மார்கழி பிறக்கப் போகிறது. தெருவெங்கும் திருப்பாவை ஒலிக்கப் போகிறது போலவே இணையமெங்கும் நிறையப் போகிறது. நிறைய காலக்ஷேபங்கள் கேட்டு, பூர்வாசார்யர்கள் உரைகளை ஆழங்கால்பட்டு அனுபவித்த பலர் பல விளக்கங்களை சென்ற பல வருடங்களைப் போலவே அளிக்கத் தயாராயிருப்பார்கள். மிக கனமான விஷயங்களையும் தங்களது எழுத்து நடையாலே இளைஞர்களை ஈர்த்துப் படிக்கவைத்து அவர்களையும் நல்ல விஷயங்களைத் தேடி அனுபவிக்க வைக்கின்ற "மாதவிப் பந்தல்காரர்கள்" "கண்ணன் பாட்டுக்காரர்கள்" போன்றோரெல்லாம் தங்களது சுய சிந்தனைகளால் திருப்பாவை உரைகளுக்கு மெருகூட்டி அனைவரையும் ரசிக்க வைக்கப் போகிறார்கள். அடியேன் இவ்விரு பிரிவுகளில் எதையும் சேராதவன். சாஸ்த்ர , சம்ப்ரதாய ஞானமோ, பெரியோரைப் பணிந்து பெற்ற கேள்வி ஞானமோ எதுவும் இல்லாதவன். குறைகள் தெரிந்தாலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த மார்கழி மாத திருப்பாவை கைங்கர்யங்களில் பங்கு பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளவன். ஆசை இருக்கு தாஸில் பண்ண அதிருஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்ற இரகத்தில் இருக்கும் அடியேனுக்கு மிக நன்றாகத் தெரிந்த ஒன்றான பழைய நூல்களை வலையேற்றுகின்ற வழியிலேயே 1959ல் வெளியான ஒரு விளக்க நூலை தினம் ஒரு பாசுரமாக இங்கு பகிர்ந்து கொள்வேன். அதில் மிக கனமானவை ஏதுமில்லை. சற்று ஜனரஞ்சகமாக எழுதப்பட்டிருக்கிறது. 115 பக்கங்களுடன் வெறும் 0.30 பைசா விலையில் வெளியிடப் பட்டிருக்கும் அந்தப் புத்தகத்தின் அட்டைப் படம் இங்கு உள்ளது. ஆசிரியர் பெயரை மறைத்துள்ளேன். அட்டையைப் பார்த்தவுடனேயே நிறையப் பேர் ஆசிரியர் "..... ஸ்ரீ....." தானே என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்நாளில் பிரபலமாக இருந்தவர் அவர்.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று உங்களைப்பற்றி கூறும் அளவுக்கு ஆன்மீக பணி
பதிலளிநீக்குதொடர விழைகிறேன்.
அன்புடன்
ராகவன்.வ
முதல் பாசுரத்தின் வ்யாக்யானம் மிகத் தெளிவாயும், எளிமையாகவும் இருக்கிறது. இந்தப் பாசுரத்தில் தெரிந்துகொள்ள வேண்டியாவிஷயம் இவ்வளவுதான். அதை நேரடியாகச் சுருக்கமாகச்ச் சொல்லிவிட்டார். அருமை.
பதிலளிநீக்குஅன்புடன்
அன்பில் சீனிவாஸன்
You have stil kept authour's name a secret;Do we have to wait till Andal thirukalyanam veeraraghavan
பதிலளிநீக்கு