திங்கள், 19 ஏப்ரல், 2010

அவசியம் படித்து இன்புற வேண்டிய நூல்

கூகுள் குழுமத்தில் மின்தமிழ் குழு ஆற்றி வரும் அரும் பணியைப் பற்றி ஏற்கனவே சில முறை இங்கு குறிப்பிட்டுள்ளேன். தமிழ் மரபுக்கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, வெண்பா, தமிழ் இலக்கணம் பற்றியெல்லாம் அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாக பல இழைகள் தொடரும் அங்கு அவ்வப்போது மிகப் பழந் தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து வலையேற்றிப் பாதுகாப்பதையும் சேவையாகச் செய்து வருகின்றனர். சமீபத்தில் அப்படி வலையேற்றிய ஒரு நூல் "சித்திரக் கவி மாலை". இயற்றியவர் திரு அப்துல் கபூர் சாயபு. நூலைப் படித்து மெய்மறக்கும் போதே, போன நூற்றாண்டு வரை இந்து முஸ்லிம் கிறிஸ்தவ பேதமில்லாமல், ஐயங்காரும் பிள்ளைவாளும் சாயபுக்களும் சாதி பேதமில்லாமல் ஒரு குடையில் அமர்ந்து தமிழ் வளர்த்த காட்சி கண் முன்னே விரிந்து இன்றைய சூழ்நிலைகளை ஒப்புநோக்கி மனதை வேதனைப் படவும் வைக்கிறது. தமிழில் ஆர்வம் உள்ளவர்கள், அல்லது எதிர்காலத்துக்குப் பயன்படும் என்று கருதுபவர்கள் சேமித்து வைத்துக் கொள்ள 

இங்கிருந்து நூலைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
 

1 கருத்து: