வியாழன், 27 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

 

ஸ்ரீ கேசவ ஐயங்கார் தேசிக தர்சநத்திற்குச் செய்துள்ள பேருபகாரங்கள் எண்ணிறந்தவை. தேசிகன் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பக்தியாலும், காதலாலும் ஸ்வாமி தேசிகன் அருளிச் செய்தவைகளில் சமஸ்கிருதத்தில் இருந்தவையெல்லாவற்றையும், ஸ்வாமி தேசிகனே சொன்னதுபோல, எல்லாரும் அறிந்து இன்புறுவதற்காக தமிழிலே மூலத்தின் சொற்சுவை, பொருட்சுவை, கவிதை நடையழகு எல்லாம் அதேபோல் அமையுமாறு தமிழிலே தனக்கு இருந்த புலமையாலே மொழிமாற்றம் செய்து தந்த வள்ளல் அவர். திருப் பாதுக மாலை அவற்றுள் ஒரு ரத்தினம். அதே போல் ஸ்வாமியின் "தயா சதகம்" அவரால் "திருவருட்சதகமாலை"  என மாற்றப்பட்டு,எளிமையான விளக்கத்துடன் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது  தமிழையும் வடமொழியையும் இரு கண்ணே போல் போற்றும் தேசிகனடியாரெல்லாம் படித்து இன்புற வேண்டிய அது இன்று முதல் தினம் ஒரு பாடலாக இங்கு மலரும். ஏற்கனவே ஸ்ரீ ஸ்ரீதரன் ஸ்வாமி மூலமாக தமிழிலே படித்து இன்புற்று வருபவர்களுக்கு இது மேலும் ஆனந்தமாயிருக்கும் என்ற நம்பிக்கையோடு  தொடர்வது

         திருவருட்சதக மாலை
  

  ப்ரபத்யே தம் கிரிம்ப்ராய : ஸ்ரீநிவாஸா நுகம்பயா
  இக்ஷூ ஸாரஸ்வந்த்யேவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்             1.

திருக்களி யுரப்பர னிறைக்களி யுருக்கப்
பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்
சருக்கரை யிறுக்கென சிறப்பினி லுருக்கொள்
திருக்கிரி யெனத் தெரி கிரிப்புக லடைந்தேன்.
                              1.

       [அலர்மேல் மங்கை உறைமார்பனுடைய தயையே கருப்பஞ் சாறாகப் பெருகி ஆறாக வோடிச் சருக்கரைக் கட்டியாய் கனமாய் உறைந்து உருக்கொண்டு நிற்பது போலுள்ள திருவேங்கடம் என்னும் மாமலையை அடியேன் பலகால் சரணம் அடைகிறேன்]

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக