திங்கள், 29 மார்ச், 2010

வேட்டைக்குப் போனார், கள்ளனைப் பிடித்தார் 8ம் நாளிலே

எட்டாம் நாள் வேட்டைக்குப் போனதையும், இரவில் திருமங்கையாழ்வார் நாரண நாமம் கண்டு கொண்டதையும் இங்கு  பார்த்துக் கொண்டிருங்கள்.

  தேரோட்டம் ட்ரெயிலரு ம் இருக்கிறது.

 இந்தோ வந்து விடுகிறேன்.

11 கருத்துகள்:

  1. திருமங்கை ஆழ்வாராக நடித்தவரை கைது செய்து நடத்திய நாடகம் அருமை.. வேடப்பரியாகம் நன்றாக இருந்தது..

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி!
    வேதாந்தாசார்ய வர்யோமே சன்னிதத்தான் சதாஹ்ருதி !!

    பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும், அழுக்கு உடம்பும்,
    இந் நின்ற நீர்மை இனி யாம் உறவாமை உயிர் அளிப்பான்,
    எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்! இமையோர் தலைவா!
    மெய் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே!

    ஒன்றாம் திருநாள் சூர்யப்பிரபையின் மீதிலும் !
    ரெண்டாம் திருநாள் ராஜசிம்ஹத்தின் மீதிலும் !
    மூன்றாம் திருநாள் சிறிய திருவடியின் மீதிலும் !
    நான்காம் திருநாள் பெரிய திருவடியின் மீதிலும் !
    ஐந்தாம் திருநாள் ஆதிசேஷன் மீதிலும் !
    ஆறாம் திருநாள் கஜேந்திரன் மீதிலும் !
    ஏழாம் திருநாள் ராஜஹம்சத்தின் மீதிலும் !

    எட்டாம் திருநாள், குதிரைத்தம்பிரான் மீதேறி, எட்டுத்திருவீதியும் ஒரு திருவீதியாக சுவாமி உலா வருகின்ற காலத்திலே சுவாமியின் ஆடை ஆபரணங்கள் பறி போச்சுதே !!!

    பேரிகை முழங்குகிறது

    கள்வர் யாரென்று தெரிந்து வர சேனை முதலிக்கு உத்தரவு !!

    சேனை முதலியார் செல்கிறார்.. திரும்ப வந்து,

    சேனைமுதல்வர்: கீழ்திசையில் சென்றோம் !! அவ்விடத்தில் தேவரீர் திருச்சின்னங்களை சேவிக்கக் கண்டோமில்லை !!

    அவ்விடம் விட்டு தென்திசையில் சென்றோம் !!
    அவ்விடத்திலும் தேவரீர் திருச்சின்னங்களை சேவிக்கக் கண்டோமில்லை !!

    அவ்விடம் விட்டு மேல்திசையில் சென்றோம் !!
    அவ்விடத்திலும் தேவரீர் திருச்சின்னங்களை சேவிக்கக் கண்டோமில்லை !!

    அவ்விடம் விட்டு வடதிசையில் சென்றோம் !! அங்கே தீப்பந்தங்களும்.. கூக்குரல்களும் கண்டு விசாரிக்கையில்...

    நீரிலே நடப்பான், நிழலிலே மறைவான், தாளூதுவான், தோழா வழக்கன், திருமங்கை ஆழ்வான் இருக்கக் கண்டோம்..

    தேவரீர் ஆடை ஆபரணங்களைக் கவரலாம எனக்கேட்டதற்கு..

    தேவரீர் கைங்கர்யமே அன்றி மற்றில்லை!! தேவரீர் திருத்துழாயும், திருச்சடாரியும் தந்து ஆட்கொள்ள வேணுமாய் பிராத்திக்கிறோம் !!

    ஓம் நமோ நாராயணாய !!
    ஓம் நமோ நாராயணாய !!
    ஓம் நமோ நாராயணாய !!

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி!

  4. அண்ணா, திருமங்கை ஆழ்வார் பட்டயம் கிட்டத்தட்ட மேலே நான் சொன்னது போல் இருக்குமா?? எங்கஊரில் வாசிக்கும் போது சொல்வதை ஞாபகம் வைத்து எழுதிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  5. Video click செய்தேன். வரவில்லை .some problem I think

    பதிலளிநீக்கு
  6. அடிக்கடி கரண்ட் போய்க்கொண்டிருந்ததால் வீடியோவின் லிங்கைக் கொடுத்தேன். இப்போது embed செய்திருக்கிறேன். ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலாருக்கு சிரமம் இருக்காது என நினைக்கிறேன்.
    ராகவ்,
    எங்களூர் பட்டயம் சற்று வேறுபடுகிறது. சித்திரைத் திருநாளுக்குள் பதிவிட்டு விடுவேன் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஓடினேன் ஓடினேன் இங்கேயும் அங்கேயும்
    ஓடி நான் கண்டு கொண்டேன் திருப்புல்லாணி திவ்ய தேச பெருமாளை!

    திருப்புல்லாணி இணைய தளத்தை மாதவிபந்தலில் அறிய வைத்த KRS அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பது போல் உள்ளது .

    பதிலளிநீக்கு
  8. சிரமமில்லாமல் வீடியோக்களைப் பார்க்க முடிந்ததா கமலக்கண்ணி அம்மன் கோவிலாரே?

    பதிலளிநீக்கு
  9. மாதவிப் பந்தல் கண்ணபிரான் உதவிக்கு அடியேனும் எப்போதும் நன்றி உடையவனே. இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இந்த ப்ளாகை வாசிப்பவர்கள் இருந்தார்கள். மிகக் குறுகிய வட்டத்துக்குத்தான் அடியேன் ஒரு ப்ளாக் நடத்துவதே தெரியும். அதிலும் பெரும்பான்மை வைணவர்களே. அதனாலேயே சில வைணவப் பதங்களை அப்படியே உபயோகித்து விடுவேன். (சூர்ணோத்ஸவம் போன்றவை) கண்ணபிரான் செய்த காரியம் இப்போது சில நூறு பேர் இநுத வலையில் நுழைவதாக "கவுண்டர்" சொல்கிறது. திருப்புல்லாணி பற்றி அறியாதோரும் அறிந்து கொள்ள வேண்டும் என 2005ல் ஆரம்பித்த இந்த வலை அந்த நோக்கத்தை திரு KRS உபகாரத்தால் இந்த 2010ல்தான் எட்டியிருக்கிறது. எங்கள் எம்பெருமான் தெய்வச்சிலையார் அவருக்கு எல்லா நலங்களையும் பரிபூரணமாக அருள வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. //திருப்புல்லாணி பற்றி அறியாதோரும் அறிந்து கொள்ள வேண்டும் என 2005ல் ஆரம்பித்த இந்த வலை அந்த நோக்கத்தை திரு KRS உபகாரத்தால் இந்த 2010ல்தான் எட்டியிருக்கிறது//

    அச்சிச்சோ! என்னது இது?
    எம்பெருமானையே அறியத் தரும் அளவுக்கு எல்லாம் யாரும் எதுவும் செய்துவிட முடியாது! இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடிக் கொள்வதே அவன் வழக்கம்! :)

    என்ன, அடியேன் கொஞ்சம் வேற மாதிரி யோசிப்பேன்! :)
    * எம்பெருமானை ஏற்கனவே அறிந்து ஈடுபடுவார்க்கு மேலும் மேலும் விருந்து வைப்பது என்பது ஒன்று!
    * அவனை இதுவரை ருசித்துப் பார்க்காதவர்களுக்கும் அவன் ருசியைக் காட்டிப் பலாச்சுளை பிய்த்து தருவது இன்னொன்று!
    எனக்கு ரெண்டாவது செய்யக் கொஞ்சம் அதிகம் பிடிக்கும்! அவ்ளோ தான் திருத்திரு அண்ணா! :)

    //எங்கள் எம்பெருமான் தெய்வச்சிலையார் அவருக்கு எல்லா நலங்களையும் பரிபூரணமாக அருள வேண்டுமென்று ப்ரார்த்திக்கிறேன்//

    அப்படியே அடிக்கீழ் வீழ்ந்து சேவிச்சிக்கறேன்!
    தங்கள் ஆசியை என் தோழனுக்கும் பகிர்ந்து தந்து விடுகிறேன்!

    பதிலளிநீக்கு
  11. //தேவரீர் ஆடை ஆபரணங்களைக் கவரலாம எனக்கேட்டதற்கு..

    தேவரீர் கைங்கர்யமே அன்றி மற்றில்லை!!//

    ஹா ஹா ஹா
    ராகவ்! இது நல்லா இருக்கே! உடுத்துக் களைந்த பீதக ஆடை உடுத்தணும்-ன்னு சொல்லி இருக்காரு எங்கள் பட்டர் பிரான்! அதான் தேவரீர் ஆடை ஆபரணங்களைக் களவாடறோம்-ன்னு சொல்லிட்டு தப்பிச்சிக்கலாம்! :)

    பதிலளிநீக்கு