ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

இன்னொரு தீர்த்தவாரிக் காட்சி

1940களிலே வந்து கொண்டிருந்த “ஸ்ரீதேசிக ஸ்ரீஸுக்தி ஸம்ரக்ஷணி” இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு தீர்த்தவாரிக் காட்சி. தீர்த்தவாரி என்று சொல்லி விட்டு ஆசிரியர் சுவைபட எழுதியிருப்பது என்னவோ

பொன்னிவர்மேனி மரகதத்தின்
         பொங்கிளஞ்சோதியகலத்தாரம்
  மின்னிவர்வாயில் நல்வேதமோதும்
        வேதியர்வானவராவார்தோழீ
என்னையும்நோக்கியென்னல்குலும்நோக்கி
       ஏந்திளங்கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென்னோக்குமென்றஞ்சுகின்றேன்
       அச்சோவொருவரழகியவா.

என்ற ஆழ்வாரின் அருளிச் செயலுக்கு ஒரு அருமையான நாடகம்! படித்து ரசியுங்களேன்.

இதே ஸம்ரக்ஷணி இதழில் வந்த பல அருமையான கட்டுரைகளை அடியேனது இன்னொரு ப்ளாக் http://rajamragu.spaces.live.in ல் காணலாம். ஸ்வாமி தேசிகனின் பரம ரசிகராக இருந்த திரு D. ராமஸ்வாமி ஐயங்கார் எழுதியவை.

திரு அனானிமஸ் அவர்களே! ஏற்கனவே தேசிகன் யார்? அவர் என்ன செய்தார்? என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டிருந்தீர்கள். எனது அடுத்த பதிவில் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறேன்.

நங்கநல்லூர் அன்பர் ஒருவர் அனுப்பி வைத்த திருநின்றவூர் கருட ஸேவைக் காட்சி திரு கமலக்கண்ணி அம்மன் கோவிலாருக்கு! விளக்கம் அடுத்த பதிவில்.

02 April 2010 001

02 April 2010 016

02 April 2010 019

02 April 2010 009

2 கருத்துகள்:

  1. திருநின்றவூர் கருட சேவையை கண்டு களித்தேன் ஐயா!
    முதல் படத்தில் இருக்கும் கருட சேவை பெருமாளோடு இருக்கும் பட்டர்
    கோவில் மூலஸ்தான பெருமாள் சேவையில் ஈடுபடுபவர்.பலமுறை பார்த்துள்ளேன்.
    நான் சென்னையில் இருந்தும் கருட சேவை காண வாய்ப்பு கிடைக்கவில்லை. திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கருட வாகனத்தில் திருபுல்லாணிக்கு சென்று உங்கள் மூலமாக தரிசனம் கொடுத்து இருக்கிறார்.
    மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  2. வாவ்!
    இப்போ தான் அந்த 1940 நாடகத்தைப் படிச்சேன்!
    அச்சோ...அச்சோ!
    அச்சோ, ஒருவர் அழகியவா!

    அப்படியே செந்தூர் அமுத நிலவொளியில்,
    கொடி மல்லிகை மேவும் மணத்தில்,
    பனையோலை காற்றசை பரபர சத்தத்தில்,
    மெல்லிதாய் வெல்லப்பிட்டு இரவுக்கு உண்டு,
    கடலோசையும் அலையோசையும் கூட,
    ஈழத்து அலைவரிசையில் சுசீலா குரல் தவழ,
    பனங் கிழங்கு பாதிக் கடித்து,
    மீதிக்கு செல்லச் சண்டை பிடித்து,
    அலையோசையும் நின்று போன ஓசை...
    அவனோசையின் காதோர ரீங்கார ஓசை...
    என்ன மொழியில் பேசுகிறான்?
    புரியவும் இல்லை! ஆனால் பிரியவும் இல்லை!
    அச்சோ, வீட்டில் தேடுவாங்களோ?
    அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்
    அச்சோ ஒருவன் அழகியவா!
    அச்சோ ஒருவன் அழகியவா!

    பதிலளிநீக்கு