வியாழன், 3 ஜனவரி, 2008

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

அசேஷ விக்நசமநம் அநீகேச்வர மாச்ரயே
ஸ்ரீமத: கருணாம் போதே: சிக்ஷாஸ்ரோத இவோத்திதம். 5.

துன்றுதடை யாவுமுட னன்றவை துடைக்கும்
வன்றரும மங்கையுறை மார்பனரு ளாழி
வென்றியுறு வீறுதரு மேரணிய றக்கோல்
ஒன்றிருடி கேசனநி கேசனைய டுத்தேன். 5.

[தடைகள் யாவையும் உடனே துடைப்பவரும், ஸ்ரீநிவாஸனுடைய கருணை நிரம்பிய தடாகத்திலிருந்து சிக்ஷணம் செய்கிறது என்கிற வாய்க்காலாகக் கிளம்பினவருமான விஷ்வக்ஸேனர் என்னும் ஸேனை முதலியாரை ஆச்ரயிக்கிறேன்]

ஸமஸ்த ஜநநீம்வந்தே சைதந்யஸ்தந்யதாயி நீம்
ப்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம். 6.

துன்னுமுடி மின்னுமறை யுன்னுதிரு மன்னன்
பொன்னருளி னன்னருரு வென்னவுயி ரெல்லாம்
மன்னுமக வன்னவுணர் வம்மமினி தூட்டும்
அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன். 6.

[உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.]

வந்தே வ்ருஷகிரீசஸ்ய மஹிஷீம் விச்வதாரிணீம்
தத்க்ருபா ப்ரதிகாதா நாம் க்ஷமயா வாரணம்யயா. 7.

அன்னவன ருட்குறுத டக்குகள டக்கத்
துன்னுகமை கொண்டுதனி முன்னுதவு நன்மைத்
தன்னிலை யிலோங்கிமகி தாங்கியெனு நாமம்
மன்னுவிடை யத்திரியன் பத்தினிது தித்தேன். 7.

[அகில புவனங்களையும் தாங்குகிறவளும், வேங்கடாத்ரிநாதனுக்குப் பத்தினியாயும், கமையெனும் பொறுமைக் குணத்தால் வேங்கடநாதனுடைய கிருபைக்கு விக்நங்களனைத்தையும் தடுப்பவளுமான க்ஷமை எனப் பெயரிய பூமிப்பிராட்டியைத் துதிக்கிறேன்.]

நிசாமயதுமாம் நீளாயத்போக படலைர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்ததோ ஷேஷ்வதர்சநம் 8.

ஏகசர ணன்பரக மேதுமது காணா
வாகுதரு மாணிமறை யாணையன் விழிக்கோர்
போகுறும யக்களிபி ணைப்படல டைத்தே
ஈகைமிகு சீலநல நீளையெனை நோக்கும். 8.

[யாருடைய போக மயக்குகளினால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்க வொட்டாமல் ஸ்ரீநிவாஸனுடைய கண் மறைந்ததுபோல அவர் அக்குற்றங்களை அறவே நோக்காதது போல இருப்பாரோ அந்த நீளையென்னும் பிராட்டி அடியேனைத் தனது நீண்ட கண்களால் நோக்கி யருள வேண்டும்]

கமப்யநவதிம் வந்தே கருணா வர்ணாலயம்
வ்ருஷசைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம் 9.

செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
விடைக்கிரி தடைத்தம ரடைக்கல மலர்க்கே
கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன். 9.

[கருணை யென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கட மாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு, ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வர்ணிக்கக்கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகிறேன்.]

அகிஞ்ச நநிதிம் ஸூதிமப வர்கத்ரிவர்கயோ:
அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம். 10.

கைம்முதலி வர்க்கொருக ரத்துறுநி திப்போல்
இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன். 10.

[கைம் முதலில்லாத பேதைகளும் வேறு கதியற்றவர்களுமான சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும், திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்ஜநம் என்கிற மாசு அடியோடு இல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன்]

2 கருத்துகள்:

  1. romba nandri thiru avargale..
    neenga solli dhaan thinamani kadhirla adha pathi potirukaangannu therinjudhu..andha link kedaicha sollungalen!! naanum pathu oru alpa sandhoshap paduven!!

    neriaya exam irundhadhaala badhil poda mudiyala..

    unga padhiva paathaa romba arumaaiya iruku.. thirumbi varen!!

    பதிலளிநீக்கு
  2. Ms Priya,
    Thanks for your reply. I shall send you the image if you prefer to send your mail ID. Actually I tried to add here itself the pdf of the page but failed due to my technical inadequacies. Meanwhile you yourself can log on to www.dinamani.com and then thro'Archives secttion go to 27/1/08 go to kadir where you can find the text entry alone. In the book, they have displayed the index page of your blog itself.

    பதிலளிநீக்கு