வியாழன், 26 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு இராகம் -- சுருட்டி -- தாளம் -- ஆதி
பல்லவி
ஆராலறியலாஞ் சீரார்தூப்புலவதாரதேசிகர்வைபவமே.
அனுபல்லவி
நாராயணர்கச்சிப் பேரருளாளரை
நேராயனுதின மாராதனைசெய்த (ஆரா)
சரணங்கள்
மாயாவாதிசன்னியாசி வாதத்தில்வல்லமைபேசி
வாயாமலேசல்லியமோசி வந்துகுளத்தில்வாரிராசி
வற்றவுறுஞ்சியு மத்தையிவரின்வ
யிற்றுநிரம்பவும் வைத்தததுகண்டு (ஆரா)
வயிறானதுப்பல்மீற மந்திரமீதென்றுதேறக்
கையினாலொருதூணைக்கீறக் கண்டுவிடவேஜலமுமாறக்
கருவமடங்கியே மறுபடியுமிவர்
கிருபைபெறுமவ னுறுதிசெயவைத்த (ஆரா)
ராமானுஜஸித்தாந்த ராமுபயவேதாந்த
சீமானுமானசாந்த ஸ்ரீவேங்கடாத்திரிக்காந்தத்
திருவனந்தசூரி தருசுதமணியாய்
வருபெறுமையுள்ள குருதிலகர்தம்மை (ஆரா)

விருத்தம்
வருவிஜயநகரமதுதனிலேராஜ
வல்லபர்பாலிருக்கும்வித்யாரணியனன்பு
பரிபாலயஸ்னேகிதத்தாலிவருமிங்கு
பாதானவிருத்தியின்வைபவத்தைக்கேட்டி
வரிடத்தேராஜனைக்கொண்டுபகரிக்க
வரவழைக்கவேண்டுவென்றுமனத்திலெண்ணி
ஒருதரமிரண்டுதரமுப்ரகார
மொப்பந்தானெழுதினன்விண்ணப்பந்தானே.
இதுவுமது
இப்படியேதேவரீரிவளவாக
வெழுந்தருளினீராகிலரசனைக்கொண்
டப்படியேதேவரீர்க்கடிமையாகி
யதிகமாம்பிரயோஜனங்கள்தானேசெய்து
வைப்பனென்றேயிட்டுவந்தவிண்ணப்பத்தை
வாசித்துக்கொண்டதனிற்சுலோகமாக
முப்பிரகாரம்மாறுசுலோகமிட்ட
மூர்த்திதான்வைராக்யமூர்த்திதானே.

தரு -- இராகம் - கல்யாணி - தாளம் -- ஆதி
பல்லவி
ஜகத்திலேவைராக்யமிகுந்த தேசிகருக்குநிகராரையா
அனுபல்லவி
யுகத்திலேகலிக்குப் புதுமையாக
வுண்டானவரெங்கள் கண்டாவதாரரே. (ஜக)
சரணங்கள்
குவலயத்தில் வெகுகோடியிலேயொரு
கோடியில்நூறுபங்கி லொருபங்கு
கவலைகொண்டுபரிபாலனஞ்செய்துவரு
கலையிருக்கிறதென்று மிகவுங்க
ருவமடைந்துவருந்தேசராஜர்களி
னுறுதிவெகுமதியெண் ணலையங்கு
அவலிலேயொருபிடியையமுதுசெய்த
தாங்குசேலரைக்குபேர னாக்கிவிளங்கு
மந்தத்தேவனையே வந்திப்பேனென்றாரே (ஜக)
உஞ்சவிருத்தியிலும் பொறுக்குநெற்றண்டுல
முதரத்தின்பசியைத் தீராதா
கொஞ்சமோதெருவிற்கந்தைபொறுக்கித்தைத்துக்
கொண்டுகுளிருந்தீர்த்தா லேறாதா
பஞ்சமென்னகாணுங்குளத்திலொருசேரங்கை
பாணிதாகத்தைத்தீர்க்க நேராதா
வஞ்சமேமிகுந்ததேசராஜர்களின்
வாசல்சென்றுவிபுதர்கெஞ்சுவதே போராதா
மருளாதீர்களென்று பொருளானதுரைத்தார்.
மனஞ்சலிகப்பிலாமற் கஷ்டப்பிரபுக்களுடை
வாசல்முகப்புத்திண்ணை தனிலொட்டி
யெனுமிருப்பதற்கோரஞ்சலிசெய்தேனென்று
யெங்குங்கீர்த்தியுள்ள துசங்கட்டிக்
கனம்பொருந்தும்நல்ல அஞ்சனமேனியாங்
கனகநிரபாயமென் பதையொட்டித்
தனஞ்சயன்றோதிலலங்காரமாகிய
தனமேரென்னிடத்திலிருக்கிறதென் றதயீடிச்
சப்தார்த்தமெழுதி வித்யாரண்யருக்கிட்டார் (ஜக)
தோயமேநிறைந்தவாரிதிமத்தியினிற்
ஜொலிக்கும்வடமுகாக் கினிபோலே
பாயுமுதரரவனலெழும்பியென்னவென்று
பரவினாலுமிந்தப் புவிமேலே
சாயங்காலத்தில்மருமல்லிகைப்புஷ்பவா
சந்தருநமது வாக்கினாலே
ஆயுமோர்திரணத்தைக்கூடராஜரிட
யாசிக்கிறதில்லையாக்குமேன் மேலே
வயிராக்கியமதுதானே சிலாக்கியமாகக்கொண்டார் (ஜக)
தேகமுள்ளவரைக்குமூடப்ரபுக்களைச்
சேவித்துச்சம்பா திக்குந்தனமே
சேகரமென்னவப்பைவிறகாய்க்கொண்டுதனஞ்
செயனையடக்குந்தனந் தந்தனமே
யோகமுள்ளதனஞ்செயனுக்குவர்த்தன
முயரவெடுத்த கோவனர்த்தனமே
யாகுஞ்சாதனமபாதனந்தேவர்கட்கு
மாராதனமானதனமே யென்றனமே
யாமத்திகிரியில் பிதாமகன்வைத்தானென்றார்சகல (ஜக)
விருத்தம்
செல்லுமுன்னால்தமதுபிதாதானேசம்பா
தித்ததொன்றுந்தனதுசம்பாத்தியமதொன்று
மில்லையுண்டியானைமலைச்சிகரமீதே
யிருப்பதுபிதாமகன்சம்பந்தமான
நல்லதனமென்றெழுதிவிடவேவித்தியா
ரணியரிவர்வைராக்யாதிசயங்கண்டு
மெல்லடியிற்பிரவணராயிருந்தாரென்றும்
விள்ளுவாரெவர்களுமீதுள்ளுவாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக