வெள்ளி, 19 டிசம்பர், 2008

முத்தமிழ் மன்றம் • திரியை பார்வையிடு - சமையல் வெண்பாக்கள்

 

Re: சமையல் வெண்பாக்கள்

பதிவிடுசூரியகாந்தி வியா டிச 11, 2008 6:26 am

படம்
ஊறியரைப் பட்டிட்ட கெட்டிக் கடலையொடு
கீறியப் பூண்டுமல்லி யுள்ளிகாரம் மீறியச்
சோம்பு மணமொடு காயமுப்புச் சேர்த்தே
கூம்புருட்டிச் சுட்டால்(ள்) வடை.
ஊறவைத்து அரைத்த கடலைப் பருப்போடு பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இவையனைத்தையும் மீறுகின்ற வாசனை சோம்பு, பெருங்காயம், உப்பு முதலியவற்றைச் சேர்த்து கூம்பு போல உருட்டி அதை தட்டிச் சுட்டு எடுத்தால் வடை தயார்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

பதிவர் சின்னம்
சூரியகாந்தி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
பதிவுகள்: 7041
சேர்ந்தது: புத மார் 28, 2007 6:17 am
வசிப்பிடம்: சியாட்டில் (Seattle)

மேலே செல்


Re: சமையல் வெண்பாக்கள்

பதிவிடுசூரியகாந்தி வியா டிச 11, 2008 6:32 am

படம்
பாதிவெந்தப் பாசியில் ஓர்பங் கரிசியொடு
சோதியேற்றி வெண்ணுரைத்துத் தீத்தாழ்த்திப் பாதியான
முந்திரிச் சீரமிஞ்சி நெட்டமிங்கு நெய்ப்பொரித்தால்
இந்திரியின் வெண்பொங்க லாம்.
பாசிப்பருப்பு பாதி வெந்தவுடன் அதே அளவு அரிசி போட்டு தீ அதிகமாக்கி வெண்ணுரை பொங்கியபின் தீ குறைத்துப் பின்னர் பாதியாகப் பிளந்த முந்திரி சீரகம் இஞ்சி மிளகு பெருங்காயம் நெய்யிலே பொரித்து இறக்கினால் பெருமாள் கோவில் வெண்பொங்கல் தயார்.
நெட்டம் - மிளகு
இங்கு - பெருங்காயம்
இந்திரி - பெருமாள்

முத்தமிழ் மன்றம் • திரியை பார்வையிடு - சமையல் வெண்பாக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக