திங்கள், 26 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (26-11-2012)

குரு பரம்பரை வைபவத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆவலுடன் கேட்டு வருபவர்கள் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்த ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய வைபவங்களைப் பற்றி இந்த வாரம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி. 

“தேசிக னென்னு மாசான்
        தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
         விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே'”

என்று அன்று நம் ஸ்வாமி தேசிகனைப் பற்றி வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் பாடியது நம் ஸ்ரீமத் ஆண்டவனுக்கும் சாலப் பொருந்தும்.  என்றாலும், மிகவுமே கடினமான அந்தக் காரியமாம் ஸ்ரீமத் ஆண்டவன் வைபவங்களை அழகாக ஆச்சரியப்படும் வகையில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஸ்ரீமத் ஆண்டவனுடன் மிக நெருக்கமாகப் பழகிடும் பாக்கியம் பெற்ற சிலருக்கே தெரிந்த ஸ்ரீமத் ஆண்டவனின் பூர்வாச்ரமப் பெருமைகளை, அன்றே வெளிவந்த அவரது உதார குணங்களை, கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும் அவருக்கு அன்றே இருந்த ஆனந்தங்களை, ஸ்ரீகோசங்களைப் படிப்பதில் அவருக்கு இருந்த அபாரமான ஆர்வத்தை என்று விவரித்துக்கொண்டே போகுமளவுக்கு இருக்கும் விவரங்களை ஆசாரியன் என்று தள்ளி நின்று தரிசிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ள அனைவரும் அறிந்து ஆச்சரியப்பட்டுப் புளாகாங்கிதமடையும் வகையில், என்ன தவம் செய்தனம் இவரை ஆசாரியனாக அடைய என்று சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து மெய்சிலிர்க்கும் வகையில், பூர்வாச்ரம விருத்தாத்தங்களில் ஓரிரண்டு சொன்னாலும் அருமையாகச் சொல்லி மகிழ வைக்கும் இன்றைய உபந்யாஸத்தைத் தரவிறக்கிக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?60t604c3lnfxrax

அதற்கெல்லாம் பொறுமையில்லை இப்பவே இங்கேயே கேட்கணும்னு நினைக்கிறவர்களுக்கு

இந்த உபந்யாஸத்திலே ஸ்ரீமத் ஆண்டவன் பாதயாத்திரையாய் சஞ்சாரம் பண்ணுகையில் ஒரு கிணற்றில் இறங்கி ஜலத்தில் மிதந்து யோகம் புரிந்ததைக் குறிப்பிட்டதைக் கேட்டபோது 2008ல் திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய சமயத்தில் சக்ரதீர்த்தத்தில் நீச்சலடித்து அதன்பின் வானம் பார்த்துப் பல நிமிடங்கள் மிதந்து அடியோங்களை பிரமிக்க வைத்ததுநினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக