செவ்வாய், 1 டிசம்பர், 2009

திருவருட்சதகமாலை

        தமிழாக்கமும் பொழிப்புரையும்
  வைகுந்தவாஸி ஸ்ரீ ஆர். கேசவ அய்யங்கார்.

வ்ருஷகிரிக்ருஹமேதிகுணா போதபலைச்வர்ய வீர்யசக்திமுகா:
  தோஷா பவேயுரேத யதி நாம தயே த்வயா விநா பூதா:

போதரே யென்று வையம் பூக்குமா கருணை யுன்னை
  யாது மோர் போதுஞ் சற்றே யயர்ந்துதாம் பிரிந்தா லந்தோ!
  போதமும் பலமு மாட்சி வீரமும் மற்று மோதும்
  மாதவன் குணங்கள் யாவு மாசெனத் தாமே யாமே.   15.

[தயையே!திருவேங்கடமா மலையில் குடித்தனம் செய்யும் க்ருஹமேதியான மாதவனுடைய ஜ்ஞாநம்,பலம்,ஐசுவரியம்,சக்தி முதலிய குணங்கள் உன்னோடு கூடியிராமல் உன்னை விட்டு அகன்றிருந்தால் உலகத்தினருக்குக் கெடுதி உண்டாக்கும் தோஷங்களே ஆகி விடும்.]

ஆஸ்ருஷ்டி ஸந்ததாநாம்பராதாநாம் நிரோதிநீம் ஜகத:
  பத்மாஸஹாய கருணே ப்ரதி ஸஞ்சர கேளி மாசரஸி.     .16
.

படைப்பு நாள் தொடக்க மாகப் படிப்படி மிகுத்துப் பின்னும்
  கடைப்படச் செய்யும் வையக் கடுவினை தடிக்கும் பாவம்
  தடைப்படத் திருவி னாதன் கருணை நீ தருண நோக்கி
  முடிப்பெனப் பார்து டைக்கு மொருதிருக் கேளி செய்வாய். .16.

[பத்மாஸஹாயமான ஸ்ரீநிவாஸனுடைய தயையே! படைப்புக் காலந் தொடங்கி விஸ்தாரமாய் வையத்தார் செய்த பாவமனைத்தையும் நிரோதம் செய்வதற்காக ப்ரளயம் என்னும் ப்ரதிஸஞ்சரம் எனும் விளையாட்டை நீ ஆசரிக்கின்றாய்.]

அசிதவிசிஷ்டாந் ப்ரளயே ஜந்தூநவலோக்ய ஜாதநிர்வேதா
  கரணகளேபர யோகம் விதரஸி வ்ருஷசைலநாத கருணே த்வம். .17
.

உருவுடன் பெயர கன்றே யொருசடப் பொருளி னூடே
  பிரளயத் துணர்வி ழந்தே பிணங்குபல் லுயிர்க ணோக்கி
  உருகி நீ கருணை யம்மா வகையினின் றவைக ளுய்யக்
  கருமமா ரறநெ றிக்கண் கரணமா ருடலம் தந்தாய்.  .17.

[வேங்கடாசலநாதனுடைய கருணையே! அசேதனத்தோடே சேதனமாய் சேதனகுணமே யில்லாமல் பிரளயத்தில் கிடக்கும் பிராணிகளைப் பார்த்து மனம் நொந்து நீ அவர்கள் தேறுவதற்காக ஜ்ஞானம் ப்ரஸரிக்க உபயோகமான இந்திரியங்கள் கூடிய களேபரமென்னும் சரீரத்தை அளிக்கிறாய்]

அநுகுணசார்ப்பிதேந ஸ்ரீதர கருணே ஸமாஹிதஸ்நேஹா
  சமயஸி தம: பிரஜாநாம் சாஸ்த்ரமயேந ஸ்திரப்ரதீபேந. .18.

தந்துடன் பின்னு மன்னும் தசையுணர் தயையு னேய
  முந்த நீ பெய்ய வந்துன் வையநன் றுய்யு மாறே
  கந்தமார் கமலை கேள்வன் கழலிணைக் கோன்மை காட்டும்
  முந்தை நூல் விளக்குத் தந்தே மன்னிருண் மாற்றி னாயே.18.

[ஸ்ரீதரனுடைய கருணையே! ஸ்நேஹத்தை (எண்ணெயை) நிறைய வைத்து ஸரியான தசையில் (திரியில்) ஏற்றி வைத்த சாஸ்த்ரமயமான ஸ்திரமான தீபத்தினால் பிரஜைகளுக்கு இருளைப் போக்குகிறாய்]

ரூடா வ்ருஷாசலபதே: பாதே முக காந்தி பத்ரலச் சாயா
  கருணே ஸுகயஸி விநதாந் கடாக்ஷவிடபை: கராபசேய பல: .19.

எந்தைதாண் மூல மூன்றி யெழுதிருத் தருவாய் நின்றாய்
  சுந்தரன் வதனச் சாயை யுந்தடைச் சவிமி ளிர்ந்தாய்
  செந்தளிர்ப் பரம னோக்குக் கொம்பெனப் பம்பி நின்பால்
  வந்தடைந் தவர்கொள் கையிற் கருணை நீ கனிகு விப்பாய். .19.

[ஏ கருணையே! வேங்கடமலையரசன் திருவடியில் முளைத்து வளர்ந்து அவருடைய பச்சை மாமலை போல் மேனியின் திருமுகத்தின் நீல காந்திகளாகிய இலைகளால் நிறைந்த விருக்ஷமாகிய நீ உன்னை வணங்கி உன் நிழலை அடைந்தவர்களுக்குக் கையால் பறிக்கக் கூடிய பழங்கள் தொங்கும் நீல கடாக்ஷமென்னும் கிளைகளால் ஸுகப் படுத்துகிறாய்]

நயநே வ்ருஷாசலேந்தோ ஸ்தாராமைத்ரீம் ததாநயா கருணே
  த்ருஷ்டஸ்த்வயைவ ஜநிமாநபவர்கமக்ருஷ்டபச்யமநுபவதி .20.

விடைவரைத் தண்ண வன்கண் விழைமணித் தாரை யாயே
  தடையறக் கிருபை யீரத் தருகிநீ யுருகி நோக்கும்
  படியுறும் பிறவி யாக்கம் பூக்குநற் சரணம் புக்கார்
  கொடைநயத் துழுத லோம்பாக் கதிர்நயத் தமுத முண்பார். 20
.

[கருணையே! வேங்கடமாமலைமேல் உதித்த சந்திரனுடைய திருக்கண்களில் தாராமைத்ரீ என்னும் அத்ருஷ்ட வசமான அருள் நிறைந்த ஸ்நேஹத்தை உண்டுபண்ணும் உன்னால் குளிர்ந்த கடாக்ஷத்தோடு பார்க்கப் பெற்று பிறவி அடைகிறவன் உழவு முதலிய பயிர்த்தொழில் சிரம மன்னியில் மோக்ஷம் என்னும் பலத்தை அநுபவிக்கிறான்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக