Padukaraj or Sovereignty of service
The glory of Paduka raj (Servant's raj), according to the author, excels even the glory of Ramaraj (God's raj); (31) for it is the raj of Hls devoted Servant, and it is in that raj that service reigns supreme. It is the very raj of the sovereignty of service. Rama only "acts" in service; (32) Paduka “lives" in service. Rama's “servlce' is a “life-like" acting, and the life whose likeness He acts is Hls Paduka's. Hence the real sovereignty of service in Padukaraj. That is the excellence of Paduka.the servant. That excellence, in the words of Vaimiki, is the excellence of the effectuation of "universal happiness" (sarvaloka yogakshema). The rule of Paduka is the rule of service. "Unite and serve' is the rule of that service. Padukas is a union and in that union it rules in service and serves in rule Rule and serve or serve and rule is no paradox or repugnancy. It is a basic truth. Belng basic truth it is'a mystery; It is that truth - the truth of the true oneness of the ruler and servant. that has to be understood, it is its implications that have to be explored and it is its applications that have to be made “ Thou livest as servant, and rulest as king: who can 'comprehend this. Thy transcendent mystery!" is the profound utterance delivered from the peak of poetic genius by the universal poet-Kambar (33). It is with those profound words that the poet made Garuda (Veda) wake up Rama to His sovereign glory. When Rama was crowned. says that preeminent poet, each one in the universe felt that he was crowned himself (34) Thst was how Rama delighted and elevated them all to the regal nobility of serving citizenship in an equality of sovereign fellowship with Himself That is the truth about the true, the good and the beautiful raj and it is to that truth that we have to awaken. That Is good raj and that raj is Paduka raj, That raj is good polity, and that rule is good politics. Is that so? Can that be so true or so good as that? It is a question which calls for an answer, and that answer has therefore to be attempted, however inadequately, in this note
(31): Puduka 108, 153,159, 167, 176, 180 , 304, 236.
858.899 et pasrim.
(32): Paduka 176, 234, 240.
(33): Nagapasappadalam 255.
(34): Thirumudiyattuppadalam 40.
திருவருட்சதகமாலை |
|| ஸ்ரீ;||
முகவுரை.
நின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லேன்
நெடுங்காலம் பிழைசெய்த நிலைகழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை யுகந்தேன்
உன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்றநிலை யெமக்குத் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை
இன்னருளா லினியெமக் கோர் பரமேற்றாமல்
என்திருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே.
(தேசிகமாலை, அமிருதா சுவாதினி 31)
திருமகளோடொருகாலும் பிரியா நாதனான திருநாரணன் திண் கழலே சேதுவெனச் சேர்தலே சிற்றுயிர்க்குற்ற நற்றுணை. திருமாலால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள், சரணாகதி வைபவத்தை நன்குணர்ந்து, அதைத் தாங்கள் அநுஷ்டித்துப், பகவானை அநுபவித்தவாறே பேசியதாற்றான்,
மாசின் மனந்தெளிமுனிவர் வகுத்ததெல்லாம்
மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா
வாசியறிந்திவை யுரைத்தோம் வையத்துள்ளீர்
வைப்பாக விலைகொண்டு மகிழ்மினீரே.
(அமிருதசுவாதினி 27)
என்றும்,
மங்கையர்கோ னென்றிவர்கள் மகிழ்ந்துபாடும்
செய்யதமிழ் மாலைகள் நாம் தெளியவோதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே.
--- (அதிகாரச் சுருக்கு 1)
என்றும் தூப்புல் வள்ளலாரான நம் வேதாந்த குரு வெகு அழுத்தமாக அறுதியிட்டுள்ளார்.
உலகம் வாழவேண்டுமென்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புற்றிருவேங்கடநாதன், பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம், அநேக கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளனர்.இம்மறைமுடித்தேசிகனார் வடசொற்கலைக்கெல்லை தேர்ந்தவராகலின், வடமொழி வல்லார் சந்தமிகு தமிழ்த் திறனை அறிந்துய்தற் பொருட்டு, இத்துறைகள் தாங்கி நிற்கும் தோத்திரங்களை வடமொழியில் யாத்துள்ளார். அவற்றைத் தமிழ் மக்கள் உணர்ந்து இன்புறுவதற்காகத் தமிழ்ப் பாக்களிற் பாடித் தருமாறு வேண்டியதற்கிணங்கி, ‘கோபால விம்சதி’; “ஸ்ரீஸ்துதி”; “ஸ்ரீபகவத் த்யாந ஸோபாநம்” என்ற இம்மூன்று தோத்திர நூல்களையும் [தோத்திரமாலை (திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்க வெளியீடு 7)யிலுள்ளன] முன்னரே தமிழ் செய்து தந்த இத்திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத் தலைவரும், அட்வொகேட்டும், இச்சங்க வெளியீடான “வகுளமாலை”ப் பத்திராசிரியருமாகிய ஸ்ரீமான் ஆர். கேசவய்யங்காரவர்கள் ஆங்கு வேண்டிக் கொண்டதற்கேற்ப தற்போது, “தயாசதகம்” எனும் தூப்புற்குலமணியின் தோத்திரத்தை செய்ய தமிழ்ப் பாக்களாகப் பாடி நற்றமிழுலகம் நலனுறுமாறு செய்த சீர்மைக்கு அவர்கட்கு எமது நன்றி என்றும் உரியதாகுக. அந்நூலே “திருவருண்மாலை” என்ற திருநாமத்துடன் இச்சங்க வெளியீடாக பிரசுரிக்கலாயிற்று. விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்தவாரியனென்றியம்ப நின்ற அருடருமாரண தேசிகனே திருவருட்டத்துவத்தைச் செப்ப வல்லவர்.
தன்பெறும் பொலிவு சால்வே தாந்ததே சிகப தத்தில்
நன்பிமா வேங்க டக்கோ ணிறுத்தியே மதலை யென்னை
அன்பெனும் நிறைந ரம்பின் தந்தியென் றிசைத்துத் தானே
இன்பருட் சதக மீதொன் றின்கவி பாடி னானே. (104)
என்பதை நன்கு நோக்குக. பேசுபய வேதாந்த தேசிகபதத்தில் பிறரெவரும் யாமறிந்தமட்டில் நிறுத்தப்பெறவில்லை என்பதோர் பேருண்மை. தமிழ்ப் பேரறிஞரும் இதனை நன்கு அறிவர்.
“பதிகம் பதிகமதாக விசைத்தனனே” என்றார் திருவழுந்தூர் வள்ளல். “அருள் கொண்டாடும் அடியவர்” என்ற ஸ்ரீ மதுர கவிகளின் திருவாக்கை முற்றும் மெய்ப்பிக்கவே வேங்கட வெற்பென விளங்கும் வேத வெற்பனனின் திருவருளை விளக்குமுகத்தான் நம் வேங்கடநாதன் “தயாசதகம்” பாடினர் என்ப. இவரது அவா இத்துடன் நில்லாது ஆழ்வார் விஷயமாகத் திரும்புகையில் ஸ்ரீபாதுக மாமறையாயிரமாக விரிந்தது. அருண்மிகு சடகோபன் அகாரவாச்யன் விஷயமாக ஆயிரம் பாசுரம் பாடினான். சடகோபத் தொண்டன் என்றேதான் அழைக்கப் பெறவேண்டுமென்ற பேரவாவுடைய தூப்புற்கோன் மகிழ்மாறன் விஷயமாக ஆயிரம் கவி யாத்தனர். ஈண்டும் நூலிற் காட்டிய துறைகளெல்லாந் தண்டமிழ்த் துறைகளே. இப்பெரிய நூலும் விரைவில் தமிழில் வெளிவரும். அதிலும் ஆங்குள்ள சித்திரக் கவிகளனைத்தும் “சித்திரமாலை”யாக வருவதை நற்றமிழர் நன்கேற்று நலம்பெறுவாராக.
மேற்கூறிய “தயாசதகம்'” , '”ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்” இவற்றின் விரிவுரை பின்னர் வெளியாகும். செந்தமிழபிவிருத்திக்காக முயன்று வரும் ஸ்ரீமான் கேசவய்யங்காரவர்கட்குத் திருவேங்கடமுடையான் ஸர்வ மங்களத்தையும் நல்குவானாக. தமிழ்த் தலைவரான பேயாழ்வார் திருவவதாரத் திருப்பதியான திருமயிலையில் திருவேங்கடமுடையானும், நம்மாழ்வாரால் நகர்காட்டு துறையில் அமைக்கப் பெற்றுள்ள அம்பூந்தேனிளஞ் சோலை யெனுந் தூப்புல் மாநகரிற் பேரருளாளனும், திருவுள்ளம் உகக்குமாறு செந்தமிழ் தூப்புல் திருவேங்கடமுடையான் அருளிய ஸ்ரீதேசிக ஸ்ரீபாதுகா ஸஹஸ்ர மஹோத்ஸவங்களைச் சிறப்பாக நடத்தி வைத்த சீரோங்கு வள்ளலாரான ஸ்ரீ தேசிக தர்சந ரத்ந தீபம் ஸ்ரீமான் வி.வி. ஸ்ரீநிவாஸய்யங்காரவர்கள் அத்திருமயிலையிலேயே இத்திருவருண்மாலைத் திருவரங்கேற்று விழாவைத் திவ்யதம்பதிகள் திருவுள்ளமுகக்குமாறு நடத்தி வைத்தது இம்மாலைக்கோர்தனிச்சிறப்பு.அத்தேசிக பக்தசிகாமணிக்குத் திருவேங்கடமுடையான் திருவருள் மேன்மேலும் சுரப்பானாக. இம்மாலைக்குச் சிறப்புப் பாயிரம் பாடித் தந்த ஸ்ரீ பண்டித சிந்தாமணி கோபாலாசாரியார் அவர்கட்கும் நன்றி பாராட்டுகின்றனம். வாழ்க சந்தமிகு தமிழ். வாழ்க தூப்புல் வள்ளல். பொலிக திருவருள்.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
வேங்கடமால் திருவருளை வேதாந்த தேசிகனார்
ஓங்கு புகழ்மொழியா லோதியநூற் – பாங்குதெரி
இன்பந் திகழ்தமிழி னின்னிசையிற் கேசவனே
அன்பர்க் களித்தான் கவி.
ஸ்ரீரங்கவிலாசம் ப.ரெ.திருமலை அய்யங்கார்
திருவல்லிக்கேணி காரியதரிசி.
14-11-‘42.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக