வியாழன், 2 டிசம்பர், 2010

திருத்தாள் மாலை

கொங்கல ரடிக்கே யுரியவ னென்ற
        குகன்றனுக் குதவிய திருத்தாள்
கங்கையின் மதுரக் கனிகளாய்ந் தளித்த
        சபரியை யுவந்தருள் திருத்தாள்
கங்குலும் பகலும் கருணையே பொழியுங்
       கமலமா மென்மலர் திருத்தாள்
துங்கமி லெளியேன் மனத்திலுந் துலங்கத்
        தோய்ந்தருள் பரப்பிய திருத்தாள்.                  .6.

பரிவுடன் பணிந்த பரத நம்பிக்குப்
       பாதுக மீந்தருள் திருத்தாள்
விரியழற் பங்கி விராதனை யுதைத்து
       வீழ்த்திவிண் ணருளிய திருத்தாள்
அரியெனக் கவந்த னறிந்துள முருக
      வாதரித் தருளிய திருத்தாள்
எரிவினை மிஞ்சு மெளியனே னுளத்து
       மிலங்கிவீற் றிருப்பமர் திருத்தாள்.                    .7.

அஞ்சலி கரத்தோ டடிபணிந் தேத்தும்
         அனுமனுக் கருள்புரி திருத்தாள்
செஞ்சிறைக் கிழவன் சடாயுகண் டேத்தச்
         சேண்பத மருளிய திருத்தாள்
தஞ்சனே னடியே னென்ற வீடணற்குத்
          தண்ணளி யருளிய திருத்தாள்
நஞ்சினுங் கடிய நெஞ்ச னேனுக்கும்
          நலந்தர நயந்தருள் திருத்தாள்.                       .8.

நிராசனராய தண்டக முனிவர் நினைவினில்
        நிலவு செய் திருத்தாள்
விராவரு கானப் புள்விலங் கவைக்கும்
       வியன்பத மருளிய திருத்தாள்
தராதலத் தன்று சராசர முற்றுந்
       தனிக்கதி தந்தருள் திருத்தாள்
பராவுத வில்லாப் பாவியே னுளத்தும்
      படிந்தருள் பண்ணிய திருத்தாள்.                     .9.

வேண்டிய வசுதே வன்றளை யவிழ
        வியந்தவன் கண்டதோர் திருத்தாள்
ஆண்டவ னருளார் நந்தகோ பன்ற
       னகந்தனிற் றிகழ்தரு திருத்தாள்
மூண்டெழு காத லசோதையா மன்னை
        முகந்தனை மலர்த்திய திருத்தாள்
ஈண்டி வந்திந்த எளியனே னகத்து
       மிருளற வொளிதருந் திருத்தாள்.                    .10.

                                                   தொடரும்……  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக