வியாழன், 22 ஏப்ரல், 2010

தொடங்கியது சித்திரை ப்ரும்மோத்ஸவம்.

திருப்புல்லாணி ஸ்ரீபட்டாபி(ஷேக) ராமச்சந்திரமூர்த்திக்கு சித்திரைத் திருநாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு ம்ருத்ஸங்கரஹணத்தையும் கணக்கிலெடுத்து சிலர் நேற்றே ஆரம்பித்தாயிற்று என்றும் சொல்லலாம்.

IMG_7727 மாலையில் திருமஞ்சனத்திற்குப் பிறகு, சாற்றுமுறையில் பெருமாளும் உடன் இருந்து அனுக்ரஹித்து முதல் திருநாள் ஆரம்பமானது. ஸ்ரீஆதி ஜெகன்னாதப் பெருமாள் அனுக்ரஹித்துப் பிறந்தவர்தானே ஸ்ரீ ராமச் சந்திர ப்ரபு! எனவே, அப்படிப் பிறந்த பிள்ளையின் உத்ஸவத்தை ஆரம்பித்து வைத்து, அனுக்ரஹிக்க பெருமாளும், அப்படி அனுக்ரஹிப்பதைக் கண்டு களிக்க நாச்சிமார்களும் இராமன் அருகில் இருந்து கடாக்ஷித்து ஆசிகூற சாற்றுமுறை நடக்கும்.IMG_7728 அதன்பின் ஸ்ரீஇராமன் சீதா, லக்ஷ்மண ஸமேதராய் சூரியப்ரபை வாகனத்திலும், பல்லக்கில் பெருமாள் தன் நாச்சிமார்களுடனும் திருவீதிப் புறப்பாடு கண்டருளினர்.

IMG_7735

பங்குனி மாதமே சொன்னேன். மாதங்கள் மாறி, உத்ஸவங்கள் மாறும்போது வாகனங்களில் பெருமாளுக்கு பதிலாக ஸ்ரீஇராமன் எழுந்தருள்வார். மற்றப்படி பெரிய மாற்றங்கள் எதுவும் கிடையாது என்று.

IMG_7743

 

ஆகவே, கூறியது கூறல் குற்றம் புரியாமல் உத்ஸவ படங்களை மட்டும் நாளை முதல் இங்கு இடுவேன்.

IMG_7745

 

 

பங்குனியைப் போலவே சித்திரை ப்ரும்மோத்ஸவ 11 நாட்களும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்தில் ததீயாராதன கைங்கர்யம் நடக்கிறது.

1 கருத்து:

  1. //ஆகவே, கூறியது கூறல் குற்றம் புரியாமல் உத்ஸவ படங்களை மட்டும் நாளை முதல் இங்கு இடுவேன்//

    ஆனா, கேள்விகள் மட்டும் அப்பப்போ எழுப்பறோம்!:)

    மொதல் கேள்வி: படத்தில் இளையாழ்வாராகிய இலக்குவனுக்கு வில் இல்லையே? ஏனோ?

    பதிலளிநீக்கு