புதன், 17 ஆகஸ்ட், 2011

தேரழுந்தூர் திசைமுகனே யனையவர்கள்

தேரழுந்தூரில் வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது , திருமங்கையாழ்வார்
"செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
     திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தமாகுதியின் புகையார் செல்வத்
     தணியழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே."
என்றருளிச் செய்வதற்கு, "இந்த அந்தணர்கள் உபயவேதாந்த ஸேவையாலும், அர்த்த க்ரஹணத்தாலும் உபய வேதாந்த ஞான விசிஷ்டர்களாக விளங்கிக்கொண்டு ஔபாஸந அக்னி ஹோத்ராதிகளையும், அநுஸ்யூதமாய் அனுஷ்டித்து வந்தார்களென்றும், அந்த ஞானாநுஷ்டானங்களால் திருவுள்ளமுகந்து தேவாதி தேவனாகிய ஆமருவிப் பெருமாள், இவ்விதம் ஞானாநுஷ்டானங்களால் அலங்கரிக்கப் பெற்ற அழுந்தூரில் நித்யவாஸம் செய்கிறானென்று அருளிச் செய்கிறார்" ,(ஸ்ரீ என்.ஆர். க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரில் எழுதியதிலிருந்து)  என்று வ்யாக்யானங்களைப் படிக்கும்போது என்னதான் முயன்றாலும், அந்த அக்ரஹாரம் ஆழ்வார் நாளிலே எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் பூரணமாகக் கற்பனை செய்து பார்க்க இயலாது. அதிலும் இப்போது 60 வயதைக் கடந்த அடியேன் போன்றவர்களுக்குத் தெரிந்த அக்ரஹாரங்கள், இன்றைய தலைமுறைக்குத் தெரியப் போவதேயில்லை. அதனால் அக்ரஹாரம் என்றால் அதில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு விளங்கவே போவதில்லை. ஆழ்வார் கண்ட திசைமுனை -- ப்ரம்மனை -- ஒத்த தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் வல்லவர்களாய்த் திகழ்ந்த அந்தணர்கள் , ---- செம்மை மிக்கவாம்  ஆசார சீலர்களாம் , ஸ்ரீவைஷ்ணவர்களாம் --- இப்படி இருந்திருப்பார்கள் என்று காட்ட, பல பக்கங்களில் எழுதிப் புரியவைக்க முடியாததை மிக எளிதாகப் புரிய வைக்க, இதோ ஒரு பழைய படம். அதில் இதைப் படிப்பவர்களின் குடும்பத்துப் பெரியவர்கள் கூட யாராவது இருக்கலாம்.

Photo courtesy:--
Sri Rajagopalan swamy, the illustrious son of Pudukkottai swamy Sri A. Srinivasa Ragavachariar, author of many scholarly books.

terazundur mama photo

இந்தப் படத்தை நன்றாகப் பார்க்க,

http://www.flickr.com/photos/thiruthiru/6053632968/in/photostream

1 கருத்து:

  1. My Thatha Ganapaadigal Sri.U.Ve.Amaruviachariar is seated second from right ( sitting cross legged ) in the first row.
    Incidentally he attained Acharyan Thiruvadi in Thiruppullani in the year 1953 when he had come over there for a Veda Paarayanam.

    Thanks for the ghoshti picture.

    Amaruvi

    பதிலளிநீக்கு