Wednesday, June 17, 2009

சரணாகதிமாலை 1

ஸ்ரீ:

ந்யாஸ தசகம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய:
கவிதார்க்கிக கேஸரீ,
வேதாந்தாசார்ய வர்யோ மே
ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.
{உத்தம ஞான ஸம்பத்தையுடையவரும், வேதாந்தங்களுக்கு சாஸ்த்ரோக்தமான பொருள் உரைப்பதில் பிரஸித்தி பெற்றவரும், திருவேங்கடநாதன் என்னும் திருநாமத்தை வஹிப்பவரும், கவனம் பண்ணுபவர், ஹேதுவாதம் செய்பவர் இவர்கள் எத்திறமையோராயினும் அவர்களுக்கெல்லாம் சிங்கம் போன்றவருமான நம் தூப்புல் வேதாந்த தேசிகன் அடியேன் மனத்திலே எப்போதும் வீற்றிருக்கக் கடவர்.}

அஹம் மத்ர க்ஷணபரோ
மத்ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீபதேரேவேத்
யாத்மாநம் நிக்ஷிபேத் புத: (1)

[ அஹம் -- அடியேனும், ஆத்மஸ்வரூபம்; மத்ரக்ஷணபர: அடியேனை ரக்ஷிக்கும் பொறுப்பும், எனது ரக்ஷணத்தின் சுமையும் ; ததா -- அவ்வாறே, அப்படியே : மத்ரக்ஷண பலம் -- அடியேனை ரக்ஷிப்பதால் உண்டாகும் பயனும், எனது ரக்ஷணத்தால் உண்டாகும் பலமும் : ந மம -- அடியேனுடையவை அன்று ; நான் எனக்கு உரியேன் அல்லேன் ; ஸ்ரீபதே: ஏவ -- ஸ்ரீய:பதியான நாராயணன் உடையவையே, ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே சேஷம், அவனே இவைகட்கெல்லாம் கடவன்; இதி -- என்று, இவ்வாறு ; புத: பண்டிதன் ; ஆத்மாநம் -- தன்னை ; நிக்ஷிபேத் -- ஸமர்ப்பிக்கக் கடவன்]

"அடியேன், அடியேனைக் காக்கும் பரம், அடியேனைக் காப்பதன் பலம், இவையனைத்தும் அடியேனுடையதல்ல, எல்லாம் திருவுக்கும் திருவாகிய திருமாமகள் கேள்வனுடையனவே" என்று தன்னைப் பகவானிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
இச்சுலோகத்தால் அங்கியினுடைய பிரிவான ஸ்வரூபஸமர்ப்பணம், பலஸமர்ப்பணம் என்கிற இரண்டு தளத்துடன் பரஸமர்ப்பணம் பண்ணக் கடவது என்றும், இம்மூன்று ஸமர்ப்பணத்திலும் பரஸமர்ப்பணமே ப்ரதானம் என்றும் கூறப்பெறுகின்றது.
நான் எனக்கு உரியேன் அல்லேன். ஒன்றை நிருபாதிகமாக என்னது என்னவும் உரிமையில்லை. என்னையும் என்னது என்று பேர்பெற்றவற்றையும் உடைமையையும், நான் ஸ்வதந்த்ரனாய்க் காப்பாற்றிக்கொள்ளத் தகுதியுள்ளவனும் அல்லன். நான் ப்ரதாநபலியும் அல்லேன். என்னுடைய ஆத்மாத்மீயங்களும் ஸர்வஸ்வாதியான அகாரவாச்யனதே. இவற்றினுடைய ரக்ஷணபரமும் ஸர்வரக்ஷகனான அவனதே. ரக்ஷணபலமும் ப்ரதாநபலியான அவனதே. அஹம் -- அடியேனும் அடியேனைச் சேர்ந்தவைகளும், நான், ஆத்மஸ்வரூபம்.
"அடியேனும், அடியேனைச் சேர்ந்தவைகளும் எனக்குச் சேஷம் அல்ல. நான் எனக்கு உரியேன் அல்லேன். ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே எல்லாம் சேஷம்" என்று அநுசந்திக்கை "ஸ்வரூபஸமர்ப்பணம்" இது இம்மை யிலும் மறுமையிலும் உளதாம். "அடியேனையும் அடியேனுடையனவாகப் பேர்பெற்றவற்றையும் அடியேன் ஸ்வதந்த்ரனாய் ரக்ஷித்துக் கொள்ளச் சக்தி யற்றவன். தகுதியில்லாதவன். இவற்றினுடைய ரக்ஷணபரமும் அந்த ஸ்ரீய:பதி யுனுடையதே" என்று அநுஸந்தித்தல் "பரஸமர்ப்பணம்". இந்தச் சரீர முடிவில் மற்றொரு திவ்ய சரீரத்தை அடைந்து அர்ச்சிராதி மார்க்கத்தினால் பரமபதத்தைச் சேர்ந்து அங்கு ஸ்ரீவைகுண்டநாதனை அநுபவித்து அதன் போக்கு வீடாகக் கைங்கர்யம் அடைதல் பலம். இதுவும் ப்ரதான பலியான ஸ்ரீமந்நாராயணன் உடையதே" என்று அநுஸந்தித்தல் "பலஸமர்ப்பணம்" .
ஸ்ரீபதேரேவ -- என்றதால் இந்த ஸமர்ப்பணத்தில் திருமகளாரோடு கூடிய நாராயணனே உத்தேச்யன் என்று சொல்லப் பெற்றதாயிற்று.
"இனி, 'மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்' (1-3-1) என்று தொடங்கி 'திருவுடையடிகள்' (1-3-8) என்றும் ,'மையகண்ணாள் மலர் மேலுறை வாளுறை மார்பினன்' (4-5-2) என்றும், 'நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பன்'(4-5-8) என்றும், 'கோலத்திருமாமகளோடுன்னைக் கூடாதே'(6-9-3) என்றும் சொல்லிக் கொண்டுபோந்து, 'திருவாணை' (10-10-2) என்றும், 'கோலமலர்ப் பாவைக்கன் பாகிய வென்னன்பே'(10-10-7) என்றும் தலைக்கட்டுகையாலே, ஸ்ரீமானான நாராயணனே பரதத்துவம் என்றும் சொல்லிற்று. இத்தால், நம் ஆசார்யர்கள் ரஹஸ்யத்திற் பதத்வயத்தாலும் அருளிச் செய்துகொண்டு போகும் அர்த்தத்திற்கு அடி இவ்வாழ்வாராயிருக்குமென்றதாயிற்று. ஆச்ரயணவேளையிலே 'மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்'(1-3-1) தொடங்கி போகவேளையிலே 'கோல மலர்ப் பாவைக் கன்பாகிய வென்னன்பே' என்று சொல்லுகையாலே, ஆச்ரயண வேளையோடு போகவேளையோடு வாசியற ஒருமிதுநமே உத்தேச்யமென்னுமிடம் சொல்லிற்றாயிற்று ; *** [ஈடு. முதல் ஸ்ரீய:பதி.]
புத: -- அநேக காலம் குருகுல வாஸம் பண்ணி மந்திர மந்திரார்த்தங்களை ஆசார்யன் மூலமாக நன்கு உணர்ந்து , தத்வ, உபாய புருஷார்த்தங்களைப் பற்றிய விவேகம் பெற்றவன்.
"முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கிஸ்வரூபமாவது -- ஆபரணத்தை உடையவனுக்கு அவன்தானே ரக்ஷித்துக் கொண்டு பூணக்கொடுக்குமாபோலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம். அதாவது -- ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய், ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப்பற்ற ஆத்மாத்மீய ரக்ஷணவ்யாபாரத்திலும், ஸ்வாதீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயம் இல்லாதபடி பரந்யாஸ ப்ரதாநமான அத்யந்த பாரதந்த்ரிய விசிஷ்டசேஷத்வ அநுஸந்தாநவிசேஷம். 'ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்' என்று சோசிதமான இவ்வநுஸந்தாந விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :-- சேஷியாய், ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும்பணிக்கு ஈடாக அநந்யார்ஹ , அநந்யாதீத சேஷபூதனாய் அத்யந்த பரதந்த்ரனான தான் 'ஆத்மாபி சாயம் நமம' என்கிறபடியே எனக்குரியேனல் லேன், ஒன்றை நிருபாதிகமாக என்னது என்னவும் உரியேன் அல்லேன், 'ஸ்வயம் ம்ருத்பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஸ்வரக்ஷணேப்ய சக்தஸ்ய கோஹேது: பாரக்ஷணே' என்கிறபடியே என்னையும் என்னது என்று பேர் பெற்றவற்றையும் நானே ஸ்வதந்த்ரனாயும், ப்ரதாநபலியாயும் ரக்ஷித்துக் கொள்ள யோக்யனுமல்லேன், 'ஆத்மா ராஜ்யம் தநஞ்சைவ களத்ரம் வாஹா நாநிச, ஏதத் பகவதே ஸர்வ மிதி தத்ப்ரே க்ஷிதம் ஸதா' என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஸ்வாத்மாத்மீயங்களும் அவனதே, 'ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே' என்கையால் இவற்றினுடைய ரக்ஷணபரமும்'நஹி பாலந ஸாமர்த்ய ம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்' என்கிறபடியே ஸர்வரக்ஷகனான அவனதே. 'தேந ஸம்ரக்ஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா, கேசவார்ப்பண பர்யந்தாஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே' என்கிறபடியே ரக்ஷணபலமும் ப்ரதாநபலியான அவனதே என்று பாவிக்கை. முமுக்ஷுமாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம், அகிஞ்சநே பரந்யாஸ ஸ்த்வதிகோங்கிதயா ஸ்தித: அத்ர ரக்ஷா பரந்யாஸஸ் ஸமஸ்ஸர்வபலார்த்திநாம், ஸ்வரூப பல நிக்ஷேப ஸ்த்வதிகோ மோக்ஷ காம்க்ஷிணாம்.
பலார்த்தியாய் உபாயாநுஷ்டாநம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்கு ப்ரதாநபலியானபடி எங்ஙனே என்னில் :-
அசித்தின் பரிமாணங்கள் போல சித்துக்குத்தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வசேஷியான தனக்கு உகப்பாய் இருக்கையாலே ஈச்வரன் ப்ரதாநபலி ஆகிறான். அசேதநமான குழமணனை அழித்துப்பண்ணியும், ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்சரத்தில் வைத்துப் பால் கொடுத்தும், வேண்டினபடி பறக்கவிட்டும் அதில் உகப்பு கண்டு உகக்கிறதோடு வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு. ஆனபின்பு இங்கு ஸ்வநிர்ப்பரத்வ பர்யந்த ரக்ஷகை கார்த்ய பாவநம், த்யக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம். ஸ்தோத்ரத்தில் 'வபுராதிஷு யோபி கோபிவா குணதோ ஸா நி யதா ததா வித: ததயந்தவ பாதபத்மயோரஹ மத்யைவ மயா ஸமர்ப்பித:' என்கிறதுக்குத் தாத்பர்யம் என் என்னில் :-- முத்ரையிட்டு இருக்கிற ராஜாவின் கிழிச்சீரை ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜாகைக் கொள்ளும் என்று உள்ளிருக்கிற மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே மீளக் கொடுக்குமாபோலே தேஹாத்யதிரிக்தாத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக் கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மாபஹார சௌர்யத்தால் உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்கும் என்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம். இதுக்குமேல் 'மம நாத யதஸ்தி' என்கிற ச்லோகத்தில் இஸ்ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுஸந்தேயம் பண்ணிற்றும் ஸ்வரூபாதிவிவேகம் அன்றிக்கே ஸமர்ப்பிக்கப் புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே, என்னது என்கிற அபிமாநத்தோடே ஸமர்ப்பிக்கில் ஆத்மாபஹார சௌர்யம் அடியற்றதாகாது என்கைக்காக அத்தனை அல்லது சாஸ்த்ர சோசிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யம் ஆக்கினபடி அன்று. ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகம் இல்லையே ஆகிலும் 'ந மம' என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே 'அஹமபி தவைவாஸ்மி ஹி பர:' என்னும்படி பரஸமர்ப்பண ப்ரதாநமான சாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றது ஆயிற்று. இப்படி சேஷத்வ அநுஸந்தாந விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில் உபாயபரமான பூர்வகண்டத்தில் மஹாவிச்வாஸ பூர்வக கோப்ருத்வ வரணகர்பமான சரண சப்த உபலிஷ்ட க்ரியாபதத்திலே சேர்த்து அநிஸந்திக்க ப்ராப்தம். இப்படி இவை ஆறும் இம் மத்த்ரத்திலே விமர்ச தசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும், வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள் போலே ஸாங்கமான ப்ரதாநம் ஏகபுத்யாரூடமாம். ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதாந அநுஷ்டாநம் ஸக்ருத்கர்த்தவ்யம் ஆயிற்று.அநேக வ்யாபார ஸாத்யமான தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான பாணமோக்ஷம் க்ஷண க்ருதயம் ஆகிறாப்போலே இவ் ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் இருக்கும்படி என்று ச்ருதி ஸித்தம். இப் பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதாநமாக அநுஸந்தேயம் என்னும் இடத்தை 'அநநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத், மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருத க்ருத்யோ பவிஷ்யதி' என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன் தானே தெளிய அருளிச் செய்தான். இதில் ஸாங்காநுஷ்டாநமாய் அற்றது - கர்த்ருத்வ த்யாக, மமதா தியாக, பலத்யாக, பலோபயத்வத்யாக பூர்வகமான ஆநுகூல்ய ஸங்கல்பாத்ய அர்த்தாநு ஸந்தாநத்தோடே குருபரம்பரா உபஸத்தி பூர்வகத்வயவசந முகத்தாலே ஸ்வரூப பலந்யாஸ கர்பமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை. இக்கர்த்ருத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் தன் கர்த்ருத்வமும் அவன் அடியாக வந்தது என்று தனக்கு யாவதாத் மானபாவியான பகவதேவ பாரதந்த்ரத்தை அறிகை. மமதா த்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தநம் ஆத்மாத்மீயங்களுடைய ஸ்வரூபாநுபந்தி பவதேக சேஷத்வ ஜ்ஞாநம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் சரண்ய ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டாநம் ப்ரதாந பலத்துக்கு வ்யவ ஹிதகாரணம் ஆகையும், அசேதநமாகையாலே பல ப்ரதாந ஸங்கல்ப ஆச்ரயம் அல்லாமையும், ஈச்வரன் பலோபாயம் ஆகிறது ஸஹஜ ஸௌ ஹார்த்தத்தாலே கரணகளேபர ப்ரதாநந் தொடங்கி த்வயோச்சாரண பர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதி காரணம் ஆன தானே ப்ரஸாத பூர்வக ஸங்கல்ப விசேஷ விசிஷ்டனாய்க் கொண்ட வ்யவஹித காரணம் ஆகையாலும், உபயாந்த சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தாநத்திலே நிவேசிக்கையாலும். இங்ஙன் இருக்கைக்கு அடி தர்மிக்ராஹகம் ஆன சாஸ்த்ரத்தாலே அவகதமான வஸ்துஸ்வபாவம் ஆகையால் இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாது. இஸ்ஸாங்காநுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யுஞ் சுருக்கு: -- அநாதிகாலம் தேவரீருக்கு அநுஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன், இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன், ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன், தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை, தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன், தேவரீரே உபாயமாகவேணும், அநிஷ்டநிவ்ருத்தியிலாதல் இஷ்டப்ராப்தி யிலாதல் எனக்கு இனி பரம் உண்டோ? -- என்று. இவ்விடத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள் உபாய பரிகரமாய் ஸக்ருத்தாய் இருக்கும். மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடு போருகிற இடமும் உபாய பலமாய் யாவதாத்ம பாவியாய் இருக்கும்.. இவற்றில் பிராதிகூல்யவர்ஜநமும் அம்மாள் அருளிச் செய்தபடியே ஆநுகூல்ய ஸங்கல்பம் போலே ஸங்கல்ப ரூபம் ஆனாலும் ஸக்ருத் கர்த்தவ்யம் என்னும் இடம் 'அபாயேப்யோ நிவ்ருத்தோஸ்மி' என்கிறபடியே அபிஸந்தி விராமம் ஆதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதல் ஆனாலும் அதில் ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாகக் கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது.

ப்ரவ்ருத்தி ரநுகூலேஷு நிவ்ருத்திச்சாந்யத: பலம்
ப்ராப்த ஸுக்ருதாச் சஸ்யாத் ஸங்கல்பேச ப்ரபத்தித:
ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும், ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையுஞ் சேர பலமாகக் கோலி ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்.
அறவே பரமென் றடைக்கலம் வைத்தன ரன்றுநம்மைப்
பெறவே கருதிப் பெருந்தக உற்ற பிரானடிக்கீ
ழுறவே யிவனுயிர் காக்கின்ற வோருயி ருண்மையைநீ
மறவே லெனநம் மறைமுடி சூடிய மன்னவரே.
[வேதாந்தமாகிய ஸாம்ராஜ்யத்தில் முடிசூடி நிற்கின்ற அரசர்களாகிய நம் ஆசார்யர்கள் தன் ஸம்பந்தம் பொருந்திய சேதநனுடைய ஸ்வரூபத்தைக் காப்பவனும், உலகுக் கெல்லாம் ஒரே அந்தர்யாமியாய் இருப்பவனுமான எம்பெருமானுடைய ஸ்வபாவத்தை நீ மறவாதே என்று சிக்ஷித்து, அநாதியாக நம்மை அடைவதற்கே ஊற்றம் உடையவனாய் இருந்து , அளவற்ற கிருபையை வைத்தவனாகிய எம்பெருமானுடைய திருவடியின் கீழ் சேதநனுடைய பொறுப்பு அற்றுப்போக வேண்டும் என்று நினைத்து ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஸமர்ப்பித்தனர்] {ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஸாங்க ப்ரபதநாதிகாரம்.} என்றதன் சுருக்கமே இம் முதல் சுலோகம்.
மேலும் இந்தச் சுலோகத்தின் பொருளை
"எனக்குரிய னெனதுபர மென்பே றென்னா
திவையனைத்து மிறையில்லா விறைக்க டைத்தோம்"
----(தேசிகமாலை, அமிருதரஞ்சனி 8)
{நானே எனக்கு ஸ்வாமி. என்னை ரக்ஷிக்குங் கடமையும் என்னுடையதே. அதன் பலனும் என்னுடையதே." என்று நினையாமல் ஸ்வரூபம் பரம் பலன் எல்லாவற்றையும் தனக்கு ஒரு நாயகன் இல்லாத பகவானிடம் ஸமர்ப்பித்தோம் என்று இவர்தாமே அருளிச் செய்துள்ளதும் காண்க}