அடியேன் குமாரனின் நூதன க்ருஹப்ரவேஸம் நேற்று சென்னை பெருங்களத்தூரில். ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்துடன் நடைபெற்றது. இன்னும் ஒரே வாரத்தில் அவனது கல்யாணம் என்பதால் அகத்து மட்டும் என முடிவு செய்து நடத்தினோம். எப்படியோ கேள்விப்பட்ட பெரியவர் ஒருவர் அங்கு வந்திருந்து வாழ்த்தி ஒரு அருமையான பரிசு ஒன்றையும் அளித்தார். விழாவில் பரிசளிப்பதில் என்ன ஆச்சரியம் ? அது 1952ல் அடியேனது அபிமான ஸ்ரீ ஆர். கேசவ ஐயங்கார் பதிப்பித்த "தேஶிக ப்ரபந்தம்" நூலில் அவர் எழுதிய முன்னுரை என்பது அந்தப் பரிசின் விசேஷம். 71 பக்கங்கள் உள்ள அந்த முன்னுரையை நேற்று இரவு படித்தேன். அதை உடனடியாக இங்கு வெளியிட ஆசை. ஆனாலும் கல்யாண வேலைகளால் அது செப்டம்பர் 15க்குப் பிறகு இங்கு ஒரே தவணையில் வரும்.
"பேரிரும் புகழி னாமம் பெரியநம் பெருமாள் பாதச்
சீரிரும் புகலி னாமஞ் சீரிய சடகோ பன்தாள்
சேரிரும் புனித மூர்த்தஞ் செறிந்ததொல் செல்வப் பேறே
தேரிரும் புரிவொ லித்த தேசிக நாமம் போற்றி.
மறையேறு மெய்ய மதியேறு செய்ய மகிழேறு துய்ய மொழியி
னிறையேறு நீதி நிறையேறு நீடு நிலையேறு வீடு நிகழ
அறையேறு மார்வ முறைமங்கை யண்ண லடியாறு தேறு மறைமா
விறையேறு கந்த முமிழ்சந்த முந்த விரிமாலை வீறு பொலிக.
என ஆரம்பித்து 21 பாடல்களில் நிறைவு பெறுகின்ற தேசிக மாலை யைத் தொடர்ந்து வரும் அற்புதமான விரிவுரையைப் பரிசாக அளித்தவருக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்?
இதைத் தட்டச்சிக் கொண்டிருக்கும்போதே உள்ளே வந்த உறவினர் ஒருவர் "ஆர்.கே.ஸ்வாமி பதிப்பித்த "ப்ரபந்த ஸாரம்" நூலை எப்போதோ தேவகோட்டையில் வக்கீல் ஜகன்னாத அய்யங்கார் அகத்தில் படித்தேன். அதை தேடிப் பார்த்து எழுது. ஆர்.கே. எழுத்தில் அது மகுடம் " என்று சொல்கிறார். யாரிடமாவது இருக்கிறதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக