Tuesday, April 1, 2014

ராமாநுஜ தயாபாத்ரம்

ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேஶிகம்

என்று தினமும் நம் ஆசார்யனைப் போற்றுகிறோம்.  இதில் ராமாநுஜ தயாபாத்ரம் என்பது பகவத் ராமாநுஜரின் தயைக்குப் பாத்திரமானவர் என்று பொருள் என்று சுருக்கமாக அனைவரும் அறிந்தது. ஆனால் ராமாநுஜ என்ற வார்த்தைக்கு எவ்வளவு விரிவான பொருள் உண்டு என்று சேட்டலூர் நரஸிம்மாச்சாரியார் மிக அருமையாக மணிப்ரவாள நடையில் எழுதியதை எல்லோரும்  அறிந்து இன்புற வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு ஸ்ரீரங்கம்  ஸ்ரீஉப.வே. சாமம் பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமி முழுவதும் தமிழ்ப்படுத்தி தனது ஷஷ்டியப்தபூர்த்தி தினத்தில் சிறு நூலாக வெளியிட்டார். அந்த நூலிலிருந்து  41 விதமாக ராமாநுஜ என்ற ஶப்தத்திற்கு சேட்லூர் ஸ்வாமி அளிக்கும் விளக்கங்களை இங்கு கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்கலாம்.

ராமாநுஜ ஶப்தார்த்தம்

ராம --  ராமனுக்கு; அநுஜ -- பிற்பாடு உண்டான

      இந்தப் பதம் ப்ரதமாசார்யனான எம்பெருமான் தொடக்கமாக ஸாக்ஷாத் ஆசார்யனான கிடாம்பி ராமாநுஜ அப்புள்ளார் வரையிலாக ப்ரஸித்தி பெற்று விளங்கும் குருபரம்பரையிலுள்ள எல்லா ஆசார்யர்களையும் குறிக்கும்.

     राम ஶப்தத்திற்கு முதலில் உள்ள “रा” என்ற எழுத்து நம்மைப் போன்ற ஜீவர்களிடத்தில் உள்ள பாபத்தைப் போக்கும் எழுத்து. “रा” “म” என்றால் திரும்பி அந்தப் பாபம் ஜீவனிடத்தில் வராமல் தடுத்து ஆட்கொள்ளும். அதனால் राम ஜபம் சொல்லும் பலன், रा என்று சொல்லும்போது வாய் திறக்கும் म என்றவுடன் வாய் மூடிவிடும். பாபத்தைத் தடுக்கும் மந்த்ரம் “राम” மந்த்ரம்.
राम: रमयतीति राम: | மற்றவர்களை ஸந்தோஷப்படுத்துகிறவன் என்று அர்த்தம்.

மேலும்,

1.  रमन्ते योगिनोऽनन्ते चिदानन्ते परात्मनि इति रामपदेनासौ परब्रह्माभिधीयते|| रमन्ते अस्मिन् सूरयः (அகஸ்த்ய ஸம்ஹிதை)
என்கிறபடியே யோகிகள் எல்லோரும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் செய்யப்படும் த்யானத்தினால்பரம ப்ரீதியை அடைகிறார்களோ, அப்படிப் பட்ட ப்ரீதி விஷயமான பரப்ரஹ்மம் ‘ராம’ என்னும் பதத்தினால் சொல்லப் படுகின்றது. இந்தப் பரமாத்மா திருவனந்தாழ்வானான திருப்பள்ளி மெத்தையிலே வானிளவரசாய்க் கொண்டு தான் வாழ்கிற வாழ்வை ஸர்வாத்மாக்களும் அநுபவித்து க்ருதார்த்தராக வேண்டுமென்று ஸஹ்ருதயனாய் இருந்தபோதிலும் அந்த எண்ணம் கைகூடாமல் உலகத்தவர் உண்டியே உடையே உகந்து ஓடித் திரிந்து நின்றமையினால் அவன் ஏகாகியைப் பொலவே ஸந்தோஷமில்லாதவனாய் இருக்கும்படியாயிற்று. அந்த நிலைமையை மாற்றி “திருத்திப் பணிகொள்வான்” என்றபடி ஜனங்களைத் திருத்தி, ப்ரபத்தியாகிற உபாயத்தின் ப்ரபாவத்தை உலகெங்கும் பரப்பினான். அதன்பலனாக அந்த உபாயத்தை அநுஷ்டித்த எண்ணிறந்த ஆத்மாக்கள் மோக்ஷம் என்ற ஸாம்ராஜ்யத்தை அடைந்தனர். அப்படிப்பட்டவர்கள் பரமாத்மாவினுடைய தயைக்குப் பாத்திரமானவர்கள் என்பர்.
रामा च रामश्च रामौ, तयोः अनुज रामानुज
பிராட்டியும் இராமனும் ராமர்கள். அவர்களுடைய க்ருபைக்குப் பாத்திரமானவர் என்று பொருள்.
 

தொடரும்