர். இதற்கு ப்ரமாண பூர்வகமான ஸமாதாநம்
என்றதும் குரு விஷயமாமித்தனை. பொதுவானாலும் பகவத் ஸங்கீர்த்தநபரர் தேஶ காலாதி வைகுண்யத்தாலே ஊவ்ருத்திகளுமாய் ஊநகாரர்களுமாய் இருந்தார்கள் யாகிலும் தாங்கள் அது செய்த சேடம் தருவராகில் புனிதமாமென்றதித்தனை, இதில் ஶேஷ ஶப்தம்” (ரஹஸ்யத்ரய ஸாரம்)  अन्नशेषं किं क्रियताम् इष्टे: सह भुज्यताम् (ச்ராத்த ப்ரயோகம்) இத்யாதிகளில் ந்யாயத்தாலே பாண்டஸ்த விஷயமானால் விரோதமில்லை. ஶ்ருத்யாதிகளிலே புக்தஶிஷ்டமாய் பாகபாத்ரஸ்தமானதிலும் ப்ரயுக்தம் என்று அருளிச் செய்துள்ளார். மேலும் இதற்கு “ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை”யில் ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்து அருளியுள்ளார். மேலும் பாகவத சேஷத்வமே தமக்கு நிரூபகமாக ருசித்த தொண்டரடிப்பொடி ஆழ்வார் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்று இவர் ப்ரபாவத்தையும் வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார்.

27  ராமாநுஜ என்ற பதம் திருப்பாணாழ்வாரைக் குறிக்கிறது. இவர் ப்ரபந்தமான அமலனாதிபிரானுக்கு ஸ்ரீமுநிவாஹந போகம் என்று பெயரிட்டு ரஹஸ்ய க்ரந்தமாக வெளியிட்டு அநுக்ரஹித்துள்ளார். தமக்கு ‘வேதாந்தாசார்யர்’ என்று திருநாமம் இட்ட ஸ்ரீரங்கநாதனாலேயே ‘முநிவாஹநர்’ என்கிற திருநாமம் சூட்டப்பெற்றவராகையாலே தமக்கு ‘ஜ்யேஷ்ட ப்ராதா’ என்று திருவுள்ளம் பற்றி ‘நம் பாணநாதன்’ என்று அநுக்ரஹித்து அருளியுள்ளார்.

28. ராமாநுஜ என்ற பதம் திருமங்கையாழ்வாரைக் குறிக்கிறது. இவருடைய ப்ரபாவத்தைக் கூறும்போது ஸ்வாமி இம்மந்த்ரத்தைத் திருமங்கையாழ்வாருக்கு ஸர்வேஶ்வரன் தானே உபதேஶித்தான் (ரஹஸ்யத்ரயஸாரம்) ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார் (ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், ஈஶ்வரன் தனக்கும் போக்யதமமான நித்ய விக்ரஹாநுபவத்தில் ஊற்றத்தாலே திருமங்கையாழ்வார் தம்மை ஈஶ்வர விஷயத்தில் தேஹாத்ம வாதிகளாக அருளிச் செய்வர் (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும், இவருடைய ப்ரபந்தங்களின் பெருமையை அறிவுதரும் பெரிய திருமொழி (ப்ரபந்தஸாரம்)என்றும், இவர் அவதார காலத்தில் பாகவத ததீயாராதநத்திற்காக செய்த ஸ்தேயம் (திருட்டு) ஶாஸ்த்ரீயமானது என்பதை ஸ்ரீஸ்தேயாவிரோதம் என்னும் ஸ்ரீஸூக்தியில் விஸ்தாரமாகவும், ஸ்ரீபரமதபங்கத்தில் ‘ஸ்தேய ஶாஸ்த்ரமும்’ आसाधुभ्योऽर्थमादाय साधुभ्य्: सम्प्रयच्छति प्रसह्य वित्ताहरणं न कल्क:  என்கிறபடியே க்ஷத்ரியாதிகளுக்கு பரகாலாதி ந்யாயத்தாலே தர்மோபயுக்தமாக ப்ரவ்ருத்தம் என்று அருளிச் செய்ததைக் கருத்தில் கொண்டு கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே (வாழித்திருநாமம்) என்று பின்புள்ளோர் அநுஸந்தித்தார்கள்.  

ஸம்ஸார பந்தம் மிகவும் (துக்கமானது) கஷ்டமானது என்பதை ‘மாற்றமுளவாகிலும்’ என்ற திருமொழியில் நிரூபித்துள்ளாரோ, அதே விஷயத்தை “ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதய”த்தில் மூன்றாவது அங்கத்தில்  यद्येवं त्वया दत्तहस्त: संसारसागरमतिलङ्घते पुरुष: तत् कथं दवदहनप्रज्वलित पाशर्वयुगळ दारूदरगत इव कीट:, सारमेयगण परिगत इव सारङ्ग: समीरणान्दोळन डोलायमान पोतोदरगत इव साम्यात्रिकसार्थ:, महप्रवाहमध्य निरोध सम्भ्रान्त नयन इव जम्बुक:, विषदरपरिगृहीत गृहघूर्णमान् हृदय इव कुटुम्बिजन: विकटतरभङ्ग: सम्भ्रमसंक्षुभितगङ्गातट वेपमान संहनन इव शाखिमण्डल: साध्वसगृहीतो भवति என்றருளிச் செய்து இருபாடெரிகொள்ளியின் உள்ளெரும்பே போல, காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போல பாம்பொடொரு கூறையில் பயின்றாப்போலே, ஆற்றங்கரை வாழ்மரம்போல (பெரியதிருமொழி) போன்றவைகளால் சொல்லப்பட்டுள்ளன.

29. ராமாநுஜ என்ற பதம் பகவானுடைய விபவாவதாரங்களான ஸ்ரீராம கிருஷ்ணாதி அவதாரங்களை விஶேஷித்துக் கொண்டாடுவதுபோல, அவனுடைய அபிநவ தஶாவதார பூதர்களான பராங்குஶ பரகாலர்களைக் குறிக்கிறது. இவர்கள் அருளிச் செய்திருக்கும் “மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்து ஓடி, ஓடி, வாடினேன் வாடி” போன்ற பாசுரங்களைப் பார்த்து இவர்களும் நம் போன்று ஸம்ஸாரிகள் என்கிறார்கள் சிலர். இதற்கு ஸமாதாநமாக आत्मानं मानुषं मन्ये (ஸ்ரீமத் ராமாயணம்) अहं वै बान्धवो जात: (ஸ்ரீமத் பாகவதம்) போன்று ராமக்ருஷ்ணர்கள் சொல்லிய துல்ய ந்யாயத்தால் ஸம்ஸாரிகள் என்பதையே மறந்தார்கள் என்று பாசுரங்களின் கருத்தை இவ்வாறாக அருளிச் செய்துள்ளார். தனக்கு அநுஸந்தேயமாக உதாஹரித்த (ரஹஸ்யத்ரயஸாரம்) என்றும் 

अन्येषु तु विशेषं बोधयामि भयाभयस्थानविशेषवेदिन:
प्रमादमुक्तस्य परीक्ष्यकारिण:
परानुभूति प्रतिबन्धशङ्कया
भयानुभावो (बन्धो) प्यभयाय कल्पते!
(ஸ்ரீஸங்கல்ப ஸூர்யோதயம்)
(அதாவது பயத்திற்கும் அபயத்திற்கும் காரணங்களானவற்றின் விஶேஷத்தை அறிந்தவர்களாயும், அஜாக்ரதையினால் விடப்பட்டவர்களாயும், யோசித்துக் கர்மங்களை அனுஷ்டிக்கக் கூடியவர்களாயும் இருக்கிறவர்களுக்குப் பகவானுடைய அநுபவத்திற்குத் தடங்கல் வரும் என்கிற ஸந்தேஹத்தினால் பயம் உண்டாவதும், மற்றவர்களுடைய அபயத்திற்குக் காரணமாகிறது) என்றும், இவர்களுடைய ஏற்றத்தை ‘ப்ரபந்த ஸார’த்திலும், பராங்குஶ பரகாலாதிகளுடைய ப்ரபந்தங்களிலே கண்டு கொள்வது (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்)