சனி, 17 மார்ச், 2012

வைத்தமாநிதி 16

மைத்தடங்கண்ணி யசோதை
சீராட்டி வளர்க்கும் மாண்பு

பேய்ப்பால் முலைஉண்ட பித்தனே! உன்னைக் காதுகுத்த 
ஆய்ப்பாலர்  பெண்டுகள் எல்லோரும் வந்தார்
அடைக்காய் திருத்தி வைத்தேன் ;
திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையாம்
வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும்
மகரக்குழை கொண்டு வைத்தேன்


வெய்யவே காதில் திரியை இடுவன்
நீ வேண்டியதெல்லாம் தருவன்
வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு
வார்காது தாழப்பெருக்கிக் குணம் நன்று உடையர்
இக் கோபால பிள்ளைகள்! கோவிந்தா!
நீ சொல்லுக் கொள்ளாய், இணை நன்று அழகிய
இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன்;
சோத்தம்பிரான் இங்கே வாராய்!
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்,
வேய்ந்தடந் தோளார்  உன் வாயமுதம் உண்ணவேண்டிக்
கொண்டுபோவான் வந்து நின்றார்!
பொறுத்து இறைப்போது இரு நம்பீ!
புண் ஏதும் இல்லை, உன் காது மறியும்”
என்று வார்காது தாழப் பெருக்கி அமைத்து
மகரக் குழை இடவேண்டிச் சீரால் அசோதை
சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
உய்ய இவ்ஆயர் குலத்தினில் தோன்றிய
ஒண்சுடர் அச்சுதனும்
”முலை ஏதும் வேண்டேன்” என்று ஓடிக்
காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு இருக்க
தாயும் “தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் , குற்றமே அன்றே!” என்ன

செங்கண்மால் சிரீதரன்
”என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா, காண்,
என்னை நான் மண் உண்டேனாக அன்புற்று நோக்கி
அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே!
மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப்புண்டாய் வெண்ணெய் என்று கையைப் பிடித்துக்
கரை உரலொடு என்னைக் காணவே கட்டிற்றிலையே!
காதுகள் நொந்திடும் கில்லேன” என்று மாற்றம் உரை செய்ய
அசோதை
”செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்!
சிரீதரா! உன் காது தூரும், சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால்
பிறர் முன்னே மறந்தும் உரையாட மாட்டேன்
கையிற் திரியை இடுகிடாய்
இந்நின்ற காரிகையர் சிரியாமே” என்ன
கண்ணன்
”காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என்?
என் காதுகள் வீங்கி எரியில்?” என்ன, அசோதை
தாரியாதாகில் தலைநொந்திடும் என்று விட்டிட்டேன்
குற்றமே அன்றே! சேரியில் பிள்ளைகள் எல்லாரும்
காது பெருக்கித் திரியவும் காண்டி!
உண்ணக் கனிகள் தருவன்,
கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்,
நாவற்பழம் கொண்டு வைத்தேன், இவை காணாய்,
இங்கே வாராய் என்ன
கண்ணனும்
காது பெருக்கி கனகக் கடிப்பு இட்டுக் கொண்டான்.

..தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக