ஞாயிறு, 16 நவம்பர், 2008

கட்டளைக்கலித்துறை

மோகாடவிதன்னைநீகின்றதீரமுமுக்ஷுவிவர்
யோகாதிசயமதென் சொல்லாமிவ்வுலகத்திலே
தேகாபிமானங்களின்றிநின்றாரெங்கள்தேசிகரே
ஏகாதசிவிரதந்தவறாமலிருந்தவரே.

தரு-இராகம்-கவுளிபந்து-தாளம்-ஆதி

பல்லவி

வேதநியமனமே - வேங்கட
நாதர்நியமனமே.

அனுபல்லவி

மாதிரமேல்விசுவா மித்திரர்கோத்திரர்
சாதகராமா நுஜதயாபாத்திரர் (வேத)

சரணங்கள்

இச்சையில்லமற்சில ரசூயையைத்தொடுத்தாரே
யேகாதசிவிரத மதனில்வந்தடுத்தாரே
அர்ச்சகருக்குப்பரி தானமுங்கொடுத்தாரே
அருட்பாடென்றுதயிர்த் திரளையையெடுத்தாரே (வேத)
வாங்குமெனப்பெருமாள் சன்னிதிமுன்சென்றாரே
மஹாப்ரசாதம்சிர சாவகிக்கின்றாரே
தாங்குமோலைப் புறத்து நியமத்துநின்றாரே
சாட்சாத்நியமனமோ வடியேனுக்கென்றாரே (வேத)
அறிவுமிகுந்தசோதை திருமுலைப்பாலுண்டாரே
அர்ச்சகரிடத்தினி லாவேசமுங்கொண்டாரே
முறையிதுநாநியமிக்க வில்லையெனவிண்டாரே
முன்புநியமனமே நியமமெனக்கண்டாரே. (வேத)

விருத்தம்

குண்டலத்தினாலென்னகடுக்கனென்ன
கொண்டவிரலாழியென்னசாலுவென்ன
கொண்டலர்த்தித்திரிவதினாலாவதென்ன
குவலயத்தில்விபுதர்களேசொல்லக்கேண்மோ
விண்டலத்தினார்பரவுமரங்கர்மீது
வேதாந்ததேசிகன்றந்றேவியார்க்கு
மண்டலத்தின்மின்னுமின்னுப்பூச்சியாம்பொன்
வராகந்தானிவர்க்குமனவிராகந்தானே

கீர்த்தனைகள் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக